யவனிகா அத்தனை சுவாரசியமான நாவல் இல்லை. கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்காக மட்டுமே. ஒவ்வொரு கணேஷ்-வசந்த் நாவலைப் பற்றியும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு பைத்தியக்கார எண்ணம் உண்டு, அதனால்தான் இந்தப் பதிவு.
கதைச்சுருக்கத்தை இரண்டு வரியில் எழுதிவிடலாம். சோழர் காலத்து அபூர்வச்சிலை ஒன்று – யவனிகா – பெரிய பணக்காரக் குடும்பத்து உறுப்பினரின் தனிப்பட்ட கலெக்ஷனில் இருக்கிறது. அதை வைத்து குடும்ப பிசினசின் தலைவர் அன்னியச் செலாவணிக்காக கேம் விளையாடுகிறார். கணேஷும் வசந்தும் நடுவில் புகுந்து குட்டையைக் குழப்புகிறார்கள். சுவாரசியத்துக்காக அந்தச் சிலையை கவனித்துக் கொள்ள கொஞ்சம் புத்திசாலி, ஆனால் சுமாரான தோற்றம் உள்ள ஒரு பெண் பாத்திரம். அவ்வளவுதான்.
வழக்கமான வசந்த் துள்ளல் கூட இதில் மிஸ்ஸிங். கணேஷ் வழக்கம் போல புத்திசாலித்தனமாக எந்த முடிச்சையும் அவிழ்க்கவில்லை. வில்லன்களுக்கு தண்டனையும் கிடையாது. தொடர்கதையாக எழுதும்போதே கைகழுவிவிட்டார் என்று தோன்றுகிறது.
தீவிர கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்