டாகுமெண்டரி – ஒரு தென்னிந்திய கிராமம்

புத்தகங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு பதிவு.

அந்தக் கால இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் எடுத்த ஒரு ஆவணத் திரைப்படம் கண்ணில் பட்டது. பதினைந்து நிமிஷம்தான் இருக்கும். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இந்தத் திரைப்படம் உண்மையிலேயே ஆவணத் திரைப்படம்தானா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். மதுரை வீரன் நாடகத்தில் (கூத்து என்று சொல்ல முடியவில்லை) ஆடுபவர்கள் (நடிப்பவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை) லலிதா-பத்மினி என்று நினைக்கிறேன். லலிதாவும் பத்மினியும் இளைஞிகளாகத் தோற்றம் அளிக்கிறார்கள். நாற்பதுகளின் இறுதியிலோ ஐம்பதுகளின் ஆரம்பத்திலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது இருவருமே பெரிய சினிமா/நடன நட்சத்திரங்கள். அவ்வளவு வளர்ந்த நிலையில் ஒரு கிராமத்தில் நாடகம் ஆடினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.

எப்படி இருந்தால் என்ன? நன்றாக இருக்கிறது, பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

2 thoughts on “டாகுமெண்டரி – ஒரு தென்னிந்திய கிராமம்

  1. //மதுரை வீரன் நாடகத்தில் (கூத்து என்று சொல்ல முடியவில்லை) ஆடுபவர்கள் (நடிப்பவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை) லலிதா-பத்மினி என்று நினைக்கிறேன். லலிதாவும் பத்மினியும் இளைஞிகளாகத் தோற்றம் அளிக்கிறார்கள். நாற்பதுகளின் இறுதியிலோ ஐம்பதுகளின் ஆரம்பத்திலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது இருவருமே பெரிய சினிமா/நடன நட்சத்திரங்கள். அவ்வளவு வளர்ந்த நிலையில் ஒரு கிராமத்தில் நாடகம் ஆடினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.//

    ஆர்.வி.

    இது கிராமத்து நாடகமோ தெருக்கூத்தோ அல்ல. எலீஸ் ஆர்.டங்கன் இயக்கிய “பொன்முடி” என்ற படத்தில் வரும் ஓரு காட்சி.

    இங்கே பார்க்கவும் : https://www.youtube.com/watch?v=pklNZ_kbrQw

    இது மட்டுமல்ல; இந்த வீடியோவில் வரும் பல காட்சிகள் அந்தக் காலத் திரைப்படங்களில் ’பிட் பிட்’ ஆக இடம் பெற்றுள்ளன. அநேகமாக டங்கன் இயக்கிய திரைப்படங்களின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகளை ஒன்றிணைத்து, மேலும் சிலவற்றைச் சேர்த்து இந்த வீடியோவை உருவாக்கி இருக்கக் கூடும்.

    நன்றி

    Like

    1. அர்விந்த் ஸ்வாமிநாதன், என்னவோ நல்ல டாகுமெண்டரி என்று நினைத்தேன், இப்படி ஆகிவிட்டதே!

      பொன்முடி இணைப்புக்கு நன்றி!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.