இந்தத் தளத்துக்கு வருபவர்களுக்கு கௌரி கிருபானந்தன் என்பது பரிச்சயமான பேர். தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மூச்சுவிடாமல் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் கிருபானந்தனும் பெரிய இலக்கிய ரசிகர். அவரும் சில நண்பர்களும் (சுந்தரராஜன் என்ற பேரை அடிக்கடி பார்த்தேன்) சேர்ந்து குவிகம் என்ற இலக்கிய அமைப்பை சில மாதங்களாக நடத்தி வருகிறார்கள். மாதம் ஒரு முறை சந்தித்து இலக்கியம் பற்றி பேசுகிறார்கள். அவரது வார்த்தைகளிலேயே:
சிறிய அளவில் இலக்கிய நிகழ்ச்சிகள் (பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பவர்களாக இருக்க வேண்டும் (என்பது முக்கிய நோக்கத்துடன்) நடத்தி வருகிறோம்.
நன்கு சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
குவிகத்தின் தளத்தை இங்கே காணலாம். தி.ஜா., பிரபஞ்சன், அசோகமித்ரன் படைப்புகளைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சாரு நிவேதிதா, பிரபஞ்சன், திருப்பூர் கிருஷ்ணன், அழகியசிங்கர் என்று பலர் விருந்தினராக வந்து சிறப்பித்திருக்கிறார்கள். சிறுகதைத் திருவிழா என்று ஒன்றை நடத்தி பரிசுகளும் அளித்திருக்கிறார்கள். சென்னையில் இருப்பவர்கள் போய்த்தான் பாருங்களேன்!
இந்த தளத்தின் உண்மையான லாபம் கௌரி, கிருபானந்தன், ரெங்கசுப்ரமணி, கேசவமணி, பாஸ்டன் பாலா (நிறைய பேர் விட்டுப் போயிருக்கிறது…) போன்ற அன்பர்களின் அறிமுகம்தான். ஒரு முறை கூட இன்னும் சந்திக்கவில்லை, இருந்தாலும் சஹிருதயர்கள் என்பது தெளிவு…
தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய நிகழ்ச்சிகள்
I met Kirubanandhan yesterday. Awesome person
LikeLike
எங்கிருந்தாலும், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் இந்தத் தளம் நம்மை பிணைத்துவிடுவது பல சமயங்களில் என்னை நெகிழவைத்துவிடும்.
LikeLike
kuvigam means what? Tamil i learnt in 1953 is not good enough! bala
LikeLike
குவிகம் என்பது புதியதாக அமைத்த பெயர். குவிவோம் – தீர்க்கமாகப் பார்ப்போம் (gathering – focus) என்ற இரு கருத்துக்களையும் மையமாக வைத்து அமைத்தது. தற்சமயம் குவிகம் இணையதளப் பத்திரிகை, குவிகம் இலக்கியவாசல் (மாத இலக்கியக் கூட்டம் ) , குவிகம் பதிப்பகம், குவிகம் இல்லம் (சென்னை தி நகர் இந்தி பிரசார் சபா அருகில் இலக்கியத்திற்காக ஒரு இடம்) ஆகியவை இயங்கி வருகின்றன.
LikeLike
பாலா, எனக்கும் குவிகம் என்றால் என்னவென்று தெரியவில்லை. கிருபானந்தன் சாரே சொன்னால்தான் உண்டு…
கேசவமணி, 100% ஆமோதிக்கிறேன்…
LikeLike
உங்கள் தளத்தில் குவிகம் இலக்கியவாசல் அமைப்பைப்பற்றி எழுதியமைக்கு நன்றி.
குவிகம் இலக்கிய வாசலின் அமைப்பாளர் திரு சுந்தரராஜன், குவிகம் என்றொரு மின்னிதழ் வெளியிட்டுவருகிறார். (http://kuvikam.tumblr.com/). குவிகம் என்பது கருத்துக்களும் எண்ணங்களும் குவிதல் என்னும் பொருளில் ‘குவிகம்’ அவரே உருவாக்கிய சொல். கூட்டங்களுக்கு இலக்கியவாசல் என்ற பெயரை தேர்வு செய்தபோது வைகறை இலக்கியவாசல் என்றொரு அமைப்பும் இருப்பதால் குவிகம் இலக்கிய வாசல் என்று நாமகரணம் செய்தோம்.
மாதம் தோறும் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் அறிவிப்பும் நடைபெற்ற நிகழ்வுகளின் பதிவும் http://ilakkiyavaasal.blogspot.in/ தளத்தில் வெளியிட்டு வருகிறோம். சென்னை நண்பர்கள் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் –
LikeLike
எஸ்கேஎன், நீங்கள்தான் கிருபானந்தனா? சென்னை வரும்போது கட்டாயம் குவிகம் நிகழ்ச்சிக்கு வருகிறேன்…
LikeLike
நண்பர் எம் ஷ்யாம் சுந்தர் இன்று, இப்பொழுது இந்தத் தளம் பற்றிக் கூறினார்.
உங்கள் முயற்சிகளுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்!
LikeLike
கௌதமன், வாழ்த்துக்களுக்கு நன்றி!
LikeLike