Skip to content

நயனதாரா செகலும் சாஹித்ய அகடமி விருதும

by மேல் ஒக்ரோபர் 10, 2015

Confirmation Bias என்று சொல்வார்கள். நம்மைச் சுற்றி எத்தனையோ நடக்கும், ஆனால் நம்முடைய முன்முடிவுகளுக்கு எதெல்லாம் வலு சேர்க்கிறதோ அவற்றைத்தான் கவனிப்போம். முன்முடிவுகளைப் பலவீனப்படுத்தும் சம்பவங்கள் நம் ரேடாரில் வரவே வராது.

narendra_modiநான் மோடி எதிர்ப்பாளன். இந்தியாவில் இருந்தால் நிச்சயமாக மோடிக்கு ஓட்டுப் போடமாட்டேன். (வேறு யாருக்கு ஓட்டுப் போடுவது என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பேன்) குஜராத் கலவரங்களை அவர் வேண்டுமென்றே அடக்கவில்லை, மதவெறி கும்பல்கள் முஸ்லிம்களை கொன்று குவிப்பதை மறைமுகமாக அனுமதித்தார், அதனால் அவர் எந்தப் பதவிக்கும் தேவையான தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்று கருதுகிறேன்.

ஆனால் குஜராத் கலவரங்கள் என்ற பெரிய கறையைத் எப்படியாவது கடும் முயற்சி செய்து மறந்துவிட்டுப் பார்த்தால்: அவர் மீது பெரிதாக என்ன சொல்லிவிட முடியும்? செகல் தாத்ரி கொலையே தன்னைப் பொறுத்த வரையில் last straw என்கிறார். (கல்பூர்கி, டபோல்கர், பன்சாரே ஆகியோரின் கொலைகளையும் குறிப்பிடுகிறார்.) ஆம், தாத்ரியில் நடந்தது தவறுதான். ஆனால் இதென்ன ராமராஜ்யமா, ஊரில் என்ன தவறு நடந்தாலும் மோடி மீது பழி போட? இன்றும் அகதி முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பிரச்சினைக்கு யாரை பழி சொல்ல? 30 வருஷமாக சீக்கியர்கள் முட்டி மோதிப் பார்க்கிறார்கள், 1984 டெல்லி கலவர வழக்குகளில் இன்னும் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆலமரம் என்றெல்லாம் பேசிய ராஜீவையே, உள்துறை மந்திரி நரசிம்ம ராவையே யாரும் அதற்கெல்லாம் பொறுப்பாக்கவில்லை. மும்பை கலவரங்களில் போலீசின் மறைமுக உதவியோடு எத்தனையோ முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், காஷ்மீரி பண்டிட்கள் விரட்டப்பட்டார்கள் (நயனதாரா செகலே காஷ்மீரி பண்டிட்தான்) இதற்கெல்லாம் நியாய உணர்ச்சி பொங்கி எழாதா? அப்போதெல்லாம் நயனதாரா செகலுக்கு சாஹித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? அட எல்லாவற்றையும் விடுங்கள், மோடி முதல்வராக இருந்தபோது, வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடந்த குஜராத் கலவரங்களைக் கண்டு இவர் மனம் கலங்கவில்லையாமா, அப்போது கூட விருதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? அதை விட மோசமான இனக் கலவரங்களை இன்று பார்த்துவிட்டாராமா? காங்கிரஸ் ஆட்சி நடந்தால் எவ்வளவு பெரிய இனக் கலவரமும் அவர் ரேடாரில் வராது, மோடி ஆட்சி என்றால் தனி ஒரு முஸ்லிம் அநியாயமாக கொல்லப்பட்டார் என்றால் ஜகத்தினை அழித்திடுவாராமா?

nayanathara_sehgalசெகல் நேருவின் தங்கை மகள். இந்திரா காலத்திலிருந்தே நேரு-காந்தி குடும்பத்தோடு மனஸ்தாபங்களால் விலகி இருக்கிறார். தான் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர், நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்று சொல்பவர். எமர்ஜென்சியை எதிர்த்தவர். இந்திராவை விமர்சித்து அபுனைவுகள் எழுதி இருக்கிறார். அப்படிப்பட்டவர் இன்றைய காங்கிரசுக்கு விளம்பரம் தேடித் தர இப்படி செய்கிறார் என்று நம்ப முடியவில்லை. பின்னே எதற்காக, இதெல்லாம் என்ன அரசியல் கேம், இவருடைய நோக்கம் என்ன, இதனால் இவருக்கு என்ன லாபம் என்றே என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. அகாடமி விருது பெற்றி கல்பூர்கி கொலை செய்யப்பட்டதை சாஹித்ய அகாடமி கண்டித்திருக்க வேண்டும், அது எனக்கு last straw என்று சொல்லி இருந்தாலாவது எனக்குப் புரிந்திருக்கும். என்னதான் benefit of doubt கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், last straw என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்றாலும், இந்த முடிவில் சுத்தமாக லாஜிக் இல்லை.

செகல் எழுதிய “Rich Like Us” (1985) புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது 1986-இல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மட்டுமல்ல, செகலின் எந்த புத்தகங்களையும் நான் படித்ததில்லை. யாராவது படித்திருக்கிறீர்களா?


பிற்சேர்க்கை: இந்தப் பதிவை எழுதிய பிறகு சகல் தனது காரணங்களை விளக்கும் பேட்டி ஒன்று கண்ணில் பட்டது. முக்கிய காரணமாக அவர் சொல்வது – முன்னால் எத்தனையோ பெரிய இனக் கலவரங்கள் நடந்திருந்தாலும் அவை நியாயப்படுத்தப்படவில்லை, சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களோ, இல்லை மும்பை கலவரங்களோ இல்லை குஜராத் கலவரங்களோ நாடு முழுவதும் கண்டனங்களை, வருத்தத்தைத்தான் உருவாக்கின, ஆனால் இன்று ஆர்எஸ்எஸ்ஸின் மறைமுகத் தலைமையில் தாத்ரி கொலையோ கல்பூர்கி கொலையோ இவை எல்லாம் நியாயமானவையே, சரியே என்று ஹிந்துத்துவா தரப்பு சத்தமாகச் சொல்கிறது, அதை எதிர்த்துத்தான் என் விருதை நிராகரிக்கிறேன் என்கிறார். அதாவது தாத்ரி கொலை அல்ல, தாத்ரி கொலை நியாயப்படுத்தப்படுவது – குறைந்த பட்சம் தாத்ரி கொலை வன்மையாகக் கண்டிக்கப்படாதது – தனக்கு last straw ஆக இருக்கிறது என்கிறார்.

அவர் சொல்வது சரியே. நான் தனிப்பட்ட முறையில் அறிந்த சில பல ஹிந்துத்துவர்கள் கூட இது போன்ற நிகழ்ச்சிகளை அப்படித்தான் நியாயப்படுத்துகிறார்கள். ஆனாலும் இவரது நிராகரிப்பு எனக்கு ஓவர்-ரியாக்ஷனாகத்தான் தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

Advertisements

From → Awards

4 பின்னூட்டங்கள்
 1. சாகித்திய அகாடமி விருதை திருப்பிக்கொடுக்கிறேன் பேர்வழிகள் இன்றும் கிளம்பியிருக்கிறார்கள். அகாடமி விருதுக்காரர்களுக்கு பாவம் பெரும் நமச்சலாக இருக்கிறது. அடுத்ததாக, திருவாளர் பெருமாள் முருகன் அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அன்போடு அழைக்கிறோம். பாவம் ஜெயமோகன். திருப்பிக்கொடுக்கக்கூட விருதுகள் ஏதுமில்லை.

  Like

 2. nparamasivam1951 permalink

  விருது என ஒன்று கொடுக்க புத்தகம் என ஒன்று வேண்டும். எனவே எழுதப்பட்டதே Rich like Us. விருதுடன் 7 ஏக்கர் நிலம் மற்றும் 5 கோடி பணம் வழங்கப் பட்டது. மற்றபடி புத்தகம் படிக்க அல்ல. இப்போதும் திருமதி செஹகல், விருதை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மற்றபடி பணமும் நிலமும் அவரே வைத்துக்கொண்டு உள்ளார். ஆக, வருதே திரும்பி அளிப்பது உங்களைப் போல் எங்களுக்கும் விளங்காத ஒன்று.

  Like

 3. I have read’ prison and chocolate cake’.Nothing great.her winning awards
  was due to Nehru effect only.In fact even the other writers who gave back
  their awards (they did not return the money part of it I think!),also have
  not contributed any worthwhile literary works for years. Dead wood. bala

  Like

 4. பாலா, செகலின் எழுத்தைப் பற்றி யாருமே பாராட்டிப் பேசி நான் பார்க்கவில்லை. இருந்த கொஞ்சநஞ்ச ஆர்வமும் போய்க்கொண்டே இருக்கிறது.

  பாண்டியன்/பரமசிவம், அவரது பேட்டி ஒன்றை பிற்சேர்க்கையாக இணைத்திருக்கிறேன். அவரது லாஜிக்கை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அது ஓவர் ரியாக்‌ஷனாகத்தான் எனக்குத் தெரிகிறது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: