Skip to content

டிக் ஃபிரான்சிஸ்

by மேல் செப்ரெம்பர் 19, 2015

டிக் ஃபிரான்சிஸ் எனக்குப் பிடித்த த்ரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கே ஜாக்கியாக இருந்தவர். ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார்.

டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு template உண்டு. எல்லா கதைகளுக்கும் குதிரைப் பந்தய பின்புலம் உண்டு. ஹீரோ ஜாக்கியாக இருக்கலாம், முன்னாள் ஜாக்கியாக இருக்கலாம், அக்கௌன்டன்ட், டிரைவர், குதிரைகளின் பயிற்சியாளர், ஏதாவது ஒரு வகையில் ஹீரோவுக்கு குதிரைப் பந்தய உலகோடு தொடர்பு இருக்கும். எல்லா ஹீரோவும் ஏறக்குறைய ஒரே மாதிரி குணம் உள்ளவர்கள். Strong morals, integrity உள்ள low-key ஆட்கள். என்ன பிரச்சினை வந்தாலும் நிதானம் இழக்கமாட்டார்கள். தன்னை நன்றாக புரிந்து கொண்டவர்கள். அடுத்தவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள். ஏதாவது ஒரு சீனில் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்குவார்கள். அதுதான் புத்தகத்தின் highlight சீன் ஆக இருக்கும். அடி என்றால் உங்கள் வீட்டு எங்கள் வீட்டு அடி இல்லை. Nerve-இல் ஹீரோவை heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். Forfeit-இல் ஹீரோ வெறும் விஸ்கியை இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி வரும். கால் உடைந்து படுத்திருக்கும் ஒரு ஹீரோவை தாக்க ஒரு வில்லன் வருவான். எனக்கு அந்த மாதிரி உணர்ச்சிவசப்படாத, எதையும் லாஜிகலாக பார்க்கும் மனிதர்களைப் பிடிக்கும் என்பதால்தானோ என்னவோ இவரது புத்தகங்களை நான் பெரிதும் ரசிக்கிறேன்.

டிக் ஃபிரான்சிசின் இறுதிக் காலத்தில் தன் மகன் ஃபீலிக்ஸ் ப்ரான்சிசுடன் இணைந்து சில புத்தகங்களை எழுதினர். அனேகமாக டிக் ஃபிரான்சிசின் ஐடியாக்களை ஃபீலிக்ஸ் டெவலப் செய்திருக்க வேண்டும். புத்தகங்களின் தரம் குறைவுதான். சமீபத்திய புத்தகமான Gamble இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Forfeit-ஐத்தான். Nerve, Odds Against, Enquiry, Whiphand, Banker, Danger, Break-In, Bolt, Decider, To the Hilt போன்றவையும் நல்ல புத்தகங்கள். எல்லா புத்தகங்களையும் பற்றி ஓரிரு வரி விவரிப்பு கீழே.

மிச்ச பரிந்துரைக்கும் கதைகள்:

Bonecrack, 1971: இன்னும் ஒரு நல்ல த்ரில்லர். குதிரைப் பயிற்சியாளரான அப்பாவுக்கு விபத்து. மகன் நீல் க்ரிஃபான் பொறுப்பேற்கிறார். வில்லன் ஜாக்கியாக அனுபவமே இல்லாத என் 19 வயது மகனுக்கு முதல் தர ரேசில் முதல் தர குதிரையை சவாரி செய்ய ஏற்பாடு செய், இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்கிறார். நீல் எப்படி சமாளிக்கிறார்?

In the Frame, 1976: விறுவிறுவென்று போகும் நாவல். ஓட்டைகளை எல்லாம் கவனிக்க நேரமே கிடையாது. குதிரைகளை வரையும் சார்லஸ் டாட். அவனது கசினின் வீடு கொள்ளையடிக்கப்படுகிறது, கசினின் மனைவி கொல்லப்படுகிறாள். தற்செயலாக ஆஸ்திரேலியாவில் நிறைய பணம் கொடுத்து ஓவியங்களை வாங்கும் இரண்டு ஆங்கிலேயர்களின் வீடுகளில் கொள்ளை நடந்திருப்பதை உணர்கிறான். சுவாரசியமாகச் செல்லும் மர்மக் கதை.

Banker, 1982: மெதுவாகப் போகும் கதை. ஆனால் கதையின் சுவாரசியம் தொய்யாமல் இருக்கும். எகாடரின் ஒரு சிறு வங்கியின் சீனியர் அலுவலர். பெண் குதிரைகளைப் புணர்ந்து குட்டி போடுவதற்காக ஒரு பிரபலமான குதிரையை வாங்க வங்கியில் கடன் தருகிறார். இன்றைய venture capitalists மாதிரி. ஆனால் பிறக்கும் குட்டிகளில் பல உடல் ஊனத்துடன் பிறக்கின்றன. கடன் கொடுத்த எகாடரினின் நிலை அலுவலகத்தில் மிக மோசமாகிறது. குதிரைக்கு என்ன பிரச்சினை?

Danger, 1983: நாயகன் ஒரு பாதுகாவல் கம்பெனியில் வேலை செய்கிறான். அவனுடைய ஸ்பெஷாலிடி கடத்தப்பட்டவர்களை குறைந்த பட்ச மீட்புத்தொகை (ransom) கொடுத்தோ இல்லை எதுவும் கொடுக்காமலோ மீட்பது. கதை அவன் ஒரு அழகிய பெண் ஜாக்கியை மீட்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.

Proof, 1984: விறுவிறுவென்று போகும் கதை. மது வியாபாரி டோனி பீச். தற்செயலாக உயர்ந்த தர வைன், விஸ்கி என்று தாழ்ந்த தர மதுக்களை விற்கும் ஒரு கும்பல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறான். கும்பலின் தலைவன் தனக்கு அபாயமானவர்கள் என்று தோன்றுபவர்களை முகத்தில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் கட்டு போட்டு (மூச்சு விடமுடியாது) கொடூரமாகக் கொல்கிறான். பீச் எப்படி தப்பிக்கிறான்?

Break In, 1985: ரோமியோ ஜூலியட் மாதிரி இரண்டு பரம்பரை பகையாளி குடும்பங்களுக்குள் (அல்லார்டெக், ஃபீல்டிங் குடும்பங்கள்) ஒரு காதல். கல்யாணமும் நடந்துவிடுகிறது. இந்த ஜோடி குதிரைகளை பயிற்றுவிக்கிறது. இந்த ஜோடி மீது பல மோசமான வதந்திகள், அவர்கள் திவாலாகும் நிலை. “ஜூலியட்டின்” அண்ணன் கிட் ஃபீல்டிங்தான் நாயகன். ஜாக்கி. பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Bolt, 1986: Break In-இன் தொடர்ச்சி. கிட் சவாரி செய்யும் குதிரைகளுக்கு சொந்தக்காரி ஒரு பிரபு குடும்பத்துப் பெரிய மனுஷி. அவர்களது பிசினசை ஆக்கிரமிக்க முயலும் ஒரு வில்லன். மீண்டும் கிட் பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Hot Money, 1987: பங்குச் சந்தையில் பெருவெற்றி பெற்றிருக்கும் அப்பா; ஐந்து முறை திருமணம் நடந்திருக்கிறது. அவரை கொல்ல யாரோ முயலும்போது தன் இரண்டாம் மனைவியின் மகனான இயன் பெம்ப்ரோக்கிடம் உதவி கேட்கிறார்.

Decider, 1993: ஸ்ட்ராட்டன் குடும்பத்தில் பல ரகசியங்கள். அவர்களுக்கு ஒரு ரேஸ்கோர்ஸ் சொந்தமாக இருக்கிறது. லீ மாரிஸ் குடும்ப சண்டையில் இழுக்கப்படுகிறான். லீ மாரிஸின் சித்திரம் எனக்குப் பிடித்த ஒன்று.

படிக்கலாம், ஆனால் கொஞ்சம் சுமாரானவை:
Flying Finish, 1966: படிக்கலாம். குதிரைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு கொண்டு செல்லும் ஒரு கம்பெனி.

Smokescreen, 1972: நாயகன் ஒரு நடிகன். அவனைக் கொல்லப் போடப்படும் திட்டத்தை கையும் களவுமாக சினிமாவாகவே படம் பிடித்து விடுகிறான்.

High Stakes, 1975: ஸ்டீவன் ஸ்காட் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் செய்து மில்லியனர் ஆனவன். குதிரைகளை வாங்கி ரேசில் கலந்து கொள்ள வைப்பவன். தன் ட்ரெய்னர் ஜோடி தன்னை ஏமாற்றுகிறான் என்பதை உணர்கிறான். ஜோடியிடமிருந்து தன் குதிரைகளை இன்னொரு ட்ரெய்னரிடம் அனுப்புகிறான். ஜோடி தான் அனுப்ப வேண்டிய உயர் ஜாதி குதிரையைப் போல இருக்கும் வேறு ஒரு சோதா குதிரையை அனுப்பி வைக்கிறான். ஸ்காட் என்ன செய்கிறான் என்பதுதான் கதை. படிக்கலாம்.

Reflex, 1980: சுமார். இறந்து போன ஒரு பத்திரிகையாளனிடம் பலரது குற்றங்கள்-ரகசியங்களுக்கான ஃபோட்டோ ஆதாரங்கள் இருக்கிறது. அவை ஜாக்கி ஃபிலிப் நோரேவிடம் வந்து சேர்கின்றன. பிறகு?

Twice Shy, 1981: ரேசில் எப்போதும் ஜெயிக்க ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் இருக்கிறது. அதைத் தேடும் வில்லனை அண்ணன் ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறான். விடுதலையான பிறகு தம்பிக்கு பிரச்சினை. படிக்கலாம்.

Straight, 1989: டெரக் ஃப்ராங்க்ளினின் அண்ணன் – ரத்தினக் கற்கள் வியாபாரி – இறந்துவிடுகிறார். வழக்கம் போல மர்மங்கள். படிக்கலாம்.

Longshot, 1990: இளம் எழுத்தாளன். பணத்தேவைக்காக ஒரு குதிரைப் பந்தய பயிற்சியாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வருகிறான். குதிரைகளை கவனித்துக் கொள்ளும் ஒரு பெண் ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போயிருக்கிறாள். அவள் பிணம் கிடைக்கிறது. போலீஸ் சந்தேகப்படுபவனைக் கொலை செய்ய ஒரு முயற்சி. சுமாரான நாவல்தான்.

To the Hilt, 1996: நாயகன் ஒரு எக்சென்ட்ரிக் ஓவியன். ஸ்காட்லாந்தின் பெருகுடும்பம் (clan) ஒன்றைச் சேர்ந்தவன். ஏறக்குறைய ஒரு (குடும்பத்துக்கு சொந்தமான) குகையில் வாழ்கிறான். அவனுடைய மாற்றாந்தந்தை பிசினஸ் சிக்கலில். பெருகுடும்பத்தின் தலைவன் பழங்கால வாள் ஒன்றை ஒளித்து வைக்கும்படி சொல்லி இருக்கிறான். குடும்பம் என்பது எவ்வளவு வலிவான பந்தமாக இருக்கலாம் என்பதை நன்றாக காட்டி இருப்பார்.

10 LB. Penalty, 1997: சுமார். தேர்தல் பின்புலம்.

தவிர்க்க வேண்டியவை:

Dead Cert, 1962: முதல் நாவல். கொஞ்சம் அமெச்சூர்தனமாக இருக்கும். தவிர்க்கலாம்.

For Kicks, 1965: ரேஸ்களில் மீண்டும் மீண்டும் எதிர்பாராத விதமாக குதிரைகள் ஜெயிக்கின்றன. லார்ட் அக்டோபர் டேனியல் ரோக்கை துப்பறிய அனுப்புகிறார். ரோக் குதிரைகளுக்கு பாவ்லோவ் முறையில் ஒரு விசில் சத்தத்தையும் நெருப்பையும் வைத்து அவற்றை வேகமாக ஓட்டுகிறார்கள் என்று கண்டுபிடிக்கிறான். ரொம்ப ஸ்லோவான கதை. இன்னும் ஃபிரான்சிஸ் தன் ஃபார்முலாவை முழுதாக கண்டுபிடிக்கவில்லை. தவிர்த்துவிடலாம்.

Risk, 1977: சுமார். அக்கௌன்டன்ட் ரோலண்ட் ப்ரிட்டன் கடத்தப்படுகிறான். ஏன்?

Field of 13, 1998: சிறுகதைகள்.

Blood Sport 1967, Rat Race 1970, Slay Ride 1973, Knockdown 1974, <strongTrial Run 1978, Edge 1988, Comeback 1991, Driving Force 1992: இவை எல்லாமே கொஞ்சம் போரடிக்கும். தவிர்க்கலாம்.

Wild Horses, 1994, Second Wind, 1999, Shattered, 2000: இவை எல்லாம் நிறையவே போரடிக்கும், தவிருங்கள்.

டிக் ஃப்ரான்சிஸ், மற்றும் அவர் மகன் ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிசோடு இணைந்து சில புத்தகங்களை – Dead Heat 2007, Silks: 2008, Even Money 2009, Crossfire, 2010 – எழுதி இருக்கிறார். பொதுவாக ஒரு மாற்று குறைவு. தீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

இப்போது ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் தனியாக எழுதிக் கொண்டிருக்கிறார் – Gamble )2011), Bloodline (2012), Damaged (2014), Frontrunner (2015), Triple Crown (2016), Pulse (2017)- இரண்டு மாற்று குறைவு! அதிதீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “ஃபோர்ஃபிட் (Forfeit)”
டிக் ஃபிரான்சிசின் “என்கொயரி”
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “நெர்வ்”

Advertisements

From → Thrillers

3 பின்னூட்டங்கள்
  1. பூ தொடுப்பது போல எத்தனை பதிவுகள். அவற்றில் எத்தனை அறிமுகங்கள். பிரமிக்க வைக்கிறது உங்கள் உழைப்பு.

    Like

Trackbacks & Pingbacks

  1. யார் சிறந்த வாசகன்? | சிலிகான் ஷெல்ஃப்
  2. யார் சிறந்த வாசகன்? | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: