சில நேரங்கள் சில மனிதர்கள் திரைப்படத்துக்காக அவரே எழுதிய பாடல் – அவரை நன்றாகவே பிரதிபலிக்கிறது.
பாடல் வரிகள்:
கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோகண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ?
கூடி இருப்பதுண்டோ?கண்டதைச் சொல்லுகிறேன்…
வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ?
தாங்கிட நாதியுண்டோ?கண்டதைச் சொல்லுகிறேன்…
கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டுச் சொல்லுகிறேன்
கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டுச் சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ?
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ?கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ…ஓ..ஓ?
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
LikeLike