Skip to content

மொழிபெயர்ப்பாளர்கள்

by மேல் மே 12, 2015

கௌரி, மதுரம் தளம் என்று மொழிபெயர்ப்புகளைப் பற்றி இரண்டு பதிவு வந்துவிட்டது. மொழிபெயர்ப்பாளர்களோடு இந்த தீமை முடித்துக் கொள்கிறேன்.

kaa_sri_sriசிறு வயதில் ஒரு காலகட்டத்தில் தமிழில் எதுவும் எனக்குப் படிக்கும்படி இல்லை. வாண்டு மாமாவைக் கடந்திருந்தேன். கையில் கிடைத்த அத்தனை சாண்டில்யன் புத்தகங்களையும் முடித்திருந்தேன். வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் போரடித்தன. அப்போது அத்தி பூத்த மாதிரி ஒரு பேரிலக்கியம் கையில் கிடைத்தது – யயாதி. காண்டேகரின் பெயர் அளவுக்கே அதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் பெயரும் மனதில் பதிந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்ப்புகளை எங்கள் கிராம நூலகத்தில் தேட ஆரம்பித்தேன்.

tha_naa_kumarasamiஇத்தனை வருஷங்கள் கழித்து அன்றைய மொழிபெயர்ப்பாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். மராத்திக்கு கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்றால் த.நா. குமாரசாமியோ சேனாபதியோ இல்லை இருவருமோ மொழிபெயர்த்த நூல்கள் மூலம்தான் எனக்கு வங்க இலக்கியம் அறிமுகமானது. பத்து பதினோரு வயது வாக்கில் பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததை – அதுவும் பவானந்தன், சாந்தானந்தன் மாதிரி பேர்களே exotic ஆக இருந்தது இன்னும் மறக்கவில்லை. சரஸ்வதி ராம்நாத் மூலம்தான் ப்ரேம்சந்தை முதன்முதலாகப் படித்தேன் என்று நினைவு.saraswati_ramnath உலக இலக்கியங்கள் சிலவற்றை – டிக்கன்ஸ், ஸ்டீவன்சன், ஜார்ஜ் எலியட், மார்க் ட்வெய்ன், செகாவ், கார்க்கி எல்லாரையும் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் முதன்முதலாகப் படித்தேன். அந்த வயதில் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள் அபூர்வமாகவே என்னைக் கவர்ந்தன. என்றாலும் இன்று மொழிபெயர்த்தவர்கள் யாரென்று சுத்தமாக நினைவில்லை என்பதை கொஞ்சம் இழிவுணர்ச்சியோடு ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது.

pe_naa_appusamiமொழிபெயர்ப்புக்கான குறுகிய காலத் தேவையும் உண்டு. Topical நிகழ்ச்சிகளை, புத்தகங்களை குறிப்பாக பிற அறிவுத்துறைகளுக்கான அறிமுகங்களை மொழிபெயர்த்தால் அவற்றுக்கான நீண்ட காலத் தேவை இல்லாமல் போகலாம். பெ.நா. அப்புசாமி மொழிபெயர்த்தாரா இல்லை அவரே எழுதினாரா என்று தெரியவில்லை, அவர்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவியலை அறிமுகம் செய்தார். இன்றையத் தலைமுறையினருக்கு அவர் பேர் கூடத் தெரிய வாய்ப்பில்லை. குறுகிய காலத்தேவை எவ்வளவு விரைவாக மறக்கப்படும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக இருக்கிறார். என்றாலும் ஒரு நூறு கிராமத்து சிறுவர்களுக்காவது அவர் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டாரா? என்றென்றும் என் நன்றிக்குரியவர்.

பாரதி கூட நிறைய மொழிபெயர்த்திருக்கிறாராம். அனேகமாக செய்திகளாக இருக்க வேண்டும். வெ. சாமிநாத சர்மாவும் humanities துறைகளில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.

அப்போதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்புகள் எனக்கு மிகக் குறைவு. சிறு வயதில் ஹிந்து பத்திரிகையில் கிரிக்கெட் மற்றும் செஸ் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பிப் படித்ததாக நினைவில்லை. ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முடியுமா என்று ஒரு பயமும் இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் சுலபமாகக் கிடைத்தன, சரளமாகப் படிக்கவும் முடிந்தது. தமிழ் மொழிபெயர்ப்புகளின் தேவை இல்லாமலே போயிற்று. இன்று சரளமாக பீட்டர் விடும் இளைஞர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகளும், மொழிபெயர்ப்புகளின் குறுகிய காலத் தேவையும் இல்லையோ என்று கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. ஆனால் பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துப் படிப்பதுதான் சுகம். கன்னடமும் காஷ்மீரமும் மராத்தியும் மணிபுரியும் ஆங்கிலத்தை விட தமிழுக்கு நெருக்கமானவை. மூலத்தின் உணர்ச்சிகளை தமிழில் கொண்டு வருவதுதான் சுலபம்.

kulacchal_mu_yusufபாவண்ணன் (கன்னடத்திலிருந்து தமிழ், குறிப்பாக பைரப்பாவின் பர்வா), குளச்சல் மு. யூசுஃப் (மலையாளத்திலிருந்து தமிழ்), கௌரி கிருபானந்தன் (தெலுகிலிருந்து தமிழ், தமிழிலிருந்து தெலுகு). உலக மொழிகளில் நம்ம m_a_susilaசுசீலா மேடம் ரஷியனிலிருந்து தமிழ் (டோஸ்டோவ்ஸ்கியின் Idiot, Crime and Punishment). இவர்கள் நாலு பேரும் எனக்குத் தெரிந்து இந்தத் துறையில் பிரமாதப்படுத்துகிறார்கள். இன்றைய கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் குமாரசாமியும் சரஸ்வதி ராம்நாத்தும் இவர்கள்தான் என்று நினைக்கிறேன். வேறு யாராவது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தமிழுக்கு பிற மொழி ஆக்கங்களைக் கொண்டு வருவது ஒரு பக்கம் என்றால் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு கொண்டு போவது இன்னொரு பக்கம். பொதுவாக நான் தமிழின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்துவிடுவேன். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ்தான் இன்னும் வசதி, விருப்பம். ஆனால் என்றாவாது ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்புகளைப் படிக்க வேண்டும். அவர் ஒரு சஹிருதயராக இருப்பார் என்று தோன்றுகிறது.

தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்ப்பதால் எனக்கு இவற்றின் தரம் பற்றி அதிகம் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் சில பேர்கள் மட்டுமே தெரியும். ஜி.யூ. போப் மாதிரி வெள்ளைக்காரர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். கமில் சுவெலபில் தொ.மு.சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” நாவலை செக்கோஸ்லோவகியன் மொழியில் மொழிபெயர்த்தது ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றதாம். ரகுநாதனின் மொத்தத் தமிழ் output-உம் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றிருக்குமா என்று தெரியவில்லை. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் என்ற பேரையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மதுரம் தளம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வேறு?

நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் யாரென்று தெரிந்தால் நண்பர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம். உங்களிடமிருந்து ஏதாவது பரிந்துரைகள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள்

Advertisements

From → Translations

3 பின்னூட்டங்கள்
 1. G.Kuppuswami, Nanjundan are also doing good work.

  Like

 2. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  Like

 3. Raj Chandra permalink

  Su. Krishnamurthy is missing in this list. His translations of Bengali works are worth to consider.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: