Skip to content

நாடார்கள் பற்றி ஆய்வு

by மேல் மே 7, 2016

இன்று நாடார்கள் தமிழகத்தில் ஒரு பெரும் சக்தி. ஜாதி உணர்வை முன்னேற்ற சக்தியாக பயன்படுத்த முடியும் என்பதற்கு நாடார் ஜாதியினரைத்தான் ‘poster boys’ என்று சொல்ல வேண்டும். அவர்கள் ஜாதியால் ஒன்றுபடுவதற்கு குறுக்கே மதம் கூட நிற்பதில்லை. கிறிஸ்துவ நாடார் என்பது தமிழ்நாட்டு சூழலை அறியாதவர்களுக்கு oxymoron ஆக இருக்கலாம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘கிறிஸ்துவ நாடார்’ என்பதில் நாடார் என்ற வார்த்தைக்குத்தான் முன்னுரிமை.

நாடார்களின் எழுச்சி பற்றிய இந்தப் புத்தகத்தை – ‘Nadars of Tamil Nadu‘ – ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதி இருக்கிறார். பெர்க்லி பல்கலைக்கழகம் பதித்திருக்கிறது. ஹார்ட்க்ரேவ் உண்மையான ஆய்வாளர். இந்தப் புத்தகத்தில் commentary என்பது கிடையாது. தான் படித்து, பேட்டி கண்டு, நேரில் சென்று அறிந்த உண்மைகளைத் தொகுத்திருக்கிறார்.

நாடார்கள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் ஒன்றாகத் திரண்டு ஒரு சக்தியாக உருவெடுத்த வரலாறு மிகவும் சுவாரசியமானது. இந்தப் புத்தகமோ ஆய்வுப் புத்தகம். வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுக்கும் புத்தகம். கொஞ்சம் dry ஆகத்தான் இருக்கிறது. இருந்தாலும் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளின் சுவாரசியம் இதை என்னைப் பொறுத்த வரையில் unputdowanable புத்தகமாகத்தான் ஆக்குகிறது.

நாடார்கள் தென்கிழக்குத் தமிழகத்தில் – குறிப்பாக திருச்செந்தூர் பகுதிகளில் – பனைமரத்தை நம்பிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அவர்களை சாணார் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அனேக கிராமங்கள் நாடார்/சாணார் மட்டுமே வசித்த கிராமங்களாகத்தான் இருந்திருக்கின்றன. ஐந்து குடும்பங்கள் – அதில் ஒன்று இன்றும் பிரபலமாக இருக்கும் ஆதித்தன் குடும்பம் – முக்கால்வாசி நிலத்தை வைத்திருந்திருக்கிறது. அவர்கள்தான் நாடான்கள் – நாடார்கள் அல்ல, நாடான்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நாடார்/சாணார்களுக்குள் அவர்கள்தான் உயர்ந்த உள்ஜாதி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தேங்கிக் கிடந்திருக்கிறார்கள்.

நாடார்/சாணார்கள் சூத்திரர்களுக்குக் கீழே ஆனால் தலித்களுக்கு மேலே உள்ள ஒரு ஜாதியினராக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடார்களின் நிலை உயர்ந்த பின்னர் பிற்காலத்தில் தாங்கள் ஒரிஜினலாக க்ஷத்ரியர்கள்தான் என்று நிறுவ படாதபாடு பட்டிருக்கிறார்கள்.

மிஷனரிகளின் வரவுதான் நாடார்/சாணார் எழுச்சிக்கு உந்துவிசையாக இருந்திருக்கிறது. பல இடங்களில் முழு கிராமமே கிறிஸ்துவ மதத்துக்கு மாறி இருக்கிறது. எல்லாருமே கிறிஸ்துவர், ஆனால் எல்லாருமே ஒரே ஜாதி என்னும்போது பெரிதாக ஜாதி மத டென்ஷன்கள் உருவாகவில்லை. பெரிதாக எதிர்ப்பு இல்லை. கிறிஸ்துவ நாடார்கள் ஏறக்குறைய ஒரு உபஜாதியினராகத்தான் கருதப்பட்டிருக்கிறார்கள். திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. உயர்ந்த உள்ஜாதியினரான ஐந்து நாடான் குடும்பங்கள்தான் கொஞ்சம் எதிர்த்திருக்கின்றன. பின்னாளில் கால்ட்வெல் போன்றவர்கள் பெரிய தாக்கமாக இருந்திருக்கிறார்கள். (கால்ட்வெல்லின் ஆவண முயற்சிகளை மறுத்தும் புத்தகங்கள் வந்திருக்கின்றன)

கிறிஸ்துவ நாடார்கள் கிராமங்களுக்கு வெளியே செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பனை வெல்லத்தை வைத்து வியாபாரம் ஆரம்பித்திருக்கிறது. மெல்ல மெல்ல நிலை மாற ஆரம்பித்திருக்கிறது. வியாபாரம் வளர்ந்ததும் ஆறு ஊர்கள் – சிவகாசி, விருதுப்பட்டி, திருமங்கலம், சாத்தான்குடி, பாளையம்பேட்டை, அருப்புக்கோட்டை – நாடார்களின் மையங்களாக உருவாகி வந்திருக்கின்றன. உறவின்முறை என்ற அமைப்பு அவர்களை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது. நடுவில் மறவர்களோடு மட்டும் கொஞ்சம் தகராறு. மறவர்கள் சிவகாசி மீது 1899-இல் ஏறக்குறைய படையே எடுத்திருக்கிறார்கள். அதுவும் நாடார்கள் மறவனுக்குப் பிறந்திருந்தால் எப்போது வந்து தாக்குவாய் என்று சொல்லிவிட்டு தாக்கு, குறவனுக்குப் பிறந்திருந்தால் சொல்லாமல் தாக்கு என்று சவால் விட, இந்த தேதியில் இந்த நேரத்தில் வருவேன் என்று 5000 மறவர்கள் வந்திருக்கிறார்கள்.

நாடார் மஹாஜன சபை உருவாகி இருக்கிறது. மேலும் மேலும் பள்ளிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம் உயர்ந்தததும் தாங்களும் ‘உயர்ந்த ஜாதியினரே’ என்று நிறுவ முயற்சிகள். சாணார்கள் என்ற பெயரை ஒதுக்கி நாடார் என்ற பெயருக்கு மாறி இருக்கிறார்கள். கோவில் பிரவேசத்துக்கான முயற்சிகள். ஆனால் இவை எல்லாம் தாங்கள் இடைநிலை ஜாதியினர் என்று நிறுவத்தான், தங்களுக்குக் கீழே உள்ள தலித்களைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

தோள்சீலைக் கலகம் பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் அது நாயர்-நாடார் தகராறு, தமிழக நாடார் பெண்கள் போலவே அன்றைய திருவாங்கூர் நாடார் பெண்களும் மார்புத்துணி அணிய ஆரம்பித்தார்களாம். அந்தத் துணி எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதில்தான் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

சுயமரியாதை இயக்கம் நாடார்களை ஈர்த்திருக்கிறது. டபிள்யூ. பி. ஏ. சௌந்தரபாண்டியன் முக்கியத் தலைவர். ஆனால் காமராஜ் முதல்வர் ஆனதும் எல்லாம் நம்ம ஜாதிக்காரன் முதல்வர் என்ற பெருமையில் எல்லாம் அடித்துக் கொண்டு போய்விட்டது. இத்தனைக்கும் காமராஜ் தன் ஜாதிக்காரன் என்று ஒரு துரும்பைக் கூட அசைத்திருக்க மாட்டார்.

தி.மு.க.வும் அவர்களை ஈர்க்க ஆரம்பித்துவிட்டது என்று முடித்திருக்கிறார். புத்தகம் 1969-இல் எழுதப்பட்டது.

மிஷனரிகளையும் மத மாற்ற முயற்சிகளையும் எத்தனையோ விமர்சிக்கிறோம். ஆனால் நாடார்களைப் பொறுத்த வரையில் கிறிஸ்துவம்தான் அவர்கள் எழுச்சிக்கு உந்துவிசை. மதம் மாறினாலும் ஜாதி அவர்களது வேர்களை இன்னும் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: