Skip to content

நிஜமும் நிழலும்

by மேல் நவம்பர் 17, 2015

சொல்வனத்தில் என் சிறுகதை ஒன்று வெளியாகி இருக்கிறது. சொல்வனம் ஆசிரியர்களுக்கு என் நன்றி. முடிந்தால் படித்துப் பாருங்கள்!

இது நிஜ சம்பவம். ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் என்று ஒன்றை மறந்துபோனது, சமாளிக்கப் பார்த்தது, மனைவியிடம் பொய் சொன்னது எல்லாம் நடந்து ஒரு பத்து வருஷம் இருக்கும். யார் அந்தக் கணவன் என்று சொல்வதற்கில்லை. அப்போதிலிருந்தே இதை கதையாக எழுத வேண்டும் என்று ஆசைதான். மனித இயல்பைத் தோலுரித்துக் காட்டிவிட வேண்டும், பால்வண்ணம் பிள்ளை லெவலில், பாயசம் லெவலில் சிறுகதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பத்து வருஷ முயற்சிக்குப் பிறகு அலுத்துப் போய் வந்த வரை போதும் என்று சொல்வனத்துக்கு அனுப்பினேன். என் அதிர்ஷ்டம், அவர்கள் நிராகரிக்கவில்லை.

இரண்டு மூன்று நண்பர்கள் இந்தச் சிறுகதை சுஜாதாவின் நிஜத்தைத் தேடி சிறுகதையை நினைவுபடுத்துவதாகச் சொன்னார்கள். அப்படி நினைவுபடுத்தக்கூடாது என்பதும் இந்த பத்து வருஷ முயற்சியில் அடங்கும். 🙂 நிஜத்தைத் தேடி பால்வண்ணம் பிள்ளை லெவலுக்கு ஓரிரு மாற்று குறைவுதான், ஆனாலும் நல்ல இலக்கியம்தான். என்ன செய்வது, நம்ம திறமை இலக்கியம் அளவுக்கு இன்னும் போகவில்லை.

என் கண்ணில் நான் எழுதியது இலக்கியம் இல்லை. விகடன் தரத்துக்கு நல்ல சிறுகதை, அவ்வளவுதான். சிறுகதையின் தொழில் நுட்பம் (craft) நன்றாகக் கைவந்திருந்தால் இன்னும் கொஞ்சம் polished ஆக வந்திருக்கலாம். அந்தத் தொழில் நுட்பம் எதிர்காலத்தில் கைவந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சிறுகதையின் கலை (art) – இந்தக் கருவை இலக்கியமாக மாற்றும் விதம் – கைகூடுமா என்று தெரியவில்லை. இப்போதைக்கு கருவை கதையாக மாற்ற முடிகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

நிஜ சம்பவம் என்று சொல்லி இருந்தேன். வெ.சா.வும் இப்படி ஒரு நிஜ சம்பவத்தை நினைவு கூர்கிறார். சிலருக்கு நேரடி அனுபவம், பலர் கேள்விப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுஜாதாவும் நானும் மட்டும்தான் கதை எழுதி இருக்கிறோமா என்ன? வேறு ஏதாவது நினைவு வருகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

Advertisements

From → Writings

3 பின்னூட்டங்கள்
 1. Sujata’s story and your’s are not similar.He has added a lot of extraneous
  info, to boost the length! your’s is crisp and precise. Congrats. Bala

  Like

 2. படித்தேன். கதை இயல்பாகவே இருந்தது. எல்லார் வாழ்விலும் நடக்கக் கூடிய சம்பவம் தான். அபராதம் கட்டி விட்டு மனைவி அல்லது உறவுகளிடம் பொய் சொல்லி ஜம்பம் அடிக்கும் ஆட்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் 🙂

  கீழ்கண்ட இந்த ஒரு வரி மட்டுமே கதையில் செயற்கையாக, சற்றே துருத்திக் கொண்டு இருந்தது.

  //பாலாஜியும் விடவில்லை. கடைக்காரர் ஒருவரிடம் மாற்றி ஐந்து ரூபாய் நாணயமாகவே 245 ரூபாயைத் திருப்பித் தந்தார்.//

  வெ.சா. சொன்ன சம்பவக் கதை நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி.

  Like

 3. பாலா, ரமணன், கதை உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சி! ரமணன், 5 ரூபாய் நாணயம் செயற்கையாக இருந்தால் அது என் குறை. ஏனென்றால் அதுவும் நடந்த ஒன்று. 🙂

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: