ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் – அப்டீன்னா?

வெண்பாவிற் புகழேந்தி என்று புகழ் பெற்றவரும், நளவெண்பாவை எழுதியவருமான புகழேந்திப் புலவருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நடுவே பலத்த போட்டி இருந்தது என்று கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு. அந்தப் போட்டியிலிருந்து முளைத்ததாம் இந்த “பழமொழி”.

சுந்தரராமன் தன் தளத்தில் அசோகமித்ரன் கட்டுரை ஒன்றை digitize செய்து பதித்திருக்கிறார். அதிலிருந்து:

சீதனமாக சோழ அரசியுடன் அனுப்பப்பட்ட புகழேந்தியை சொல்வார் பேச்சு கேட்டு சோழ மன்னன் சிறையில் அடைத்திருக்கிறான். இதை அறிந்த அரசி கோபத்துடன் தன் அறைக்குள் தாளிட்டுக் கொள்கிறாள்.
அவள் கோபத்தைத் தணிக்க அரசன் ஒட்டக்கூத்தரை அனுப்புகிறான். அவர் பாடிய செய்யுள் அரசிக்கு இன்னும் கோபமூட்டிவிடுகிறது. “என் இடை பற்றியும் அழகு பற்றியும் பாட இவன் யார்? ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!”

asokamithranஅசோகமித்ரன் இந்தக் கதையை வினோத ரசமஞ்சரி என்ற புத்தகத்தில் படித்ததாகக் குறிப்பிடுகிறார். அவ்வையார், கம்பன், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகம், பொய்யாமொழிப் புலவர், ஏகம்பவாணன் பற்றிய பல கர்ணபரம்பரைக் கதைகள் அடங்கிய தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுரங்கம் என்று இந்தப் புத்தகத்தைப் புகழ்கிறார். போதாக்குறைக்கு பரமார்த்த குரு கதை வேறு இருக்கிறதாம். 1891-இல் நிச்சயமாக ஒரு பதிப்பு வெளியாகி இருக்கிறதாம். அதற்கு முன்பும் பதிப்புகள் வந்திருக்கலாம் என்று அசோகமித்ரன் யூகிக்கிறார். (வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார் என்று இந்தப் பதிவில் படித்தேன்.) சமீப காலத்தில் விஜயா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் நினைவு கூர்கிறார்.

அசோகமித்ரன் குறிப்பிடும் பிற இரு புத்தகங்களும் (வாதூலன் எழுதிய “கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்“, சுந்தரராமன் எழுதிய “ராகசிந்தாமணி“) கூட சுவாரசியமானவையாகத் தெரிகின்றன.

என்றாவது தேடிப் பிடித்து இதையெல்லாம் வாங்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கர்ணபரம்பரைக் கதைகள்

8 thoughts on “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் – அப்டீன்னா?

 1. வினோத ரசமஞ்சரி பழைய பதிப்பு (தொட்டால் உதிர்ந்து விடும்) என்னிடம் உள்ளது. ஆனால் அதில் பரமார்த்த குரு கதையைப் படித்ததாக ஞாபகம் இல்லையே!

  அவிவேக பரிபூரண கதை என்பதுதான் பரமார்த்த குரு கதையாக மாறியிருக்கிறது போலும், பிற்காலத்தில்.

  Like

  1. ரமணன், ரொம்ப நாள் கழித்து உங்களை இந்தப் பக்கம் பார்ப்பது சந்தோஷம்! கொலையுதிர்காலம் படித்திருந்தாலும் இதெல்லாம் நினைவில்லை. 🙂 அவிவேக பரிபூரண கதையா? கேள்விப்பட்டதே இல்லை!

   Like

 2. அதில் “மகா பண்டிதனை ஒரு சிறு பிள்ளை வென்ற கதை” என்ற ஒரு கதை ஞாபகம் இருக்கிறது. தமிழறியும் பெருமாள் கதை என்பதும் சிறப்பாக இருக்கும்.

  அதில் வரும் வசனங்கள்..

  மண் பூனை எலியைப் பிடிக்க முடியுமா?

  உமது தாய் புத்திரவதி அல்ல; புத்திரவதி என்று மறுத்துவிடும் பார்க்கலாம்.

  வித்வ ஜன கோலாகலன்… வித்வ ஜன கோலாகலன்..

  மேற்கண்ட வடிகளை சுஜாதா கொலையுதிர்காலத்தில் எடுத்தாண்டிருப்பார், வசந்தைப் பயப்படுத்தும் விஷயமாக. வெற்றிடத்தில் எழும்பும் அமானுஷ்யக் குரலாக.

  தொடர்ந்து எழுதுங்கள் சார்.

  Like

 3. வினோத ரச மஞ்சரி நூலை நான் என் பள்ளிப்பருவங்களில் படித்திருக்கிறேன். அதில் மேலே திரு. ரமணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி ““மகா பண்டிதனை ஒரு சிறு பிள்ளை வென்ற கதை” மிகவும் அருமையான கதை. அதில் சிறு பிள்ளையாக வருபவர் வைணவப் பெரியார் யமுனைத்துறைவர் என்றும் யாமுனாசாரியார் என்றும் அழைக்கப்பட்ட மகான் ஆவார்; இந்த சம்பவத்திற்குப்பிறகு இவர் “ஆளவந்தார்” என்று பட்டம் பெற்றார்.
  ஆர்.தர்மராஜா, கோவை

  Like

  1. பல பதிப்புகள் வந்திருக்கின்றன, உங்களிடம் இருப்பது எது என்று தெரியவில்லையே? இணையத்தில் கிடைக்கும் பிரதியின் பதிப்பாண்டு 1958 – https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY0jZx

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.