எனக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம்தான். இருந்தாலும் விஷயம் தெரிந்தவர்கள் தேவதச்சனை நல்ல கவிஞர் என்கிறார்கள். முடிந்தால் போய் வாருங்கள்!
நண்பர் க்ரிஸ் ஆண்டனியின் புத்தகமும் வெளியாகிறதாம். அந்த நாவலை எழுதத் தொடங்கிய காலத்தில் நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் அவரது குடும்பம் இந்தியாவில் இருந்தது, அடிக்கடி அழைப்பார். 🙂 இப்போது அவரது புத்தகம் வெளியாகிறது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவரே ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தவர், தன் உறவினர்கள் இன்னும் மீன் பிடிக்கிறார்கள் என்று சொல்லுவார். மீன் பிடிப்பதைப் பற்றி, கடற்கரை கிராமங்களைப் பற்றி, பரதவர் வாழ்க்கையைப் பற்றி மிக அருமையான அவதானிப்புகளை எடுத்துச் சொல்லுவார். நானெல்லாம் மீன் கிடைத்தால் சாப்பிடுவதோடு சரி, அதனால் ஆவென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்