கணேஷ்-வசந்த் கதை – சுஜாதாவின் “மேகத்தைத் துரத்தினவன்”

எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, சுஜாதாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி (சுஜாதா இலக்கியவாதிதான் என்று எழுதியதைத் தவிர) ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு வருஷத்துக்கு மேலே! சரி இந்த வாரம் கணேஷ்-வசந்த் கதைகளுக்கு. சுஜாதா இலக்கியவாதி இல்லை என்ற வாதத்துக்கு இவை அனேகமாக வலு சேர்க்கும். 🙂

sujathaமேகத்தைத் துரத்தினவன்” ஒரு கச்சிதமான கணேஷ்-வசந்த் கதை.

கணேஷ்-வசந்த் என்று சம்பிரதாயமாகச் சொன்னாலும் இதில் கணேஷ் கிடையாது. வசந்த் மட்டுமேதான் துப்பறிவார். இந்த ஒரு கதைதான் அப்படி கணேஷ் இல்லாத கணேஷ்-வசந்த் கதை என்று நினைக்கிறேன்.

கதையின் நாயகன் அன்பழகன் – சுருக்கமாக கன் – வேலையில்லாமல் பாங்க் மானேஜர் சித்தப்பா ஆதரவில் வாழும் இளைஞன். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்யும் சம்பளம் இல்லாத வேலைக்காரன். சிகரெட்டுக்கும் டீக்கும் அந்தக் காலத்தில் வேண்டியிருந்த நாலணா எட்டணாவுக்கு சில்லறைத் திருட்டுகள். சித்திக்கு அவன் மீது ஒரு கண். சித்தப்பா பாங்கை கொள்ளையடிக்கப் போய் மாட்டிக் கொள்கிறான். அவன் மேல் பரிவுள்ள சித்தியின் தங்கை ரத்னா வசந்திடம் இதைப் பற்றி பேச, என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ganesh-vasanthநல்ல மர்மக் கதை. மர்மம் நன்றாகவும் அவிழ்கிறது. ஆனால் இந்தக் கதையை வேறு லெவலிலும் படிக்கலாம்.

சுஜாதா நல்ல சாகசக் கதை எழுத்தாளர் என்பதற்கு இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லலாம். நல்ல சாகசக் கதைகளுக்கு வேண்டிய எல்லாம் இதில் இருக்கிறது. குற்றம், மர்மம், அதை விடுவிப்பது, ஏன் மறக்காமல் ஒன்றிரண்டு கில்மா சீன்களைக் கூட சேர்த்திருக்கிறார். ஆனால் கில்மா சீன்கள் கூட இயற்கையாக இருக்கின்றன, வலிந்து புகுத்தப்படவில்லை. விறுவிறுப்பு குறைவதே இல்லை.

அதே நேரத்தில் சுஜாதா வெறும் சாகசக் கதை எழுத்தாளர் அல்ல என்பதற்கும் இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லலாம். சாகசக் கதைகளின் எல்லைகளை மீறி வெகு சுலபமாக இலக்கியத்தின் எல்லைகளை அவர் தொட்டிருக்கிறார். கன், ரத்னா இருவரின் பாத்திரப் படைப்பும் அருமை. கன்னின் வாழ்வின் வெறுமை, இழிந்த நிலை, ரத்னாவை அவன் சைட்டடிப்பது போன்றவற்றை சிக்கனமான வார்த்தைகளில் காட்டிவிடுகிறார். அவர் முனைந்திருந்தால், வாரப் பத்திரிகை தொடர்கதை என்ற இக்கட்டு இல்லாமலிருந்தால் அவர் இன்னும் உன்னதமான இலக்கியவாதியாக பரிணமித்திருப்பார் என்று என்னை நினைக்க வைப்பது இது போன்ற கதைகள்தான்.

வாரப் பத்திரிகை தொடர்கதைகளை விட குறுநாவல்கள் – அவை மாத நாவல்களாக இருந்தாலும் சரிதான் – சிறுகதைகள் போன்றவற்றில்தான் அவரது திறமை அதிகமாக வெளிப்பட்டது என்பதற்கு இன்னொரு அத்தாட்சி இந்தப் புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம் – கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

5 thoughts on “கணேஷ்-வசந்த் கதை – சுஜாதாவின் “மேகத்தைத் துரத்தினவன்”

    1. ஙே,,,,,,,,,,,,,,,,,,,,,,

      அலுவலகத்தில் பல அப்ளிகேஷன்களை டிசைனர் வைத்துக்கொள்ளும் வசதியின்றி, நானே எனக்கு தோன்றிய வகையில் டிசைன் செய்து, வாடிக்கையாளர் தலையில் கட்டியுள்ளேன். இருந்தும் இது மாதிரி எல்லாம் எனக்கு டிசைன் செய்ய வராது சாமி.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.