Skip to content

எம்.வி. வெங்கட்ராமின் ‘என் இலக்கிய நண்பர்கள’

by மேல் ஜனவரி 8, 2016

mv. venkatramஎம்.வி.வி.யின் இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைத்தது. தி.ஜா., க.நா.சு. மௌனி ஆகியோரைப் பற்றி எழுதி இருக்கிறார். சுட்டி கொடுத்த நண்பர் ரமணனுக்கு நன்றி!

thi_janakiramanதி.ஜா. உயிர் நண்பர். லங்கோட்டி யார். கும்பகோணத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். எம்விவி நெருக்கடியில் இருந்த காலகட்டத்தில் தி.ஜா. வீட்டில் தங்கி இருக்கிறார். என்னதான் நண்பன் என்றாலும் இன்னொருவர் வீட்டில் மாதக் கணக்கில் தங்குவதில் எம்விவிக்கு சில தயக்கங்கள் இருந்தாலும் தி.ஜா.வுக்கு மனதில் எந்தக் கேள்வியும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி நட்பு கிடைப்பது அபூர்வம். இந்தப் பகுதி என்னை நெகிழ வைத்தது.

ka.naa.su.க.நா.சு.வோடு எப்போதும் கருத்துக்களை வைத்து சண்டை. ஆனால் பரஸ்பர மரியாதை நிறைய இருந்திருக்கிறது. அவரிடம் தொடர்கதையை வாங்கிப் போட படாத பாடு பட்டிருக்கிறார். க.நா.சு. தனக்குப் பிறகு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் visiting professor ஆக எம்விவி வர வேண்டும் என்று முயன்றிருக்கிறார், இன்னொரு நெகிழ்வான சம்பவம்.

mowniமௌனியின் சிறுகதைகளால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறார். அவர் மீது வியப்பு கலந்த மரியாதை (admiration tinged with wonder). அவரிடம் கதைகள் வாங்கிப் போட நிறைய முயற்சி செய்திருக்கிறார். எக்கச்சக்கமாக திருத்த வேண்டி இருக்கிறதே என்று வியப்படைந்திருக்கிறார். அதை தற்செயலாக வெளியேவும் சொல்லிவிட, மௌனி புண்பட்டு அதை மறுக்க, இன்னொரு குடுமிப்பிடி சச்சரவு. இந்த தொடர்பு வட்டாரத்தில் இருபது பேர் இருந்தால் அதிகம், ஆனால் இரண்டாயிரம் சச்சரவு! மௌனி பகுதி புன்னகைக்க வைத்தது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் தி.ஜா., க.நா.சு. மௌனி என்ற ஆளுமைகள் அல்ல. ஒரு காலகட்டத்தில் இலக்கியத்தைப் பற்றி இந்த முக்கியமான படைப்பாளிகள் என்னென்ன கனவ கண்டார்கள், அவற்றை நனவாக்குவதில் எத்தனை நடைமுறை சிரமங்கள் இருந்தன, லௌகீகப் பிரச்சினைகள் அவர்களை எப்படி எல்லாம் அலைக்கழித்தன என்பதற்கான ஒரு புரிதல் கிடைப்பதற்குத்தான். அவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எம்விவி பக்கம், தி.ஜா. பக்கம், க.நா.சு. பக்கம், மௌனி பக்கம், தமிழ் அபுனைவுகள்

5 பின்னூட்டங்கள்
  1. link for the book pl. Bala

  2. முதல் வரியில் புத்தகம் என்ற வார்த்தை மீது க்ளிக் செய்யுங்கள்….

  3. தி.ஜா. சேர்ந்து தியானம் கற்றுக் கொண்ட அமைப்பு எது, யாரந்த இந்தோனேஷிய குரு என்றறிய ஆர்வமாக இருக்கிறது.
    ’தியானம் கற்றுக் கொள்ள வா’ என்று தி.ஜா., எம்.வி.வியை அங்கே கூட்டிக் கொண்டு போனதும், அங்கே நிகழ்ந்ததும் ஓர் அவல நகைச்சுவை.

    • ரமணன், உங்களுக்கு தியானத்தில் ஆர்வமுண்டா?

      • ஆர்வம் முன்பு இருந்தது. இப்போது செய்யும் வேலைகளே, வாசிக்கும் புத்தகங்களே, கேட்கும் இசையே தியானமாக இருக்கிறது. அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று பம்மாத்து பண்ணினாலும் உண்மைக் காரணம் சோம்பல் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: