வாத்யாரே, நீ மேதை! – அசோகமித்ரன்

asokamithranபொதுவாகவே அசோகமித்ரனின் சிறுகதைகள் அற்புதமானவை. அவற்றுக்குள்ளும் அதிஅற்புதமானது இந்தச் சிறுகதை.

தமிழ் இலக்கியத்தோடு பரிச்சயம் உள்ளவர்கள் எவரும் இந்தச் சிறுகதையை இது வரை படிக்காமல் இருந்திருக்க முடியாது. அப்படித் தப்பித் தவறி படிக்காதவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்தக் கதையை முதன்முதலாக படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, தவறவிடாதீர்கள்!

ஒரு க்ஷணம் (நொடி என்றால் பத்தவில்லை), நக்மா, moment-ஐக் காட்டுவதில் அசோகமித்ரன் எப்போதுமே மன்னன். இந்தக் கதையிலும் அப்படித்தான். டகர்பாயிட் காதர் புலியாக மாறும் அந்த ஒரு நொடிதான் கதை. அந்த நொடியைப் பற்றி பல யுகங்கள் பேசிக் கொண்டே இருக்கலாம்.

சிறுகதைகளின் எழுதப்படாத விதிகள் எத்தனை இதில் மீறப்படுகின்றன என்று பல முறை யோசித்திருக்கிறேன். இந்தச் சிறுகதையில் கதை எங்கே இருக்கிறது? ஒருவன் நன்றாக புலி வேஷம் போட்டான் என்பதெல்லாம் இந்த மனிதர் கையில் எப்படி இத்தனை உன்னதமான சிறுகதையானது? கதையின் உச்சக்கட்டம் கதையின் நடுவிலே வருகிறது, ஓ.ஹென்றி ட்விஸ்ட் மாதிரி கடைசி வரியில் அல்ல. கதைக்கு ஆரம்பம், முடிவு எல்லாம் இருக்கிறது. ஆனால் அவை எதுவும் கதைக்குத் தேவை இல்லை. சம்பிரதாயமான ஆரம்பம் தேவையா, வச்சுக்கோ என்று இளக்காரத்துடன் போகிற போக்கில் நாலு பாரா எழுதிய மாதிரி இருக்கிறது!

வாத்யாரே, நீ மேதை!

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்