Skip to content

என்ன கொடுமை இது சரவணன்?

by மேல் ஒக்ரோபர் 22, 2015

வேலைப்பளுவினால் எதுவும் எழுத முடியவில்லை. அதை விட மோசம், பாதி எழுதி வைத்திருந்ததெல்லாம் எனக்கே தெரியாமல் பதிக்கப்பட்டு அப்புறம் நான் அவற்றை நீக்க வேண்டியதாகி விட்டது. குழப்படிக்கு மன்னிக்க வேண்டும்.

ஆனால் விசித்திரம் ஒன்றைப் பார்த்தேன். நான் எழுதினாலும் எழுதாவிட்டால் சராசரியாக ஒரு நாளைக்கு 100 பேர் இந்தப் பக்கம் வருகிறீர்கள், 200 ஹிட் விழுகிறது. எப்படி என்றே புரியவில்லையே?

Curiosity-ஆல் கேட்கிறேன். ரெகுலராக இங்கே வந்து பார்ப்பவர்கள் யார் யார்? அவ்வப்போது வருபவர்கள் யார் யார்? முடிந்தால் உங்கள் பேரோடு இந்தத் தளத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று ஒரு பின்னூட்டம் எழுதுங்களேன்! (முடியாவிட்டால் கீழே உள்ள poll-இலாவது ஓட்டுப் போடுங்கள்)


தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

Advertisements

From → Misc

6 பின்னூட்டங்கள்
 1. T.S.Venkata Ramani permalink

  நான் தினமும் தங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன்.பரவலாக இலக்கியக்கருத்துகளுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. நான் ஏறத்தாழ மறந்துவிட்ட தமிழ் இலக்கியத்துக்கும் எனக்கும் சிலிகான் ஷெல்ஃப் ஒரு பாலமாக அமைந்துள்ளது.

  Like

 2. David Rajesh permalink

  டேவிட் ராஜேஷ் எனும் நான் மத்திய கிழக்கு நாடான ஓமனில் வசிக்கிறேன். ‘Amidst the Madding Crowd’.ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுண்டு. ஆனால் வாசிப்பு இப்பொழுது முற்றாக அபுனைவுகள்தான். பாரதி, ஜெயகாந்தன் , கல்கி, தி ஜானகிராமன், புதுமை பித்தன், கி.ராஜநாராயணன். அகிலன் பாலகுமாரன், சுஜாதா என்று முடிந்து விட்டது . தற்பொழுது ஜெயமோகனின் கட்டுரைகளில் மட்டும் ஆர்வம். அவருடைய புனைவுலகில் எனக்கு இடமில்லை போல் தெரிகிறது.

  இலக்கிய உலகில் நான் விட்டது என்ன தொட்டது என்ன என்று அறியும் ஆவலை பூர்த்தி செய்கிறது தங்கள் தளம்.

  உங்களுடைய தேர்வுகளில் யோக்கியம் தெரிகிறது. நீங்கள் ஜோல்னா பை கொண்ட இலக்கியம் மட்டுமே தெரிந்த வாசிப்பாளரில்லை. எனக்கான நிகழ் உலக விமர்சகர் போல் தெரிவதால் உங்கள் சிபாரிசுகளை கவனம் கொள்கிறேன்.

  Like

 3. வெங்கடரமணி மற்றும் டேவிட் ராஜேஷ், விவரமான பதில்களுக்கு நன்றி. இணையம் பேருக்கேற்ப எப்படி எல்லாம் நம்மை இணைக்கிறது!

  Like

 4. இதற்கு முன்னால் எழுதியதை காணோம்,

  ஈமெயிலில் படித்துவிட்டால் எப்படி அலுவலகத்தில் பொழுது போகும். தினமும் வந்து எட்டி பார்க்கும் தளம். என்ன லாசரா, ஷேக்ஸ்பியர் என்று பார்த்தால் உடனே மூடி வைத்துவிட்டு தினமலர் படிக்கவோ, இல்லை கோடிங் எழுதவோ போய்விடுவேன்.

  இது புத்தக விமர்சன தளம் என்று கூறுவதை விட அறிமுகத்தளம் என்றுதான் கூற வேண்டும். உங்கள் விமர்சனம் எல்லாம் ஒரு வரி இரண்டுவரியில் அமைந்துவிடுகின்றது. எனக்கு பக்கம் பக்கமாக எழுதினால் தான் திருப்தியாக இருக்கும். அறிமுகம், விமர்சனம் என்ற பெயரில் புத்தகத்தை திருப்பி எழுதுவதில்லை. அது முக்கியம். (பிறகு புத்தகத்தை வாங்கி எதைப்படிப்பதாம்)

  ஆம்னி பஸ்ஸில் ஒருவர் ‘ஆர்.வி என்று ஒருவர் எழுதுகின்றார், ஜனரஞ்சகமான புத்தகங்களை படிப்பார் என்று” கூறியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது :-).

  ஒரே சந்தேகம், உங்களுக்கு அங்கே புத்தகங்கள் எப்படி கிடைக்கின்றன, இங்கு வரும்போது அள்ளிக் கொண்டு போவதா?

  Like

  • ரெங்கா, அது என்ன லாசரா, ஷேக்ஸ்பியர் மேல் அவ்வளவு கோபம்?

   தமிழ் புத்தகங்கள் அள்ளிக் கொண்டு வந்தவை, நண்பர்களிடம் ஓசி வாங்குபவைதான்…

   Like

Trackbacks & Pingbacks

 1. கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: