இடைவெளி

சிலிகன் ஷெல்ஃபில் ஒரு பதிவை எழுதி ஒரு வாரமாவது இருக்கும். நேரக்குறைவு, வேலைப்பளு, தேங்கிக் கிடக்கும் வீட்டு வேலைகள், ஏற்கனவே எழுதி வைத்திருந்தவை எல்லாவற்றையும் பதித்துவிட்டேன் என்று காரணங்களை சொல்ல முடியும்தான். ஆனால் உண்மையான காரணம் சோம்பேறித்தனம்தான். யாரோ சொன்னது போல சோம்பேறிக்குத்தான் எப்போதும் நேரம் குறைவாக இருக்கிறது.

மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்தான். ஆனால் பெரிதாக ஸ்டாக் இல்லை, அதனால் வாரம் இரண்டு பதிவு (வியாழன் ஒன்று, ஞாயிறு ஒன்று) என்று ஆரம்பிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்