ஒரு லெவலில் பார்த்தால் இந்தப் புத்தகம் வெறும் gimmick-தான். சில சமயம் gimmicks-களும் என்னைக் கவர்கின்றன. 🙂
சிம்பிளான கரு. ஆர்தர் ப்ரௌன்ஜான் இரட்டை வாழ்வு வாழ்கிறான். ஒரு வாழ்க்கையில் மனைவி க்ளேருக்கு அடங்கிய கணவன். அடிக்கடி பயணம் செய்யும் வேலை பார்ப்பவன். அதாவது அப்படி சொல்லிவிட்டு இன்னொரு ஊரில் dating agency நடத்தும் மேஜர் மெல்லனாக பாதி நாள் இன்னொரு வாழ்க்கை. க்ளேரின் பணம் வேண்டும். என்ன செய்வது? மேஜர் மெல்லன் க்ளேரைக் கொலை செய்துவிடுவதாக ஜோடிக்கிறான். கொலைக்கப்புறம் மெல்லனை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் துரதிருஷ்டம், ஆர்தர் மெல்லனை கொன்று பிணத்தை ஒழித்துவிட்டதாக ஆர்தர் மேலேயே சந்தேகம் விழுகிறது!
இலக்கியம் எல்லாம் இல்லை, நல்ல வணிக நாவல் மட்டும்தான். சைமன்ஸின் நடை tongue in the cheek பாணியில் நன்றாக அமைந்திருக்கிறது. இரட்டை வேஷக் கணவன், அவனுடைய ‘கம்பெனிகள்’, அடக்கி ஆளும் மனைவி எல்லாவற்றையும் கோட்டோவியங்களாக திறமையாகக் காட்டுகிறார். புன்னகை எழுந்து கொண்டே இருந்தது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்