Skip to content

ராஜம் கிருஷ்ணன் – அஞ்சலி

by மேல் ஒக்ரோபர் 24, 2014

rajam_krishnanஎழுத்தாளர்களுக்கு அஞ்சலி என்றால் அவர்கள் எழுத்தைப் பற்றித்தான் சொல்லியாக வேண்டும் என்று கருதுபவன் நான். ராஜம் கிருஷ்ணன் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும், இது வரை படிக்காத, எழுத்தாளர்களில் ஒருவர். குறிப்பாக அவரது பாதையில் படிந்த அடிகள் புத்தகம் கிடைக்குமா என்று தேடிய காலம் ஒன்றுண்டு. (இப்போது வீட்டில் இடம் உருவாக்காமல் புத்தகங்கள் வாங்குவதில்லை என்று ஒரு phase).

சம்பல் கொள்ளைக்காரர்கள், நீலகிரியின் பழங்குடிகள் (குறிஞ்சித் தேன்?) என்று பல பின்புலங்களைப் பற்றி கள ஆய்வு செய்து எழுதியவர் என்று புகழப்படுகிறார். வேருக்கு நீர் புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. ஜெயமோகன் “பாதையில் படிந்த அடிகள்” புத்தகத்தை இரண்டாம் வரிசை இலக்கிய நாவலாகவும், குறிஞ்சித்தேன் மற்றும் வளைக்கரம் ஆகியவற்றை முக்கிய வணிக நாவல்களாகவும் தனது seminal பட்டியலில் குறிப்பிடுகிறார். எஸ்ரா கரிப்பு மணிகள் நாவலை தமிழின் 100 முக்கிய நாவல்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். “பெண்” எழுத்தாளர் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாதவர் என்று நினைக்கிறேன்.

அவருடைய கடைசி காலம் பொருளாதார ரீதியாகவும் வேண்டியவர் யாரும் இல்லாமலும் கஷ்டத்தில் கழிந்தது என்று தெரிகிறது. எங்கள் தலைமுறை எல்லாம் வயதான காலத்தில் ததிங்கிணத்தோம்தான் என்று தோன்றுகிறது.

இணையத்தில் கிடைத்த அவரது சிறுகதை ஒன்று இங்கே. இன்னொன்று இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள் பக்கம்

Advertisements

From → Obituaries

3 பின்னூட்டங்கள்
  1. சரித்திர கதைகளுக்குத் தான் களஆய்வு செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருகிறோம்.
    இவர் சமூகக் கதைகளுக்கும் களஆய்வு செய்தவர். அந்தளவுக்கு எழுதுகிற விஷயம்
    துல்லியமாகவும், தான் நேரடியாக அறிந்ததை மட்டுமே எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர். தனித்துத் தெரியும் எழுத்துப் போராளி. அவர் மறைவுக்கு அஞ்சலிகள்.

    Like

  2. துயர் பகிருகிறேன்

    Like

  3. ஜீவி, ராஜம் கிருஷ்ணன் கதைகளைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா? எழுதவில்லை என்றாலும் படித்த நினைவிருக்குமே, எங்களுக்கும் சொல்லலாமே!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: