2015-இன் ஆங்கில வார்த்தை ஒரு Emoji

emoji_face_with_tears_of_joy

ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 2015-இன் வார்த்தையாகத் தேர்ந்தெடுத்திருப்பதை A,B..Z என்ற எழுத்துக்களால் எழுதிவிட முடியாது. 🙂 ஏனென்றால் அது ஒரு Emoji!

மொழி மாறிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் இருக்க முடியாது. அடுத்த ஓரிரு தலைமுறைகளில் ‘You’ என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங் ‘u’ என்று மாறிவிடும் என்று நினைக்கிறேன்.

Emoji என்பதற்கு இணையான தமிழ் வார்த்தை இனிமேல்தான் உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பரிந்துரைப்பது – ‘பட எழுத்து’. நண்பர்களுக்கு வேறு ஏதாவது தோன்றுகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழி