Feel-good story.
பணக்கார வீட்டு ஐந்து வயதுக் குழந்தை விம்முவுக்கு சேரியில் குப்பை பொறுக்கும் பெண் வேலாயியோடும் அவள் நாய் பூக்குட்டியோடும் நட்பு ஏற்படுகிறது. அப்பா அம்மா வழக்கம் போல பிரித்துவிட, விம்முவுக்கு வேலாயியின் நினைவில் ஜுரம் எல்லாம் வருகிறது. டாக்டர் இது ஏக்கம்தான், வேலாயியை அவள் கண்ணில் காட்டுங்கள் என்கிறார். வேலாயியின் குடும்பம் எங்கேயோ போய்விடுகிறது. அப்பா அம்மா போலீஸ் நண்பர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் விம்மு விடுவதாக இல்லை, ஒரு நாள் இரவு அவர்களைத் தேடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறாள். எப்படியோ விம்முவைக் கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டிவந்து அவளுக்கு அறிவுரை எல்லாம் சொல்கிறார்கள். ஆனால் வேலாயிக்கும் அதே நிலைதான், அவளைக் கூட்டிக் கொண்டு அவள் அப்பா விம்முவைப் பார்க்க வருகிறார். தோழிகள் சந்தித்து சுபம்!
கதை முழுவதும் விம்முவின் கண்ணோட்டத்திலிருந்துதான் சொல்லப்படுகிறது. அதிலிருந்து விலகுவதே இல்லை. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். விமரிசனம் என்றால் ஒன்றுதான். இது குழந்தைகளுக்கான நாவல் என்று சொல்லப்பட்டாலும் இது பெரியவர்களுக்கான நாவல்தான். குழந்தையின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.
பெரிதாக எழுதவே இஷ்டமில்லை. இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும், ஆராயவே கூடாது. படித்துக் கொள்ளுங்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்