கௌரி கிருபானந்தனுக்கு சாஹித்ய அகடமி விருது

Gowri_Kribanandanமன நிறைவான செய்தி ஒன்று – தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மூச்சு விடாமல் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் கௌரி கிருபானந்தனுக்கு சாஹித்ய அகடமி மொழிபெயர்ப்புக்கான விருதை அறிவித்திருக்கிறது.

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. Deserving candidate கௌரவிக்கப்படுவது, எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பணி செய்பவர் கௌரவிக்கப்படுவது பெரிய திருப்திதான், இல்லையா? விருது கமிட்டி உறுப்பினர்களான மீனாட்சி, புவியரசு, திலகவதி ஆகியோருக்கு ஒரு ஜே!

இந்த விருது ஓல்கா எழுதிய விமுக்தா சிறுகதைத் தொகுப்பை மொழிபெயர்த்தற்காக தரப்பட்டிருக்கிறது. விமுக்தா சிறுகதையை இங்கே படிக்கலாம்.

கௌரிக்கு மேலும் மேலும் விருதுகளும் கௌரவங்களும் தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பக்கம், விருதுகள்