Skip to content

எம்எஸ்வி அஞ்சலி – ராணிமைந்தன் எழுதிய “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.”

by மேல் ஜூலை 31, 2015

எம்எஸ்வி என் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர். அவருக்கு கொஞ்சம் தாமதமான அஞ்சலியாக இந்த பழைய பதிவை மீள்பதிக்கிறேன்.

எனக்குத் தெரிந்த இசை சினிமாப் பாட்டுதான். அதுவும் பழைய தமிழ் பாட்டு என்றால் உயிர். என் பதின்ம வயதுகளில் தனியாக மொட்டை மாடியில் ஒரு நாப்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னை ஒன்று ரேடியோ ஸ்டேஷனில் இரவு பத்திலிருந்து பதினொன்று வரைக்கும் பழைய தமிழ் சினிமா பாட்டு கேட்டது இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சுதர்சனம், அப்போது உச்சிக்குப் போய்க் கொண்டிருந்த இளையராஜா எல்லாரையும் ரசித்துக் கேட்டாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்பினேஷன்தான் எனக்கு first among several equals. அதிலும் எம்எஸ்விதான் ட்யூன், ஆர்க்கெஸ்ட்ரேஷன் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று தெரியவந்தபோது எம்எஸ்வி ரொம்பவும் பிடித்துவிட்டது. சின்ன வயதில் ஒன்று மனதில் அழுந்திப் பதிந்துவிட்டால் அது மாறுவது கஷ்டம். இளையராஜா, பின்னால் ரஹ்மான் எல்லாரும் மேதைகள்தான், ஆனால் என் மனதில் எம்எஸ்விக்குத்தான் முதல் இடம். ராணிமைந்தன் இந்தப் புத்தகத்தில் அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை, அவர் பட்ட கஷ்டங்கள், அவருக்கு பாடல் எழுதும் கவிஞர்கள், நடிப்புலக ஸ்டார்கள், இயக்குனர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாருடனும் இருந்த உறவு, சுவையான சம்பவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார். இசையைப் பற்றிய டெக்னிகல் விஷயங்களோ, இல்லை குறை நிறை இரண்டையும் பார்க்கக் கூடிய வாழ்க்கை வரலாறோ இல்லை. எம்எஸ்வி இசைப் பாரம்பரியம் எதுவும் இல்லாதவர். ஆனால் சின்ன வயதிலேயே இசைப் பைத்தியம் பிடித்துவிட்டது. சினிமாப் பாட்டு கேட்பதற்காக டெண்டு கோட்டையில் முறுக்கு விற்றிருக்கிறார். சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வித்வானிடம் எடுபிடி வேலை பார்த்திருக்கிறார். சினிமாவில் சேர படாத பாடு பட்டிருக்கிறார். சுப்பையா நாயுடு இவரது மெட்டுக்களை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அதே நாயுடுதான் இவருக்கு சிபார்சு செய்து சான்சும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கண்ணதாசனோடு ஒரு ஸ்பெஷல் பந்தம் இருந்திருக்கிறது. வாலியைக் கை தூக்கி விட்டிருக்கிறார். எம்ஜிஆர் சினிமா ஃபார்முலாவின் முக்கிய பங்களிப்பாளர். சிவாஜி, இயக்குனர் ஸ்ரீதரோடு நல்ல உறவில் இருந்திருக்கிறார். ஹிந்தி இசை அமைப்பாளர் நௌஷத்தின் பாராட்டுக்காக ஏங்கி இருக்கிறார். ராணிமைந்தன் சுவாரசியமான பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். இந்தப் புத்தகம் வாழ்க்கை வரலாறு இல்லை. இது எம்எஸ்வியின் புகழ் பாடும் புத்தகம். ஆனாலும் அவருடைய ஆளுமை வெளிப்படுகிறது. ஒரு சிம்பிளான, நன்றி உணர்வு மிகுந்த, இசை மட்டுமே தெரிந்த, அதை மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பியவர் என்பது புரிகிறது. சினிமா பிரியர்களுக்கு மட்டும்தான்.

6 பின்னூட்டங்கள்
 1. இந்த நூலையில் ராணி மைந்தன் எழுதிய மற்றொரு நூலான சாவி-85ஐயும் படித்திருக்கிறேன். ராணி மைந்தன் ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார். இரண்டு புத்தகங்களுமே அந்த ஸ்டைலில், ஒரே மாதிரி பாணியில்தான் இருக்கின்றன. இதே மாதிரி கல்கி சந்திரமௌலியிடமும் இதே பாணி எழுத்துதான். இவை வெகுஜன வாசர்களை ஈர்க்கும் லைட்-ரீடிங் ஸ்டைல். ஆனால் ஒரு தனிப்பட்ட ஆளுமை பற்றி நாம் அதுவரை அறியாத பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்பது உண்மை. இவற்றை வாழ்க்கை வரலாறு என்று கொள்வதை விட, சம்பந்தமட்ட மனிதரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. இல்லாவிட்டால் அவர்களது இன்னொருபுறம் தெரியாமலே போய் விடும்.

  Like

 2. Snapjudge permalink

  எல் ஆர் ஈஸ்வரி உண்டா?

  Like

 3. நான் இளையராஜாவின் ரசிகன் என்றாலும் இன்னும் காலையில் மெகாடிவியில் அமுதகானத்தில் எம்.எஸ்.வி’ன் பொற்கால திரைஇசைப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அற்புதமான கலைஞன் அவர். பகிர்விற்கு நன்றி.

  Like

 4. ரமணன், // சம்பந்தமட்ட மனிதரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. இல்லாவிட்டால் அவர்களது இன்னொருபுறம் தெரியாமலே போய் விடும். // நானும் ஆமோதிக்கிறேன்.

  பாஸ்டன் பாலா, ஈஸ்வரி எல்லாம் கிடையாது சார்!

  சித்திரவீதிக்காரன், இன்னொரு எம்எஸ்வி ரசிகரைப் பார்ப்பது மகிழ்ச்சி!

  Like

 5. பாடல்கள் கேட்க ஆரம்பித்த தொண்ணூறுகளில், ரகுமான் பாடல்கள் கேசட்டுகளில் இருந்த என்னை சென்னை FM ராஜாவிடம் திருப்பியது. அன்றிலிருந்து ராஜாவின் தீவிர ரசிகனாக இருந்தாலும் எம்.எஸ்.வியும், கே.வி மகாதேவனும் பிடித்து போயினர். பல நாட்கள் இவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். கலைஞர் டீவியிலும், ஜெயா டீவியில் காலையில் இவர்களின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்து விட்டு பல நாட்கள் அலுவலகத்திற்கு லேட்டாக சென்றுள்ளேன். ராஜா ஒரு வகை என்றால், இவர் வேறு வகை. (இவர்கள் வரிசையில் என்னால் ஏ.ஆர். ரகுமானை வைக்க முடியவில்லை :))

  எல்.ஆர். ஈஸ்வரி என்றதும் ஒரு பதட்டம் வருவது போல தெரிகின்றது :))))))

  Like

  • ரெங்கசுப்ரமணி, ரெஹ்மான் வேறு வகை என்பது மிகச் சரி. சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஜி. ராமநாதன் போன்றவர்களிடமிருந்து கேவிஎம், எம்எஸ்வி வழியாக ராஜா வரை வருவதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ரஹ்மானோ சுயம்புவாக முளைத்த மாதிரி இருக்கிறது.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: