பொருளடக்கத்திற்கு தாவுக

இந்திய நாடகங்கள்

by மேல் ஏப்ரல் 19, 2015

திட்டமிடாமலே நாடகங்கள், ஜெயகாந்தன் என்று இரண்டு தீம்களாக சமீபத்தியப் பதிவுகள் அமைந்துவிட்டன. (ஜெயகாந்தன் பதிவுகள் முடியவில்லை, இன்னும் ஓரிரண்டு பதிவுகள் வரும்.) அடுத்த தீமாக சில பழைய+சமீபத்திய ஜெயமோகன் பதிவுகளை வைத்து எழுதத் திட்டம். (சில பழைய பதிவுகள் “என்னது? இந்திரா காந்தி செத்துட்டாரா!” அளவுக்கு அறதப்பழசு.)

jeyamohanநாடகங்கள் பற்றி என் பதிவுகளைப் (பரிந்துரைகள், நானும் நாடகங்களும், மேற்குலக நாடகங்கள், தமிழ் நாடகங்கள்) படித்துவிட்டு ஜெயமோகனும் நாடகங்களைப் பற்றி ஒரு கோடி காட்டி இருக்கிறார். அந்தப் பதிவைப் படிக்கும்போது என் வாசிப்பு எத்தனை மேலோட்டமானது என்று புரிகிறது.

குறிப்பாக மலையாள நாடக உலகைப் பற்றி அவர் எழுதி இருந்தது எனக்கு கண்திறப்பு. வங்காள, மராத்தி, கன்னட, ஏன் ஹிந்தி நாடக உலகைப் பற்றிக் கூட ஓரளவு தெரிந்திருந்தது. சில பழைய சமஸ்கிருத நாடகங்களைக் கூடப் படித்திருக்கிறேன். ஆனால் மலையாளம் என்றால் சுத்தம். அவர் சொல்லி இருக்கும் நாடகங்களைத் தேட வேண்டும்.

என் போன்ற சோம்பேறிகளுக்காக அவர் குறிப்பிட்ட நாடகங்களின் பட்டியல் கீழே:

 • இந்திரா பார்த்தசாரதி – மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப், ராமானுஜர்
 • அம்பை: பயங்கள்
 • எஸ்.எம்.ஏ. ராம்: ஆபுத்திரன் கதை (இது என்னைக் கவரவில்லை)
 • பிரபஞ்சன்: முட்டை
 • ந. முத்துசாமி: நாற்காலிக்காரர் (இதை நடிக்க வேண்டும் என்றே கருதுகிறேன்)
 • எஸ். ராமகிருஷ்ணன்: அரவான்
 • தாகூர்: விசர்ஜனம், சித்ராங்கதா – ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே
 • குவெம்பு: பெரகெலெ கொரல் (நான் குவெம்புவின் “சூத்ர தபஸ்வி” மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் இப்போது சரியாக நினைவில்லை)
 • ஹெச்.எஸ். சிவப்பிரகாஷ்: மாதவி
 • சி.என். ஸ்ரீகண்டன் நாயர்: காஞ்சனசீதா, லங்காலட்சுமி
 • Chicago: (சிறந்த திரைப்படம்)
 • Guess Who Is Coming to Dinnerஸ்பென்சர் ட்ரேசி, சிட்னி பாய்டியர், காதரின் ஹெப்பர்ன் நடித்த சிறந்த திரைப்படம் பெர்னி மாக் நடித்து இந்தத் திரைப்படத்தின் உல்டா ஒன்றும் – Guess Who – வந்திருக்கிறது. (கறுப்பினப் பெண், வெள்ளை நிற காதலனாக ஆஷ்டன் குட்சர், அப்பாவாக பெர்னி மாக்)

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

From → Plays

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: