இந்தத் தளத்துக்கு வருபவர்களுக்கு கௌரி கிருபானந்தன் என்பது பரிச்சயமான பேர். தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மூச்சுவிடாமல் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் கிருபானந்தனும் பெரிய இலக்கிய ரசிகர். அவரும் சில நண்பர்களும் (சுந்தரராஜன் என்ற பேரை அடிக்கடி பார்த்தேன்) சேர்ந்து குவிகம் என்ற இலக்கிய அமைப்பை சில மாதங்களாக நடத்தி வருகிறார்கள். மாதம் ஒரு முறை சந்தித்து இலக்கியம் பற்றி பேசுகிறார்கள். அவரது வார்த்தைகளிலேயே:
சிறிய அளவில் இலக்கிய நிகழ்ச்சிகள் (பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பவர்களாக இருக்க வேண்டும் (என்பது முக்கிய நோக்கத்துடன்) நடத்தி வருகிறோம்.
நன்கு சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
குவிகத்தின் தளத்தை இங்கே காணலாம். தி.ஜா., பிரபஞ்சன், அசோகமித்ரன் படைப்புகளைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சாரு நிவேதிதா, பிரபஞ்சன், திருப்பூர் கிருஷ்ணன், அழகியசிங்கர் என்று பலர் விருந்தினராக வந்து சிறப்பித்திருக்கிறார்கள். சிறுகதைத் திருவிழா என்று ஒன்றை நடத்தி பரிசுகளும் அளித்திருக்கிறார்கள். சென்னையில் இருப்பவர்கள் போய்த்தான் பாருங்களேன்!
இந்த தளத்தின் உண்மையான லாபம் கௌரி, கிருபானந்தன், ரெங்கசுப்ரமணி, கேசவமணி, பாஸ்டன் பாலா (நிறைய பேர் விட்டுப் போயிருக்கிறது…) போன்ற அன்பர்களின் அறிமுகம்தான். ஒரு முறை கூட இன்னும் சந்திக்கவில்லை, இருந்தாலும் சஹிருதயர்கள் என்பது தெளிவு…
தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய நிகழ்ச்சிகள்