Skip to content

சுஜாதாவின் “தீண்டும் இன்பம்”

by மேல் திசெம்பர் 25, 2015

sujathaசுஜாதாவுக்கு நிறைய ஆசை. பதின்ம வயதில் கர்ப்பம் ஆகும் பெண்கள், சிறு குழந்தைகளை மேலை நாடுகளில் தத்துக் கொடுப்பதில் உள்ள தகிடுதத்தங்கள், எய்ட்ஸ் நோயாளிகளின் சோகங்கள், எமிலி டிக்கின்ஸனின் கவிதைகள் எல்லாவற்றையும் பற்றி எழுத ஆசைப்பட்டிருக்கிறார். அத்தனையையும் ஒரு சிறு நாவலில் கலந்துகட்டி அடித்துவிட்டார்.

theendum_inbamகல்லூரியில் படிக்கும் பதினேழு வயதுப் பெண் பாட்டுப் போட்டியில் வெல்கிறாள். அதைக் கொண்டாட நடத்தும் பார்ட்டியில் தற்செயலாக உடலுறவு. கர்ப்பம். காலேஜ் ரௌடி ரகுவுக்கு இந்தக் கர்ப்பம் பற்றி விஷயம் தெரிந்து உறவு கொண்டவனை அடிக்க அவன் இறந்தே போகிறான். கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்கிறாள். ஒரு “தொண்டு அமைப்பு” அவளை குழந்தை பெற்றுக்கொண்டு தத்துக் கொடுக்கும்படி மனதை மாற்றுகிறது. ஆனால் குழந்தையைப் பார்த்த பிறகு பாசம் ஏற்பட்டு அதை தத்துக் கொடுக்க மறுக்கிறாள். சில நாட்களில் குழந்தை வளர்ப்பதில் உள்ள சிரமங்களைப் புரிந்து கொண்ட பிறகு அவள் மனம் மாறி தத்துக் கொடுக்க ஒத்துக் கொள்கிறாள். நடுவில் ரகுவுக்கு எய்ட்ஸ் என்று தெரிய வருகிறது. குழந்தையப் பார்த்துக் கொள்ள சிரமப்படும்போது அவளுக்கு உதவி செய்ய முன்வருபவன் ரகு மட்டுமே. எய்ட்ஸ் என்று பழைய நண்பர்கள் அவனைத் தவிர்க்கும்போது இவள் மட்டும் அவனைப் புரிந்து கொள்கிறாள்.

சுஜாதா இந்த நாவலை சிறப்பாக கொண்டு வந்திருக்கலாம். நல்ல பாத்திரப் படைப்புகள். பல நல்ல காட்சிகள். (உறவு கொள்ளும் காட்சி, காதல் இல்லை என்று ஒரு நண்பன் விலகுவது…) சிறப்பான நாடகமாக எழுதி இருக்கலாம். ஆனால் தொடர்கதை என்ற format அவரை அமுக்கிவிடுகிறது. பல விஷயங்களைப் போட்டு குழப்பிவிடுகிறார். வடிவகச்சிதம் அமையவில்லை. தொடர்கதை format திறமை உள்ளவர்களையே கவிழ்த்துவிடக் கூடியது என்பதற்கு நல்ல உதாரணம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

Advertisements

From → Sujatha

2 பின்னூட்டங்கள்
  1. Chandraprabha permalink

    இந்தக் கதையை பாதி படித்தேன். அலுப்புத் தட்டியது. சுஜாதாவின் ஸ்டைல் போர் அடிக்க ஆரம்பித்து விட்டது, He had clearly lost his touch…

    Like

    • சந்திரப்ரபா, எண்பதுகளின் முற்பகுதிக்குப் பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் டச்சை இழந்து கொண்டிருந்தார் என்றுதான் நினைக்கிறேன். (அல்லது எனக்கு வாசிப்பு அனுபவம் பெருக ஆரம்பித்துவிட்டது…)

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: