Skip to content

ராபர்டோ சாவியானோவின் ‘Gomorrah’

by மேல் பிப்ரவரி 9, 2016

கொமொரா நான் பரிந்துரைக்கும் புத்தகம் அல்ல.

angelina_jolie_white_suitஇருந்தாலும் ஒரு கட்டுரை ஏறக்குறைய இலக்கியம். இந்த மாஃபியாதான் ஏறக்குறைய இத்தாலிய ஃபாஷன் தொழிலைக் கட்டுப்படுத்துகிறது. அர்மானி, வெர்சாசி எல்லாருக்கும் நேபிள்ஸ் ஏரியாவில்தான் துணிகள் தைக்கப்படுகின்றனவாம். போலி அர்மானி துணிகளும் இங்கேதான். அப்படி தைப்பவர்களிலும் பாலோ என்ற ஒரு தையல்காரன் புகழ் பெற்றிருக்கிறான். ஒரு நாள் அவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏஞ்சலினா ஜோலி ஒரு வெள்ளை சூட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வது காட்டப்படுகிறது. சூட்டைத் தைத்தவன் பாலோ. அவனுக்கு அளவுகள் கொடுக்கப்பட்டு ஒரே மாதிரி மூன்று சூட்டைத் தைத்திருக்கிறான். ஏஞ்சலினா ஜோலிக்குத்த்தான் தைக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. பாலோவின் புகழ் எல்லாம் உள்ளூரில்தான். தான் தைத்த சூட்டை அணிந்துகொண்டு ஏஞ்சலினா ஜோலி வலம் வருவதைக் காணும்போது அவனுக்கு மூச்சே நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு அவன் தையல் தொழிலையே கைவிட்டுவிடுகிறான்!

அந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்குமா என்று நானும் நாலு நாளாக தேடிப் பார்க்கிறேன், கிடைக்கமாட்டேன் என்கிறது…

கொமொராவின் பேசுபொருள் இத்தாலிய மாஃபியா. குறிப்பாக நேபிள்ஸ் பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் மாஃபியா. புத்தகத்தில் படித்த சில காட்சிகள் எப்போதும் நினைவிருக்கும். ஹெராயின் போதை மருந்தை மற்ற filler-களோடு கலந்து அதை அதி தீவிர போதை மருந்து பயனாளர்களை வைத்து பரிசோதிப்பார்களாம். எப்படி? கடும் வறுமையில் இருக்கும் பயனாளர்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குப் போய் அங்கே யாராவது வருவார்களா என்று பார்ப்பார்களாம். எப்படியாவது ஹெராயின் கிடைத்தால் போதும் என்று நிச்சயமாக யாராவது வருவார்கள். அப்படி வந்த ஒருவனுக்கு ஊசியைப் போட்டு, அவன் நுரை தள்ளி சாகிறான். செத்துவிட்டான் என்று இவர்கள் கிளம்புகிறார்கள். செத்தவனின் தோழி அவன் முகத்தின் மேல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கிறாள், அவன் பிழைத்துக் கொள்கிறான்! மாண்ட்ரகோரா என்ற ஊரில் மாஃபியா தலைவன் ஏறக்குறைய ஆட்சி செய்கிறான். அங்கே போதை மருந்துகள் விற்கப்படக் கூடாது என்று ஆணை! அந்த ஊரில் யாருக்கும் ஆணுறை அணிய வேண்டியதில்லை. அப்படி தப்பித் தவறி யாருக்காவது எய்ட்ஸ் என்று சந்தேகம் இருந்தால் அவள்/அவன் கொல்லப்படுவான்! அதனால் இந்த மாதிரி நோய் எல்லாம் பரவ வாய்ப்பே இல்லை!

மாஃபியாவுக்கும் பிற பன்னாட்டுத் தொழில்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பணத்தைப் புரட்டுதல், கையிலிருக்கும் பணத்தை முதலீடு செய்தல், சட்டத்துக்கு உட்பட்டு முதலீடு செய்தல், அடுத்த லெவலில் இருப்பவர்கள் தனியாக தொழில் செய்யாமல் பார்த்துக் கொள்ளுதல், பிற நாட்டு மாஃபியாக்கள் தங்கள் ஏரியாவில் வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் என்று ஏறக்குறைய அதே கவலைகள். என்ன, வன்முறை, குற்றங்கள் மூலம் கிடைக்கும் வருமானம். இத்தாலியில் ஈட்டும் பணத்தை வைத்து ஸ்காட்லாண்டில் நியாயமான தொழில் செய்து முக்கியத் தொழிலதிபராக எல்லாம் ஆகி இருக்கிறார்கள். எதிர்த்துப் போராட முன் வந்தது ஒரே ஒரு பாதிரி. சுட்டுக் கொல்லப்படுகிறார்.

ஆனாலும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். உள்ளூர் கிரிமினல்களைப் பற்றி நிறைய விவரிக்கிறார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், தாவூத் இப்ரஹிம் என்றால் கூட கொஞ்சம் ஆர்வம் இருக்கும். இத்தாலிய மாஃபியா அடித்துக் கொள்வதைப் பற்றி எல்லாம் வந்தால் வேகவேகமாக பக்கத்தைப் புரட்டிவிட்டேன். அதுதான் நிறைய இருக்கிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

Advertisements

From → Non-Fiction

7 பின்னூட்டங்கள்
 1. உங்கள் விமர்சனம் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கூட்டுகிறது.

  //ஆனாலும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். உள்ளூர் கிரிமினல்களைப் பற்றி நிறைய விவரிக்கிறார்//

  இதே உணர்வுதான் boardwalk empire என்கிற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரை பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. பிறகு கொஞ்சம் மெனக்கெட்டு அமெரிக்க மாஃபியா வரலாற்றைப் பற்றி தெரிந்து கொண்டதும் எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

  இந்த புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி

  Like

 2. Raj Chandra permalink

  ஆர்வி,

  ரொபர்டோ சாவியானோ-வின் இன்னொரு புத்தகமான Zero, Zero, Zero-வை அடிப்படையாக வைத்து நான் எழுதிய ஒரு கட்டுரை: http://solvanam.com/?p=42258

  Like

  • ராஜ், சாவியானோவின் ஜீரோ ஜீரோ ஜீரோ பற்றி எழுதியதை இன்றுதான் படிக்க முடிந்தது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். சொல்வனம் ரவிஷங்கரோடு உங்களுக்கு பழக்கம் உண்டா?

   Like

 3. Raj Chandra permalink

  ஆர்வி,

  நன்றி. ரவிஷங்கரோடு தொடர்பு உண்டு. நேரிலும் சந்தித்துப் பேசுகிறேன். என் வாசிப்பை நெறிப்படுத்தியவர். அவருக்கும், எனக்கும் கொள்கையளவில் நல்ல விவாதங்கள் நடக்கும். எவ்வளவு வேறுபட்டாலும் நட்புடன் அணுகுவார். வாரம் ஒருமுறையாவது தான் படித்த நல்லக் கட்டுரைகளை அனுப்புவார். நிறைய எழுதச் சொல்லி அவரும், பாஸ்டன் பாலா-வும் சொல்கிறார்கள். நேரம்தான் இல்லை.

  பாஸ்டனில் பாலா, ரவிஷங்கர், அர்விந்த் கருணாகரன், நம்பி (பிஏகே உறவினர்), விக்ரம் என்று ஒரு குழு உருப்படியாகப் பேச இருக்கிறது.

  Like

Trackbacks & Pingbacks

 1. புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்
 2. 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்! | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: