பிபிசி பட்டியல் போட்டிருக்கிறது. இவற்றில் பாதியை நான் பார்த்திருக்கிறேன்.
வசதிக்காக டாப் டென் திரைப்படங்களின் பட்டியல் கீழே. இந்தப் பத்தில் இரண்டைத் தவிர (சிட்டிசன் கேன், சிங்கின் இன் த ரெய்ன்) தவிர மிச்ச எல்லாம் ஏதோ ஒரு நாவல், சிறுகதை, நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது! படைப்புகளையும் சேர்த்து கீழே பட்டியல் இட்டிருக்கிறேன்.
- Citizen Kane (Orson Welles, 1941) – நேரடியான திரைப்படம்
- The Godfather (Francis Ford Coppola, 1972) – மரியோ பூசோவின் புகழ் பெற்ற நாவல்
- Vertigo (Alfred Hitchcock, 1958) – போய்லோ-நார்செஜாக் எழுதிய ஃப்ரெஞ்ச் நாவல்
- 2001: A Space Odyssey (Stanley Kubrick, 1968) – ஆர்தர் சி. க்ளார்க்கின் நாவல். நாவலும் திரைப்படமும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டவை
- The Searchers (John Ford, 1956) – ஆலன் லெ மே எழுதிய Searchers (1954)
- Sunrise (FW Murnau, 1927) – ஹெர்மன் சுடர்மன் எழுதிய Excursion to Tilsit
- Singin’ in the Rain (Stanley Donen and Gene Kelly, 1952) – நேரடியான திரைப்படம்
- Psycho (Alfred Hitchcock, 1960) – ராபர்ட் ப்ளோக்கின் நாவல் பற்றிய என் பதிவு
- Casablanca (Michael Curtiz, 1942) மர்ரே பர்னட மற்றும் ஜோன் அலிசன் எழுதிய நாடகம் – Everybody Comes to Rick’s
- The Godfather Part II (Francis Ford Coppola, 1974) – நேரடியான புத்தகம் இல்லை, ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் காட்ஃபாதர் புத்தகத்தின் தொடர்ச்சிதான் இது.
நல்ல திரைப்படத்துக்கு அடிப்படை நல்ல கதைதான் என்ற என் எண்ணம் மேலும் உறுதிப்படுகிறது…
தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்