தீபாவளி சிறுகதை – கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

Deepavali

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த சிறுகதையை முதலில் படிக்கும்போது எனக்கு இருபத்திரண்டு வயது இருக்கலாம். அன்றிலிருந்து தீபாவளி என்றால் இந்த சிறுகதை கட்டாயமாக நினைவு வரும்.

ku. azhagirisamiமனதை நெகிழ வைக்கும்படி எழுதுவதில் அழகிரிசாமியே ஒரு ராஜாதான்.

சிறுகதையை விடுங்கள். நான் வளர்ந்த சூழலில் மாப்பிள்ளை வரவைக் குறிக்க ‘ராஜா வந்திருக்கிறார்‘ என்று சொல்வதில்லை. முதல் வாசிப்பில் எனக்குப் புரிய ஒரு நிமிஷம் ஆனது. ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற சொல்வடையில் தொக்கி நிற்கும் அன்றைய சூழல் – மாப்பிள்ளையின் மதிப்பு, ஆண் ஒரு படி மேலே நிற்பது – எல்லாம் ஒரு கணத்தில் புரிந்தது. ஒரு சாதாரண சொல்வடை சமூகத்தின் சித்திரத்தையே காட்டிவிட்டதே என்று வியந்தது நினைவிருக்கிறது.

அந்த அம்மா பாத்திரம் அபாரமானது. அதுவும் இப்படி பரந்த மனம் இருப்பது அபூர்வ நிகழ்ச்சியாக இல்லாமல் சாதாரண நிகழ்ச்சியாக காட்டப்படுவது இன்னும் மனதை நெகிழ வைத்தது. கணவனுக்கு துண்டு இல்லையே என்று கொஞ்சம் தடுமாறும் அம்மாவிடம் வந்திருக்கும் ‘ராஜாவுக்கு’ துண்டைக் கொடு என்று குழந்தை மங்கம்மாள் சொல்லும் இடம் ஒரு மாஸ்டர் டச்.

இன்று ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற சொல்வடை எல்லாருக்கும் புரியுமா? தீபாவளிக்கு ‘ராஜா’ வருவது இன்னும் நடைமுறையில் உள்ளதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: அழகிரிசாமி பக்கம்