ஏமாற்றிய ஜெயமோகன்

s.ramakrishnanஎஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல் ஒரு அதீத, அமானுஷ்ய சூழ்நிலையை சித்தரிக்கிறது. நன்றாகவே சித்தரிக்கிறது. ஆனால் அமானுஷ்ய சூழ்நிலை என்பது மட்டுமே உள்ள, அதைத் தாண்டாத சிறுகதைகளை எழுத்தாளர் பார் எனக்கு எப்படி எல்லாம் எழுதத் தெரியும் என்று பீற்றிக் கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. நேரடியாக, ஆனால் ஆரவாரம் இல்லாத எம்.ஆர். ஜேம்ஸ் போன்றவர்களின் எழுத்துக்களே என்னைக் கவர்கின்றன. மேலும் எம்.ஆர். ஜேம்ஸே இலக்கியம் படைத்துவிடவில்லை, சும்மா ஒரு genre-இல் சிறந்த படைப்புகளை எழுதி இருக்கிறார் என்று எண்ணும்போது இந்தச் சிறுகதை எல்லாம் முக்கியமானவையே அல்ல.

நான் இந்தச் சிறுகதையைப் படிக்க ஒரே காரணம்தான் – ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் தாவரங்களின் உரையாடல் இடம் பெறுகிறது. ஆனால் அவரே இந்தச் சிறுகதையை ‘ஒட்டுமொத்தமாக எழுதப்பட்ட காகித மதிப்புக்கூட இல்லாத குப்பை’ என்று வேறொரு இடத்தில் காட்டமாக விமர்சிக்கிறார். பட்டியல் போட்டபோது இருந்த உங்கள் கருத்துக்கள் மாறிவிட்டனவா என்று கேட்டபோது அவர் ‘இந்தக் கதை எனக்கு முக்கியமானதல்ல, ஆனால் தமிழில் பொதுவாக முக்கியமானது, நான் என் அழகியல் நோக்கு மட்டுமே வெளிப்படும் பட்டியலைப் போடவில்லை’ என்று விளக்கம் அளித்தார். விளக்கம் என்னை திருப்திப்படுத்தவில்லை.

jeyamohanஎதற்காக ஜெயமோகனின் பட்டியலை முக்கியமானதாகக் கருதுகிறோம்? ஒரே காரணம்தான் – அவரது ரசனை மீதுள்ள நம்பிக்கை. குப்பைகளைத் தேர்ந்தெடுக்கமாட்டார் என்று எண்ணுகிறோம். அதனால்தான் அவரது பட்டியலில் உள்ள சிறுகதைகளைத் தேடிப் பிடித்து படிக்கிறோம். காகித மதிப்பு கூட இல்லாத குப்பை, ஆனால் தமிழில் முக்கியமான சிறுகதை என்ற இரண்டு எண்ணங்களும் ஒரே நேரத்தில் ஒருவர் மனதில் இருக்க முடியாது. அன்று அப்படி எண்ணினேன், இன்று என் எண்ணம் மாறிவிட்டது என்றால் சரி. இல்லை முன்னோடி முயற்சி, இன்று காலாவதி ஆகிவிட்டது என்றால் அது வேறுவிதம். குப்பை, ஆனால் தமிழில் ஒரு genre-இன் பிரதிநிதி, இல்லை ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி, இல்லை ஒரு இயக்கத்தின் பிரதிநிதி, அதனால் முக்கியமானது என்றால் கல்கி, துப்பறியும் சாம்பு, ரா.கி. ரங்கராஜன், பாக்யம் ராமசாமி, சிவசங்கரி, கோவி. மணிசேகரன் எல்லாரும் கூட பிரதிநிதித்துவப்பட வேண்டும்.

வாசகன் எதற்காக தன் நேரத்தை வீணடித்து குப்பைகளை படிக்க வேண்டும்? ஜெயமோகன் ஆடுவது போங்காட்டம் என்றே நான் கருதுகிறேன். குறைந்தபட்சம் அவர் ஒரு disclaimer ஆவது போட்டிருக்க வேண்டும். மிச்சம் இருக்கும் சிறுகதைகளில் எது உண்மையிலேயே அவர் பரிந்துரைப்பது, எதெல்லாம் அவர் ஏதோ கல்லூரி பேராசிரியர் மனநிலையில் தேர்ந்தெடுத்தது என்று எப்படி கண்டுபிடிப்பது?

ஜெயமோகனிடம் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நேரடியாக கேட்டுவிடுவேன், இங்கிதம் எல்லாம் பார்க்கமாட்டேன். அவரும் அனேகமாக விளக்கம் சொல்லிப் பார்ப்பார், நான் விடாமல் வாதித்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கிடக்கிறான் பிராந்தன் என்று விட்டுவிடுவார். 🙂 இந்த விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. எனக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அவரது சிறுகதைத் தேர்வு பட்டியலை நான் சந்தேகத்துடன்தான் அணுகுகிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், ஜெயமோகன் பக்கம், எஸ்.ரா. பக்கம்

3 thoughts on “ஏமாற்றிய ஜெயமோகன்

 1. RV,
  Jeyamohan is more than a guru to me. I learnt a lot from him and he has influenced my thought process so much. But in cases like these (and there are few more – not only in recommendations), I differ. In my view, there is nothing that comes without rough edges – literally nothing. So I am learning to live with it. Just like you – when you say “I will approach his recommendations with a doubt” 🙂 Of course I have nor shared a new thought, but you are not alone in this. 🙂

  Like

 2. வாசிப்பு கூடக்கூட இந்தச் சந்தேகம் எழுவது இயல்பே. பட்டியல் என்பது ஒரு வசதிக்குத்தானே அல்லாமல் அதுவே முடிவானது அல்ல. வாசிப்பில் மேற்கொண்டு நகர்வதற்கு நமக்கு உதவுவதோடு அதன் வேலை முடிந்துவிடுகிறது. முன்பு பட்டியல்கள் நீண்ட காலம் தாக்குப்பிடித்தன. இப்போதோ உடனுக்குடன் மாற்றம் செய்யவேண்டிய தேவை எழுகிறது. எல்லா கதைகளும் எக்காலத்துக்கும் பட்டியலில் நிலைத்து நின்றுவிட முடியாது என்றே தோன்றுகிறது. அப்படியும் நிலைத்து நிற்கும் சகாவரம் பெற்ற கதைகள் அபூர்வமானவையே.

  Like

 3. ஸ்ரீனிவாசன், ஜெயமோகன் எனக்கும் சஹிருதயர்தான். ஆனால் இந்த விஷயத்தில் வேறுபடுகிறோம். கேசவமணி, மாறுதல் என்பது பிரச்சினை இல்லை. ஆனால் அவருடைய விளக்கம் என் மனம் மாறிவிட்டது என்பதாக இல்லை.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.