பாரதியார் சிறுகதை – “ஆறில் ஒரு பங்கு”

bharathiபாரதியார் எழுதிய சிறுகதை ஒன்று – ஆறில் ஒரு பங்கு – பழைய சொல்வனம் இதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. உலக மகா சிறுகதைகளில் வராதுதான், இருந்தாலும் படிக்கக் கூடிய சிறுகதைதான். நேரடியாகச் சொல்லப்படும், நுணுக்கங்கள் இல்லாத முன்னோடி சிறுகதை. சரளமான, ரசிக்கும்படியான நடை. கல்கியின் எந்தச் சிறுகதையுடனும் ஒப்பிடக் கூடிய தரத்தில் இருக்கிறது. நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட சிறுகதை என்பது இதற்கு ஒரு ஸ்பெஷல் கவர்ச்சியைத் தருகிறது.

இறந்துபோன காதலி உயிருடன் இருக்கலாம் என்று நாயகன் அறியும்போது அவன் உணர்ச்சிகளை

ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?

என்று சித்தரிக்கிறார். பிரமாதம்!

சிறுகதையில் நான் கவனித்த இரு விஷயங்கள்:

இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்

என்று எழுதுகிறார். பள்ளர், பறையர் எல்லோரும் பஞ்சமர் அல்ல, சூத்திரர் கூட அல்ல, வைசியர்! கதையிலும் இதை விளக்குகிறார் –

தென்நாட்டைப் போலவே, வட நாட்டிலும், இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும்.

கதையின் நடுவில் ஒரு வாக்கியம் –

நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும்.

காஞ்சி சங்கர மடம் ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடம் அல்ல, சிருங்கேரியின் துணை மடம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி காலத்தில் தனி மடமாகப் பரிணமித்தது, ஆனாலும் இப்போது அந்த மடம் ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடம்தான் என்று propaganda நடக்கிறது என்பதை கூட்டாஞ்சோறு பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சந்திரசேகரேந்திர சரஸ்வதி தலையெடுப்பதற்கு முன்னால் வாழ்ந்த பாரதியும் சங்கர மடத்துக்கு உதாரணமாய் காஞ்சி மடத்தைக் குறிப்பிடாமல் சிருங்கேரி மடத்தைக் குறிப்பிடுவது – Note the point, your honor!


தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.