சின்ன வயதில் எனக்குத் தெரிந்திருந்த ஒரே பதிப்பகம் வானதி பதிப்பகம்தான். ஒரு டிபிகல் பிராமண மத்தியதரக் குடும்பத்தில் கிளாசிக் என்று கருதப்படும் ராஜாஜியின் ராமாயணம்+மகாபாரதம், கல்கியின் நாவல்கள், சாண்டில்யன் நாவல்கள், காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் போன்ற புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். சர்ச்சைகள், புரட்சிகள் இல்லாத புத்தகங்கள். ஜி. நாகராஜன் மாதிரி ஒரு எழுத்தாளரின் சிறுகதை இந்தப் பதிப்பகத்திலிருந்து வெளிவர சான்சே இல்லை. 🙂 அது திருநாவுக்கரசின் தரப்படுத்துதலே.
அதனால் ஒன்றும் குறைவில்லை. அதற்கு ஒரு பெரிய தேவை இருந்த காலம் அது. அன்றைய புத்தகங்களை ஒப்பிடும்போது தரமான பதிப்புகள்தான். (வாசகர் வட்டம், க்ரியா இரண்டுதான் இதை விட சிறப்பாக பதிப்புகளை வெளியிட்டன.) இன்றும் அது போன்ற ஒரு பதிப்பகத்துக்கு தேவை இருக்கத்தான் செய்கிறது. அவருக்கு என் அஞ்சலி.
வழக்கம் போல அவர் எழுதிய புத்தகம் ஒன்றுக்கு முன்னால் எழுதிய அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன்.
வானதி திருநாவுக்கரசு தன் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறார். ஐம்பது பக்கம் கூட எழுதமுடியவில்லை போலிருக்கிறது. சரி என்று தான் பழகிய, சந்தித்த பெரிய மனிதர்களைப் பற்றி எல்லாம் memoirs ஆக மாற்றிவிட்டார். புத்தகமும் சுவாரசியமாக இருக்கிறது.
நிறைய புத்தகங்களைப் போட்டிருக்கிறார். சில சமயம் எழுத்தாளரின் அனுமதியைக் கூட கேட்காமல் போட்டிருக்கிறார். கிருபானந்த வாரியார் அதற்காக இவரிடம் முறைத்துக் கொண்டிருக்கிறார். லாப நோக்கம் உண்டு, ஆனால் “நல்ல” புத்தகங்களைப் பதிக்க வேண்டும் என்று ஒரு உந்துதல் இருந்திருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார், குன்றக்குடி அடிகளார், வாரியார், ராஜாஜி, பத்மா சுப்பிரமணியம், மு.மு. இஸ்மாயில் என்று தேடிப் பிடித்து போட்டிருக்கிறார். ராஜாஜியின் மகாபாரதமும் ராமாயணமும் விற்றிருக்கின்றன, மிச்ச எல்லாம் இரண்டாவது பதிப்பு கூட வந்ததா என்று தெரியவில்லை.
செட்டியார் ஜாதித் தொடர்புகள் இவருக்கு ஓரளவு உதவி செய்திருக்கின்றன. சின்ன அண்ணாமலை, ஏவிஎம் செட்டியார், எம்.ஏ.எம். ராமசாமி, ராஜா சர் முத்தையா செட்டியார் என்று பலருடனும் நல்ல தொடர்பு இருந்திருக்கிறது.
கோவி. மணிசேகரன், ஜெகசிற்பியன் என்று நான் பயந்து நடுங்கும் சில எழுத்தாளர்களோடு நல்ல தொடர்பு இருந்திருக்கிறது. எழுத்தாளர்களை பொதுவாக மரியாதையாக நடத்துபவர் என்று தெரிகிறது.
சுவாரசியமான memoirs. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
வானதி திருநாவுக்கரசு ரொம்ப எளிமையான ஆசாமி. தன்னை அதிகம் வெளிகாட்டிக் கொள்ள விரும்பாதவர். அதுதான் சுயசரிதை எழுதும் போது பாதியில் ட்ராக் மாறி விட்டார். இது ஏதோ ஒரு இதழில் (சாவி ஆர் இதயம்?) படித்த மாதிரி ஞாபகம்.
LikeLike
வானதி திருநாவுக்கரசு அவர்கள் நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க பதிப்பாளர்.
//நான் பயந்து நடுங்கும் எழுத்தாளர்கள் // ரசிக்கும்படியான சொற்றொடர்
LikeLike
கிருபானந்தன் சார், கோவியார், ஜெகசிற்பியனை விட நான் பயப்படுவது அகிலனுக்குத்தான். 🙂 அது என்னவோ அகிலன் எனக்கு ஒரு pet peeve ஆகவே மாறிவிட்டார்…
LikeLike