Skip to content

திலீப்குமார் எழுதிய ‘ரமாவும் உமாவும்’

by மேல் மே 4, 2016

dilip_kumar கொஞ்சமே எழுதி இருந்தாலும் திலீப்குமார் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். பல வருஷங்களுக்குப் பிறகு அவரது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டு நூலகங்களில் கிடைக்கிறதோ என்னவோ சான் ஃப்ரான்சிஸ்கோ நூலகத்தில் கிடைத்தது!

நான்கு சிறுகதைகள். எந்தச் சிறுகதையும் நான் தமிழ்ச் சிறுகதை anthology என்று ஒன்று தொகுத்தால் அதில் இடம் பெறாதுதான். ஆனால் நல்ல சிறுகதைகள், தொகுப்பைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ரமாவும் உமாவும் சிறுகதையில் இரண்டு நாற்பது வயது குஜராத்திப் பெண்கள் ஒரு குஜராத் பெண்கள் சுற்றுலாவில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஒரு அறை கொடுக்கப்பட்டிருக்கிறது, அங்கே உறவு கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் வெறுமை – here we go around the prickly pear at 4’o clock in the morning வெறுமையை வெளிக் கொணர்கிறார்.

ஒரு எலிய கதை கச்சிதமாக எழுதப்பட்ட கதை. பொறியில் மாட்டிய எலிக்கும் கடவுளுக்கும் சம்பாஷணை. நன்றாக முடித்திருந்தார்.

ஆசையும் தோசையும் அவரது புகழ் பெற்ற கடிதம் சிறுகதையின் prequel. இங்கே மிட்டு மாமா தன் நண்பர் கன்ஷ்யாம் முன்னால் அவமானப்படுத்தப்படுகிறார்.

எனக்குப் பிடித்தது ‘ஒரு குமாஸ்தாவின் கதை‘ கோவையில் ஒர் முஸ்லிம் கீழ்மத்திய வர்க்கக் குடும்பம். சாதாரணக் குடும்பம். அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள். குடும்பத் தலைவன் கலவரத்தில் கொல்லப்படுவதோடு முடிகிறது. மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட கதை.

எனக்கு குறையாகத் தெரிந்தது – playing to the gallery என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். திலீப்குமார் இந்தக் கதைகளில் அதை நிறையவே நடத்துகிறார். அதுவும் ரமாவும் உமாவும் சிறுகதையில் கதைசொல்லி தன் பாத்திரங்களோடு பேசுவதெல்லாம் புன்னகைக்க வைத்தாலும், அதெல்லாம் வெறும் playing to the gallery-தான். ஒரு எலிய கதையில் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வார் – ‘ஜெயமோகன் நான் வருஷத்துக்கு அரைக்கதைதான் எழுதறேன்பார்.’ அந்த நேரத்தில் அது புன்னகைக்க வைத்தாலும் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? கதையை பலவீனப்படுத்துகிறது…

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்

Advertisements

From → Dilip Kumar

4 பின்னூட்டங்கள்
 1. G.Sundar permalink

  Nothing wrong in playing to the gallery. Ultimately we have to reach and entertain the audience.

  Like

 2. எஸ் கே என் permalink

  திலீப் குமாரின் ‘தீர்வு’, ‘கடிதம்’ மற்றும் ‘மூங்கில் குருத்து’ என்னைக் கவர்ந்த கதைகள்

  Like

 3. G.Sundar permalink

  ஆர்வி! முகநூலில் இருக்கிறீர்களா? இருந்தால் உங்கள் முகநூல் ஐ.டி.யை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே.

  Like

 4. சுந்தர், ஃபேஸ்புக் டாட் காம்/rv.subbu
  எஸ்கேஎன், அவரது சிறந்த கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனக்கு இவற்றை விடவும் பிடித்தது ‘கடவு’

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: