Skip to content

தமிழறிஞர் அறிமுகம் 8 – வி. கனகசபை பிள்ளை

by மேல் திசெம்பர் 17, 2014

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார், எனக்கு ஒரிஜினல் தமிழ்க் குறிப்புகளை அனுப்பி இருக்கிறார்.

வி.கனகசபை பிள்ளை

பிறப்பு:25-05-1855, இறப்பு:21-02-1906

kanakasabai_pillaiபத்துப்பாட்டு, புறநானூறு மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மூல ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து உ.வே.சா அவர்களின் அச்சுப்பணிக்கு கொடுத்துதவியவர். கலிங்கத்துப்பரணி, களவழி நாற்பது, விக்கிரம சோழன் உலா போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர், விஸ்வநாதன் கனகசபை பிள்ளை.

யாழ்பாணத்தில் மல்லாகம் எனும் ஊர். விரிந்த மார்பைக் கொண்ட மல்லர்கள் நிறைந்த ஊராக இருந்த காரணத்தால் அவ்வூருக்கு அப்பெயர் வர காரணம் ஆயிற்று. அங்கு வசித்து வந்தவர் விஸ்வநாதப் பிள்ளை எனும் தமிழ் பண்டிதர். அக்காலத்தில் பெர்சிவல் மற்றும் வின்ஸ்லோ ஆகிய பாதிரிமார்கள் தமிழ் அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளையை சென்னைக்கு படிக்க அனுப்பிய போது இவரையும் உடன் அனுப்பி வைத்தனர். அவ்வாறாக இங்கு வந்த விசுவநாதப் பிள்ளை பி.ஏ படித்தபின் இங்கேயே அரசு உத்தியோகமும் கிடைக்கப் பெற்று சென்னை கோமளேசுவரன் பேட்டையில் நிரந்தரமாக வசிக்க துவங்கினார். அவரது மகன் கனகசபை பிள்ளை. சிறு வயது முதல் தந்தையாரிடமே தமிழ் கற்று வளர்ந்த கனகசபை பின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று தனது பி.ஏ. படிப்பையும் தொடர்ந்து சட்டப் படிப்பையும் முடித்தார். மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1876ல் செல்லம்மாள் எனும் உறவுக்காரப் பெண்ணை மனைவியாக்கிக் கொண்டார். அக்காலத்தில் அவருக்கு இன்னொரு உறவும் கிட்டியது. அவர் சுப்ரமணிய ஐயர். அவர் மூலம் தமிழ் ஆர்வம் மீண்டும் கிளைத்தது. பழைய ஓலைச்சுவடிகளில் காணப்படும் பழைய இலக்கியங்களை தேடி ஓடலானார். இப்பணிக்கு அவர் பார்த்த வழக்கறிஞர் தொழில் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தபால்துறையில் அதிகாரியாகப் பதவியில் சேர்ந்தார். (முதல் வழக்கை வென்ற பிறகு தோற்றவர்களும் அவர்களது வக்கீலும் இவரை ஏசியதைப் பொறுக்க முடியாமல் வக்கீல் தொழிலை விட்டுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.) இப்பதவியில் பணிபுரிந்தபடி தன் தமிழ் சேவையை உற்சாகமாகத் துவங்கினார்.

ஊர் ஊராக ஏட்டு சுவடிகளை தேடி அலைந்தார். கிடைத்த சுவடிகளை எழுத்தில் படிவமாக்குவதெற்கென்றே தனியாக அப்பாவுப் பிள்ளை என்பவரை பணியில் அமர்த்திக்கொண்டார். கிட்டதட்ட இருபது வருடங்கள் அப்பாவு கனகசபை அவர்களுடனிருந்து சுவடிகளை பிரதி எடுக்கும் பெரும்பணி செய்தார்.

இப்படி தான் தேடி கண்டெடுத்த அரிய பொக்கிஷங்களை பிறர் கேட்டால் வேறு யாராக இருந்தாலும் தரத் தயங்குவர். ஆனால் கனகசபை பிள்ளை தன் முன் உ.வே.சா. அவர்கள் வந்து தான் சேகரித்த அரிய பொக்கிஷங்களை தன்னிடம் தருமாறு கேட்டதும் மறு பேச்சில்லாமல் எடுத்து கொடுத்தார். அன்று மட்டும் அவர் அப்படி கொடுத்திராவிட்டால் இன்று நமக்கு சிலப்பதிகாரமும் பத்துப்பாட்டும் புறநானூறும் கிடைத்திருக்குமா என்பது ஐயப்பாடே.

தன் 29ம் வயதில் தொடர்ந்து தன் தந்தை தாய் இரு குழந்தைகள் என அடுத்தடுத்து மரணங்களை சந்தித்த போதும் மனம் தளராமல் தொடர்ந்து தமிழ்ப் பணியில் ஈடுபட்டார். ஆங்கிலத்தில் புலமை மிக்க கனகசபை அவர்கள் Madras Review எனும் இதழில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடராக எழுதினார். தமிழர் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம். வாழ்க்கை முறை குறித்த மிக முக்கியமான ஆவணமாக அன்றைய காலத்தில் ஏற்கப்பட்டு பலரும் அவரை பாராட்டினர். இந்தக் கட்டுரைகள் பின்னாளில் The Tamils Eighteen Hundred Years Ago என்று தொகுக்கப்பட்டன. இன்றும் அத்தொகுப்பு தன் பெருமை குன்றாமல் தமிழர்தம் வரலாற்றுக்கு வளம் சேர்ந்த்து வருகிறது.

1905ல் மதுரைத் தமிழ் சங்கம் அவர்களது மாநாட்டுக்கு இவ்வறிஞரை தலைமை தாங்க அழைப்பு விடுத்து கவுரவித்தது.

ஆர்வியின் குறிப்பு: கனகசபைப் பிள்ளை எழுதிய புத்தகங்களில் முக்கியமானது The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services இதை மறுபதிப்பாக 1970களில் வெளியிட்டிருக்கின்றனர். இதன் மொழிபெயர்ப்பு முழுமையாக இணையத்தில் கிடைக்கிறது. மொழிபெயர்த்தவர் கா. அப்பாத்துரை.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விக்கி குறிப்பு
The Tamils Eighteen Hundred Years Ago புத்தகத்தின் மொழிபெயர்ப்பு

Advertisements

From → Tamil Scholars

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: