என் சிறு வயதில் கிருபானந்த வாரியாரின் குரல் மிகவும் பழக்கமான ஒன்று. அனேகமாக ஒலிபெருக்கியில், அபூர்வமாக நேரடியாக. கோவில், திருவிழா என்றால் பின்னணியில் இந்தக் குரலைக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க முடியாது. அவரும், புலவர் கீரனும், பாலகிருஷ்ண சாஸ்திரிகளும் புகழ் பெற்று விளங்கினார்கள். அதுவும் வாரியாரின் குரல் அவருக்கான ஸ்பெஷல் சொத்து.
அவர் எழுதிய புத்தகம் என்று ஒன்று இணையத்தில் கிடைத்தது. ராமகாவியம். இலக்கியம், மறுவாசிப்பு என்றெல்லாம் இல்லை. ராமாயணத்தை அவர் பாணியில் சொல்கிறார், அவ்வளவுதான். படிக்கும்போதும் அவரது குரல்தான் கேட்டுக் கொண்டே இருந்தது. அவரே நேரடியாக சொல்வது போல இருந்தது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மின்பிரதியை இணைத்திருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்