சுஜாதா தேர்ந்தெடுத்த அவரது படைப்புகள்

sujatha1978-இல் படிகள் என்ற சிற்றிதழுக்காக சுஜாதா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் ஒரு கேள்வி:

படிகள்: நாங்கள் அல்லது இன்னொருவர் உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன்.

சுஜாதா: பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும்.

  • தனிமை கொண்டு (தனிப் புத்தகம்)
  • ஜன்னல் (கசடதபற)
  • காணிக்கை (கல்கி)
  • செல்வம் (கலைமகள்)
  • முரண் (சுதேசமித்திரன்)
  • நகரம் (தினமணிக்கதிர்)
  • எதிர்வீடு (கணையாழி)
  • அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்)
  • வீடு (தினமணிக்கதிர்)
  • ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்)
  • அம்மோனியம் பாஸ்ஃபேட் (தினமணிக்கதிர்)
  • பார்வை (தினமணிக்கதிர்)

இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியத் தரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writing என்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.

இந்த சிறுகதைகளுக்கான மின்பிரதிகள் கிடைக்குமா? குறிப்பாக ‘தனிமை கொண்டு’. சுட்டிகள் கிடைத்தால் சொல்லுங்கள், இணைத்துவிடலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

7 thoughts on “சுஜாதா தேர்ந்தெடுத்த அவரது படைப்புகள்

    1. tkb1936rlys, சுஜாதாவின் இந்தப் பட்டியலில் அம்மோனியம் ஃபாஸ்ஃபேட் எல்லாம் வேலைக்காகாது. அவரே சொன்ன மாதிரி இதெல்லாம் representative of his writing என்று சொன்னாரோ என்னவோ?

      Like

  1. With due respect to the late author, I have some reservations about his talent. Yes I agree that he was immensely talented in the initial days but towards the end his writings and serial stories became a dull affair – especially the one he wrote in Vikatan – I didn’t feel like continuing to read it. It was about a girl who stays in a hostel away from her warring parents and according to the story, becomes pregnant without her knowing what sexual intercourse is about. I mean – rather than the content, the attempt to sensationalise was more visible. I do not know what made him constantly write about a woman’s bosom – right from “Karaiyellam Chenbagapoo” to “Rattam Ore Niram”. I heard that in real life he was very timid. When Seshan asked him to go to Kashmir, he started sweating!
    I have read some of his short stories and yes they make for good reading. But as he grew old I thought that he became more repetitive. Today if you read “kanavu thozhirsalai” you feel what was the big deal about it? Why was it hyped so much!
    Even in a simple story like – “Gayatri” Sujata has not spared the heroine and the vivid and gory details of the sexual escapades of the couple on the first night are at times repulsive. Why did he have to rely so much on sex to titillate the audience? I fail to understand.

    Jeeno is his discovery and we all appreciate it. But at times I feel that he was put on a pedestal more than what he deserved.

    Like

    1. சந்திரப்பிரபா, என் கருத்தில் சுஜாதா வணிக எழுத்தாளர்களில் முதன்மையானவர். இலக்கியமும் படைத்திருக்கிறார். ஆனால் ஒரு புனைவு எழுத்தாளராக அவரது relevance எண்பதுகளோடு முடிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.