2016 பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்

முழு பட்டியல் இங்கே.

வழக்கம் போல இலக்கியத்துக்கான விருதுகளைப் பெற்றவர்கள் பற்றி சிறு குறிப்புகள் கீழே. சிலிகன் ஷெல்ஃபில் வேறென்ன எழுதப் போகிறேன்?

பொதுவாக இந்த முறை இலக்கியத்துக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பைரப்பாவைத் தவிர ஹல்தர் நாக் என்ற ஒரிய கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. பிரஹலாத் சந்திர டாசா, காமேஸ்வரம் பிரம்மா (அஸ்ஸாமி), ரவீந்திர நகர் எல்லாம் எழுத்தாளர்களா, கல்வியாளர்களா, பத்திரிகையாளர்களா என்று கூடத் தெரியவில்லை.

யார்லகடா லக்ஷ்மிபிரசாத், ராமானுஜ தாத்தாசார்யா, புஷ்பேஷ் பந்த் மூவரும் புத்தகம் எழுதி இருந்தாலும் எழுத்தாளர்கள் இல்லை.

யார்லகடா லக்ஷ்மிபிரசாத் (தெலுகு) பத்மபூஷண் விருது பெற்றிருக்கிறார். அவர் எழுதி இருக்கும் புத்தகங்களைப் பார்த்தால் இது கல்விக்கு கொடுக்கப்பட்ட விருதோ என்று சந்தேகமாக இருக்கிறது. (மன கவர்னர் நாராயண திவாரி!) கௌரி கிருபானந்தனுக்கு ஏதாவது தெரிந்தால்தான் உண்டு.

ராமானுஜ தாத்தாசார்யா சமஸ்கிருத ஸ்காலர் என்று தெரிகிறது. உரைகள் இல்லை இல்லை பாஷ்யங்கள் எழுதி இருக்கிறார்.

புஷ்பேஷ் பந்த் பேராசிரியர். இந்திய உணவைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்