கருத்துக் கணிப்புகளின் முடிவுகள்

போன வருஷம் நாலைந்து கருத்துக் கணிப்புகளை பதிவுகளில் இட்டிருந்தேன். அவற்றில் மூன்றுக்குத்தான் statistically significant என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஓட்டுகள் விழுந்திருக்கின்றன. அவற்றின் முடிவுகள்:

சிலிகன் ஷெல்ப் தளத்தை 21 பேர் தினமும் பார்ப்பதாகவும், 24 பேர் வாரம் இரண்டு மூன்று முறை பார்ப்பதாகவும் 9 பேர் எப்போதாவது வருவதாகவும், 11 பேர் தளம் பக்கமே வராமல் மின்னஞ்சலில் படித்துக் கொள்வதாகவும் ஓட்டளித்திருக்கிறீர்கள். போன வருஷத்தில் குத்துமதிப்பாக ஒரு நாளைக்கு 95 பேர் வருவதாகவும் 270 ஹிட் கிடைப்பதாகவும் வோர்ட்பிரஸ் தளத்தின் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன்.

எழுத்தாளன் நினைத்ததை விட வாசகன் என்ன பெற்றான் என்பதுதான் முக்கியம் என்று 74 பேரும் எழுத்தாளன் உணர்த்த விரும்புவதை உணர்ந்து கொள்பவனே சிறந்த வாசகன் என்று 17 பேரும் ஓட்டளித்திருக்கிறீர்கள். முக்கால்வாசிப் பேர் நம்ம கட்சிதான்.

பா.ரா.வின் சிறுகதை ஓரினச்சேர்க்கையாளர்களை தாக்குகிறது என்று 24 பேரும், இல்லை என்று 19 பேரும் ஓட்டளித்திருக்கிறீர்கள். ‘தெரியலியேப்பா’ என்று 14 பேர் கையை விரித்துவிட்டீர்கள். அதாவது எல்லாரும் அவரவர் இஷ்டப்படி புரிந்து கொண்டிருக்கிறோம். 🙂

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்