Skip to content

திரைப்படப் பரிந்துரை – Imitation Game

by மேல் செப்ரெம்பர் 11, 2015

சிறந்த திரைப்படம், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

imitation_gameஆலன் டூரிங் என்ற பேர் கணிணியியல்காரர்களுக்கு பரிச்சயமான பெயர். கணிணியியல் துறையின் அறிவியல் அடிப்படைகளை உருவாக்கியவர். இன்றும் கணிணியியல் பரிசுகள் அவர் பேரால்தான் கொடுக்கப்படுகின்றன.

டூரிங்குக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒரு விதத்தில் பார்த்தால் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி முறியடிக்கப்பட்டதற்கு அவர்தான் காரணம் என்றே சொல்லலாம். அவருடைய பங்களிப்பு அவ்வளவு முக்கியமானது. இந்தத் திரைப்படம் அந்தப் பங்களிப்பைப் பற்றித்தான்.

ஜெர்மானியர்கள் enigma என்ற ஒரு எந்திரத்தை நிர்மாணித்திருக்கிறார்கள். அந்த எந்திரம் எல்லா செய்திகளையும் encrypt செய்கிறது. அதன் மூலம் அனுப்பப்படும் செய்திகள் சாதாரணமாக ரேடியோ அலைவரிசைகளில் அனுப்பப்படுகின்றன. ஆங்கிலேயர்களுக்கும் இந்த செய்திகள் கிடைக்கின்றன, ஆனால் அது என்ன செய்தி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடித்தால் ஜெர்மானியர்களின் திட்டங்களை முன்கூட்டியே அறிந்துகொண்டு தடுக்கலாம். Encrypt செய்யும் சாவியோ தினமும் மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த மர்ம எழுத்து முறையை உடைக்க ஒரு குழு – செஸ் மாஸ்டர் ஹ்யூ அலெக்சாண்டர், ஜான் கெய்ர்ன்க்ராஸ், கணித வல்லுனர் பீட்டர் ஹில்டன்டென்னிஸ்டனின் தலைமையில் அமைக்கப்படுகிறது. அங்கே ஜெர்மன் மொழியையே அறியாத டூரிங் வந்து சேர்கிறார். டூரிங் தானே அறிவாளி என்று உறுதியாக எண்ணுபவர். குழுவில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. தினம் தினமும் சாவி மாறுகிறது, எத்தனை மகா அறிவாளிகளுக்கும் இதை உடைக்க நேரம் வேண்டும், உடைத்த உடனே மாறும் சாவியை கண்டுபிடித்து என்ன பயன் என்று கேட்கிறார். சாவியைக் தினமும் ஓரிரு செய்திகள் வந்ததுமே கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அது கணினியால்தான் முடியும் என்கிறார். குழுவோடு ஒத்துழைக்காததால் டென்னிஸ்டன் அவரை வேலையிலிருந்து நீக்க, இவர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். சர்ச்சில் இவர் சொல்வதில் கவரப்பட்டு, இவரை டென்னிஸ்டனுக்கே மேலதிகாரியாக நியமிக்கிறார்.

alan_turingடூரிங் உலகின் முதல் கணினிகளில் ஒன்றை ஒற்றை ஆளாக உருவாக்குகிறார். திறமை வாய்ந்தவர்களைக் கண்டுபிடிக்க கஷ்டமான குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றை ஏற்படுத்தி அதை விரைவாக முடிப்பவர்களை கூட வேலை செய்ய அழைக்கிறார். அப்படி வேலை செய்ய வரும் பெண் ஜோன் க்ளார்க். ஜோன் மெதுமெதுவாக டூரிங் குழுவை ஒன்றாக வேலை செய்ய வைக்கிறார். கணினி வேலை மும்முரமாக நடக்கிறது. ஒரு கட்டத்தில் ஜோன் இளம்பெண் என்பதால் அவரால் அங்கே தொடர முடியவில்லை. டூரிங் அவளை மணக்கிறார். ஆனால் டூரிங் ஓரினச் சேர்க்கையாளர்!

பல பிரச்சினைகளைக் கடந்து கணினியைக் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் enigma-வை உடைத்துவிட்டோம் என்று ஜெர்மானியர்களுக்கு தெரியக் கூடாது, தெரிந்தால் அவர்கள் இன்னொரு எந்திரத்தை நிர்மாணித்துவிடுவார்கள். அதனால் கப்பல்கள் தாக்கப்படப் போகின்றன என்று தெரிந்தாலும் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். படத்தில் இது காட்டப்படவில்லை என்றாலும் இந்தக் கணினிதான் உலகப் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்தது, பல லட்சம் உயிர்ச்சேதத்தை தடுத்தது என்கிறார்கள்.

உலகப்போருக்கு பிறகு டூரிங்கின் வாழ்க்கை சோகமானது. ஓரினச் சேர்க்கை கேஸ் ஒன்றில் அகப்பட்டுக் கொள்கிறார். மருந்துகள் மூலம் அவரை ஆண்மை இழக்கச் செய்கிறார்கள். இவையெல்லாம் படத்தில் காட்டப்படுகின்றன. காட்டப்படாதது அவரது தற்கொலை.

பெனடிக்ட கம்பர்பாட்ச் (டூரிங்), கெய்ரா நைட்லி (ஜோன்) போன்றவர்கள் புகுந்து விளையாடிவிட்டார்கள். அற்புதமான நடிப்பு. எல்லாருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். திரைக்கதையை மிக நன்றாக படைத்திருக்கிறார்கள். டெக்னிகல் விஷயங்களை சரளமாக விளக்கி இருக்கிறார்கள், கதைக்குள் மூழ்கிவிடுகிறோம். மார்டன் டில்டம் என்பவர் இயக்கி இருக்கிறார். “மூலக்கதை” ஒரு புத்தகம் – Andrew Hodges எழுதிய “Alan Turing: The Enigma” (1992).

2014-இல் வெளிவந்த படம். சிறந்த திரைப்படம், நடிகர், துணை நடிகை, இயக்கம் ஆகியவற்றுக்காக பரிந்துரைக்கப்பட்டது, திரைக்கதைக்காக வென்றிருக்கிறது.

கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
படத்தின் தளம்
ஐஎம்டிபி குறிப்பு

Advertisements

From → Films

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: