Skip to content

கணேஷ்-வசந்த் கதை: “பேசும் பொம்மைகள்”

by மேல் திசெம்பர் 24, 2015

sujathaபேசும் பொம்மைகள் நாவலில் என்னவோ குறைகிறது.

கணேஷ்-வசந்த் சாகசங்கள் உண்டு. அறிவியல் புனைகதைக்குத் தேவையான சுவாரசியமான premise உண்டு. இருந்தாலும் ஏதோ குறைகிறது.

தொடர்கதை format-இன் குறைகள்தான் காரணம் என்று நினைக்கிறேன் (குங்குமம் பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது). பத்திரிகை ஆசிரியர் சொல்லும்போது கதையை முடித்தாக வேண்டும் என்பது பிரச்சினைதான். ஆனால் வாரப் பத்திரிகைகள் இல்லை என்றால் சுஜாதா ஏது?

ganesh-vasanthஏறக்குறைய cliche ஆகிவிட்ட கருதான். மனிதர்களின் நினைவுகளை வேறு உருவத்துக்கு மாற்ற ஆராய்ச்சி நடக்கிறது. மனிதர்களையே அவர்கள் சம்மதம் இல்லாமல் பயன்படுத்துவதால் ரகசியமாக நடக்கிறது. இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் மாயா. மாயாவின் அக்கா மேனகாவும் அங்கேதான் வேலை பார்த்தாள், ஆனால் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் காதலனோடு அமெரிக்கா போய்விடுகிறாள். அவ்வப்போது தொலைபேசுகிறாள், அத்தோடு சரி. நிறுவனம் சாரங்கபாணி, நரேந்திரநாத் என்று இரு குழுக்களாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. மாயா மீதும் பரிசோதனைகள் நடக்கின்றன. திடீரென்று மாயா அலுவலகத்திலேயே தங்க நேரிடுகிறது. கணேஷ்-வசந்த் நுழைகிறார்கள், சாகசங்கள் புரிகிறார்கள்.

கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

Advertisements
2 பின்னூட்டங்கள்
  1. குறை என்பது, அந்த டவுன்லோட் சமாச்சாரம்தான்.அவரின் பல கதைகளில் இது போன்ற பல விஷயங்களை பேசியிருப்பதும், நாம் அதை கால வரிசையின்றி படித்ததும்தான். இறுதிப் பகுதி ஒரு குழப்பத்தில் டக்கென்று முடித்தது போலவே இருக்கின்றது.

    Like

    • ரெங்கா, ‘பேசும் பொம்மைகள்’டக்கென்று முடிந்திருப்பது வாஸ்தவம்தான்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: