பத்மபூஷண் விருது பெற்ற தெலுகு எழுத்தாளர்

yarlagadda_lakshmiprasadநேற்றுதான் இவரைப் பற்றி கௌரி ஏதாவது சொன்னால் உண்டு என்று எழுதி இருந்தேன். உடனே டாணென்று ஒரு அறிமுகத்தை அனுப்பி இருக்கிறார். ஓவர் டு கௌரி!

நவம்பர் 24, 1953ல் பிறந்த டாக்டர் யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், ஆந்திர பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பிரிவில் பேராசிரியராக பணி புரிந்தவர். ஹிந்தியில் எம்.ஏ. பட்டமும், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பி.ஹெச்.டி.யும் பெற்றவர். பல தெலுங்கு காப்பியங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். தெலுங்கில் முப்பத்திரண்டு படைப்புகளை படைத்திருக்கிறார். ராஜ்யசபாவின் அங்கத்தினராக (1996- 2002) பணி புரிந்திருக்கிறார். கலாச்சார இலக்கிய பிரதிநிதியாக பல வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்.

பிஷம் சானி எழுதிய “தமஸ்” என்ற ஹிந்தி நாவலின் தெலுகு மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாடமி விருது 1992ல் கிடைத்துள்ளது. பின்னர், 2009ல் அவர் எழுதிய “திரௌபதி” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. (இது போலவே அய்யப்ப பணிக்கரின் மலையாள படைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக 2003லும், இலையுதிர்காலம் நாவலுக்காக 2007லும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்று இருப்பவர் திரு நீல. பத்மநாபன்.)

வி. ஸ. காண்டேகரின்யயாதி‘ என்ற நூல்தான் ‘திரௌபதி’ நாவலுக்கு உந்துதல் என்று திரு லக்ஷ்மிபிரசாத் கூறியுள்ளார். நாவல் வெளியானதும் பாத்திரப் படைப்பு திரௌபதிக்கு களங்கம் விளைவிக்கிறது என்று பெரும் சர்ச்சைக்குள்ளானது. சாஹித்ய அகாடமி விருது கிடைத்ததும் சர்ச்சை மீண்டும் உயிர் பெற்றது. இப்புத்தகத்திற்கு மாற்றாக ‘சௌஷீல்ய திரௌபதி‘ (நற்குணவதி திரௌபதி) என்ற பெயரில் திரு. கஸ்தூரி முரளிகிருஷ்ணா என்பவர் எழுதி இருக்கிறார்.

திரு லக்ஷ்மிபிரசாத் பத்மஸ்ரீ விருதை 2003ல் பெற்றிருக்கிறார். 2016ல் பத்மபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பதிவுகள்