Skip to content

சுஜாதாவின் ‘ஒரே ஒரு துரோகம்’

by மேல் திசெம்பர் 28, 2015

sujathaவாரப் பத்திரிகை தொடர்கதைதான். சாவியில் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்ததாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை இலக்கியம்தான். மைனர் க்ளாசிக் என்றே சொல்லலாம். ஏன் பிரபலமாக இல்லை என்று தெரியவில்லை.

சாதாரண கரு. ஊரை ஏமாற்றும் கணவன். அவனை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் மனைவிக்கு அவன் சுயரூபம் மெதுமெதுவாகத் தெரிகிறது. எப்படி எதிர்கொள்கிறாள்?

திருப்பித் தரும் எண்ணம் அறவே இல்லாமல் கடன் வாங்கி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வாய்ச்சவடால் சம்பத்; காலேஜில் பேராசிரியையாக இருக்கும், முதிர்கன்னியாகிக் கொண்டிருக்கும் ராஜி; (கதை எழுதப்பட்ட காலத்தில் 26-27 வயதே முதிர்கன்னிதான்) சம்பத் வேலைக்குப் போகும் மனைவி இருந்தால் பணப் பிரச்சினை இருக்காது என்று பொய் மேல் பொய் சொல்லி ராஜியை மணம் செய்து கொள்கிறான். இன்னொரு காரணம் பழைய காதலி சுந்தரி ராஜி வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பது. திருமணத்துக்குப் பிறகு சுந்தரியை மயக்கி தொடுப்பாக வைத்துக் கொள்ளத் திட்டம். பொய் மேல் பொய் தொடர்ந்து நடக்கிறது. ராஜிக்கு சந்தேகம் வந்து, உறுதியும் ஆனவுடன்?

இலக்கியம் ஆக்குவது பாத்திரப் படைப்புதான். சம்பத்தும் ராஜியும் நிஜமானவர்கள். பக்கத்துக்குப் பக்கம் அவர்கள் பாத்திரங்களை செதுக்கி இருக்கிறார். ஒரே சம்பவத்தை பல சமயம் இருவர் பார்வையிலும் விவரிப்பது இன்னொரு சிறப்பான உத்தி. ஏமாற்றுபவன் கண்ணோட்டத்திலிருந்தும் ஏமாறுபவள் கண்ணோட்டத்திலிருந்தும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்.

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் என்று ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை உண்டு. இதே கருதான். ஏமாற்றுக்கார கணவன், ஏமாறும் மனைவி, எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதை. ஜெயகாந்தனின் மதுரமும் சுஜாதாவின் ராஜியும் இருவருமே இலக்கிய நாயகிகள்தான், ஆனால் எத்தனை வித்தியாசம்?

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

From → Sujatha

3 பின்னூட்டங்கள்
  1. சுஜாதாவின் நாவல்களில் எனக்கு இது நம்பர் ஓன். கரையெல்லாம் செண்பகப்பூ மிக நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது மர்ம நாவலாக மாறியவுடன் அதில் லயிப்பு குறைந்து போய்விட்டது.
    சுவாரஸ்யத்திற்காக கதை பண்ணவேண்டிய நிர்பந்தம் கொஞ்சமும் இல்லாததால் ‘ஒரே ஒரு .. ‘ மிகச் சிறப்பாக வந்துள்ளது என்பது என் கணிப்பு

  2. prunthaban permalink

    கொஞ்சம் இதே கருவில் எழுதப்பட்ட வண்ணத்துப் பூச்சி வேட்டையும் எனக்கு மிகவும் பிடித்தது. அதுவும் இலக்கியம் என்று சொல்லும் தரம் கொண்ட எழுத்து என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய கருத்து.

  3. எஸ்கேஎன், பிருந்தாபன், ‘ஒரே ஒரு துரோகம்’ எல்லாம் யார் நினைவிலும் இருக்காது என்று நினைத்தேன். உங்கள் மறுமொழிகள் சந்தோஷப்படுத்துகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: