Skip to content

ஜெயமோகன், பத்மஸ்ரீ, விருதுகளின் அவசியம்

by மேல் ஜனவரி 30, 2016

jeyamohanஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை நிராகரித்ததுதான் இன்றைக்கு ஹாட் நியூஸ்.

என் கண்ணில் அது பிழைதான். ஆனால் ஜெயமோகன் கண்களுக்கு அது எப்படி தெரிகிறது என்பதுதான் முக்கியம். அது அவரது தனிப்பட்ட முடிவு, இதில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமையில்லை.

ஆனால் என் கண்ணில் ஏன் அது பிழையாகத் தெரிகிறது என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். தெரிந்தவருக்கு, நண்பருக்கு எல்லாவற்றையும் விட தகுதியானவருக்கு விருது கிடைப்பதில் உள்ள சந்தோஷம் போய்விட்டதே, இந்த விருதின் மேல் அவரே விழையும்போதும் நடக்கவில்லையே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய கௌரவத்தை என்னவோ சாக்கு சொல்லி புறம் தள்ளிவிட்டாரே, என்பதெல்லாம் இருந்தாலும் முக்கியமான காரணம் நான் அவரை ஒரு வாசகனாகப் பார்ப்பதுதான். அவர் என் கண்ணில் முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக ஒரு எழுத்தாளர். நண்பர், தெரிந்தவர் எல்லாம் அதற்கப்புறம்தான்.

அது தெளிவான பிறகு சாஹித்ய அகடமி பற்றி அவரோடு உள்ள கருத்து வேறுபாட்டின் தொடர்ச்சிதான் இதுதான் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. தமிழ் எழுத்தாளர்களில் மேதை என்று சொல்லக் கூடிய மூவரில் ஒருவர். மற்ற இரண்டு பேரையும் (புதுமைப்பித்தன், அசோகமித்ரன்) அண்டை மாநிலத்து இலக்கிய வாசகர்களுக்கு கூடத் தெரியாது. மொழிபெயர்க்கப்பட்டால்தான் தெரிய வரும், அப்படி மொழிபெயர்க்கப்படுவதற்கு இந்த விருதுகள் பல சமயம் கிரியா ஊக்கியாக (catalyst) செயல்படுகின்றன. யாரும் முனைந்து தற்காலத் தமிழ் இலக்கியத்தை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதாக எனக்குத் தெரியவில்லை. தீவிர தமிழ் இலக்கிய வாசகர்கள் எல்லாருக்கும் காண்டேகர் பெயர் தெரிந்திருப்பது எப்படி? நல்ல தமிழ் இலக்கியம் பிற இந்திய வாசகர்களை அடைய வேண்டும், அதற்கு உதவக் கூடிய ஒரு விருதை (என் கண்ணில்) சொத்தைக் காரணங்களுக்காக நிராகரிப்பது எனக்கு தவறவிடப்பட்ட வாய்ப்பாகத்தான் தெரிகிறது.

அவருடைய கண்ணோட்டம் வேறாக இருக்கிறது. மனக் குழப்பங்கள் நீங்க வேண்டும், இதை விடவும் பெரிய விருதுகள் எதிர்காலத்தில் அவரைத் தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

From → Awards, Jeyamohan

One Comment
  1. விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் ஜெயமோகன். எழுத்து அவருக்கு தவம். சுவாசம். படைப்பா, விருதா என்று வரும்போது படைப்புக்குத் தான் முன்னுரிமை. விருதுகளை விட அவர் தன் படைப்பிற்கு முக்கியத்துவம் அதிகம் என்கிறார். அது உண்மையும் கூட.

    வருங்காலத்தில் ‘பத்ம ஸ்ரீ விருது பெற்ற எழுத்தாளர்’ என்று அழைக்கப்படுவதை விட மகாபாரதத்தை ‘வெண்முரசாக’த் தந்தவர் என்று அழைக்கப்படுவதையே அவர் விரும்புவார்.

    அவரது மறுப்பு நமக்கு மனக்குறையாக இருந்தாலும் அவரளவில் அது நியாயமே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: