அசோகமித்ரன் எழுதிய ‘யுத்தங்களுக்கிடையில்’

asokamithranஅசோகமித்ரன் என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்தான். ஆனால் அவரது எல்லா கதைகளும் எனக்கு புரிந்துவிடுவதில்லை. இது அப்படி புரியாத கதைகளில் ஒன்று “யுத்தங்களுக்கிடையில்“. What is the point of this novel? எனக்குப் பிடிபடவே இல்லை.சாதாரணமாகப் புரியாவிட்டால் ஜெயமோகனக் கோனாரைத்தான் கோனார் நோட்ஸ் கொடுங்கள் என்று கேட்பேன். ஆனால் அவர் இப்போது என் மேல் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார். 🙂 உங்கள் யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்!

புத்தகத்தைப் படிக்கும்போது என் ஒன்றுவிட்ட தாத்தா குடும்பம்தான் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. பிராமணக் குடும்பம். நிறைய பிள்ளைகள். வேலை தேடி டெல்லி போனவர்கள் இரண்டு மூன்று பேர். எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒன்றாக நின்ற குடும்பம்.

இதில் இரண்டு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலம். கஷ்டப்படும் பிராமணக் குடும்பம். எப்படியோ ஒருவன் ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தில் வேலை வாங்கிக் கொள்கிறான். தம்பிகளை அழைத்து வருகிறான். ஒரு அண்ணன் குடும்பம் இன்னும் கஷ்டத்தில் ஆனால் ஒருவன் தலையெடுத்து பம்பாய் போய் வேலை பார்க்கிறான். அவன் குடும்பம் முன்னேறுகிறது. இப்படி சில பல சரடுகள். ஆனால் அனைவரையும் குடும்பம் என்ற பந்தம் ஒன்றிணைக்கிறது.

எனக்கு எங்க தாத்தா சின்ன வயசில கிராமத்தை விட்டு வெளியேறினதாலதான் வேலை கிடைச்சுது என்பது மாதிரி ஒரு காலகட்டத்தை – மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த ஒரு பிராமணக் குடும்பத்தை – காட்டுகிறது என்பதற்கு மேல் இந்தப் புத்தகத்தில் எதுவும் கிடைக்கவில்லை. இதை வேறு யாராவது எழுதி இருந்தால் நிஜமான சித்தரிப்பு என்று பாராட்டி இருப்பேனோ என்னவோ. அசோகமித்ரன் லெவலுக்கு நிஜமான சித்தரிப்பு என்பதெல்லாம் பத்தவில்லை.

அதிலும் முதல் முப்பது பக்கத்தில் யாருக்கு யார் தம்பி, அண்ணன், மாமா என்று புரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. படிக்கறவனை சும்மா குழப்பிவிடுவோம் என்று குசும்புடன் எழுதிய மாதிரி இருக்கிறது.

எனக்குப் பிடித்த பாத்திரம் சிறு வயதில் கிழவனை மணந்து, குழந்தை இல்லாத, ஆனால் சொத்து சுகம் உள்ள விதவை சீதாதான். அழுத்தமான பாத்திரம். இந்தத் திருமணத்தில் அதிருப்தி அடைந்து வீட்டை விட்டு ஓடிவிட்ட முதல் தாரத்தின் பையன் திரும்பி வரமாட்டானா என்று அவள் ஏங்குவது ஒரு nice touch.

தோழி அருணாவுக்கு இதில் நிஜமான சித்தரிப்பு என்பதற்கு மேலாகவும் என்னவோ கிடைத்திருக்கிறது. அவரது வார்த்தைகளில் –

அவர் வரைந்து காட்டுவது ஒரு மெல்லிய கோட்டுச் சித்திரம். அதன் உள்ளே இருக்கும் அடர்த்தியான வாழ்க்கை நம் கற்பனைக்கே விடப்படுகிறது. சொல்வதை விட சொல்லாமல் விடுவதே நிறைய.

இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் விளக்கி எழுதினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்…

காலச்சுவடு இதழில் அம்ஷன்குமார் பிழைப்பு என்பதே ஒரு யுத்தம்தான், அந்த யுத்தத்தைத்தான் இந்தப் புத்தகம் விவரிக்கிறது என்கிறார். அதைத்தான் நானும் நிஜமான சித்தரிப்பு என்று சொல்லி இருந்தேன். அருணா சொன்ன மாதிரி அசோகமித்ரன் நாவல்களில் சொல்லப்படுபவற்றை விட சொல்லாமல் விடப்படுவது எப்போதும் அதிகம். இதில் எனக்கு சொல்லப்படாதவை என்று எதுவும் கிடைக்கவில்லை…

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

அருணாவின் விமர்சனம்

காலச்சுவடில் அம்ஷன்குமார் விமர்சனம்

நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்

 

12 thoughts on “அசோகமித்ரன் எழுதிய ‘யுத்தங்களுக்கிடையில்’

  1. முன்பு ஒரு பதிவில் கூறியது போல எங்கோ நம் வாழ்வை உரசும் போது ஒரு திறப்பு கிடைக்கும். அருணாவின் பதிவில் நீங்களே கூறியிருப்பது போல, நான் கூறியிருப்பது போல.

    குழப்பிவிட்டாலும், இரண்டாவது முறை படிக்கும் போது புரிவதாகத்தான் இருக்கின்றது. எனக்கு இது பெண்களை பற்றிய கதை என்றே தோன்றுகின்றது.

    மூன்று வருடங்க்களுக்கு முன் எழுதியது

    //கதை ஆண்களை பற்றியே பேசினாலும், அடிநாதமாக இருப்பது பெண்கள்தான். பதினாறு குழந்தைகளை பெற்ற பெண், தன்னை விட இரண்டு மூன்று வயது அதிகமான கணவனை அடைந்த பெண், இருபது வயதில் கணவனை இழந்த பெண்.

    //யார் இருந்தால் என்ன, யார் மறைந்தால் என்ன, பெண்கள் சுகப்படுவதில்லை//

    முன்னுரையில் கூறுவது போல கதை மாந்தர்கள் அனைவரும் சாதரணர்கள். சாதரணர்கள் வீரன் கிடையாது, கோழையும் கிடையாது. வாழ்க்கையை முடிந்த வரை வாழ பார்க்கின்றார்கள். சிறிது சமரசத்துடன். பெண்கள் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு ஓடுகின்றனர்.

    ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சமூகத்தை நமக்கு காட்டுகின்றார். யுந்த களேபரங்கள். ரயில்வேயின் பெருமை.

    சின்ன நாவல்தான். ஏகப்பட்ட கிளைகள். யார் யாருக்கு என்ன உறவு என்று மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளும் முன் கதை முடிந்துவிடுகின்றது. அசோகமித்திரனின் கூறாமல் கூறிச் செல்வதைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை. அவரது வழக்கமான நகைச்சுவை இதில் அவ்வளவாக இல்லை. சர்வசாதரணமாக ஒரு வரியில் பெரிய திருப்பத்தை கூறிவிட்டு அடுத்த பகுதிக்கு போய்விடுகின்றார். சின்ன சின்ன வரிகள். ஆனால் சொல்ல வந்ததை கச்சிதமாக கூறிவிடுகின்றது. முதல் முறை படிக்கும் போது கொஞ்சம் குழப்பும். இரண்டாம் முறை படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

    ஒரு வரியில் சொன்னால், நமது பாட்டிகள், தாத்தாக்களின் கதை.
    //

    Like

  2. ரெங்கா, உங்கள் பதிவுக்கும் சுட்டி கொடுத்துவிட்டேன். பாலா, சுட்டிக்கு நன்றி, பதிவில் இணைத்தும்விட்டேன்.

    Like

  3. யுத்தம் என்பது எதிரிகளுக்கிடையே நடப்பது எனில் வாழ்க்கை உறவுகளுக்கிடையே நடப்பது. இரண்டிலும் ஜெயிக்க மனிதன் போராடுவதைப் பற்றிய கதையாக இருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. படித்துவிட்டு எழுதுகிறேன்.

    Like

    1. கேசவமணி, ரொம்ப நாளைக்கப்புறம் உங்களை இங்கே பார்த்தது மகிழ்ச்சி. எழுதுங்கள், காத்திருக்கிறோம்…

      Like

  4. தங்களை சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருந்ததால் என்னை மீண்டும் அனைவருக்கும நினைவூட்ட வேண்டியிருக்கிறது. எனவே தற்போது எழுதிய விக்தோர் ஹ்யூகோவின் “மரண தண்டனைக் கைதியின இறுதி நாள்” பதிவை, தங்கள் அனுமதியுடன், தங்கள் தளத்தில் விளம்பரம் செய்துகொள்கிறேன்.

    http://kesavamanitp.blogspot.in/2016/06/blog-post.html

    இதுவும் ஒரு மனிதன் தன் உயிரை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் யுத்தத்தைச் சொல்கிறது.

    Like

    1. கேசவமணி, நல்ல பதிவு, இப்போது இதையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.

      உங்கள் தளத்திலேயே இப்போது பின்னூட்டம் எழுதும் வசதியை எடுத்துவிட்டீர்களா என்ன?

      Like

  5. ஆர்வீ அவர்களே அசோகமித்திரனின் கதைகள் எல்லாமே வாசகன் சிந்தனையை தூண்டுவதாக எடுத்துக்கொள்ளவேண்டும் . அவர் உங்களை யோசிக்க வைக்கிறார் ….முன்பு ஒரு முறை அவரது சிறுகதை ஒன்றை படித்தேன் … ஒரு சேல்ஸுஒமன் சோப் விக்க வருகிறாள். ஒரு மாமியிடம் ஒரு பிரீ சாம்பிளை கொடுக்கிறாள். மாமி இன்னொன்று கேட்கிறாள். இந்த பெண் அதை மறுத்து விடுகிறாள். இத்தோடு கதை முடிவடைந்து விடுகிறது.

    Like

    1. அவள் அதை மறுத்துவிட்டு செல்வதுடன் கதை முடிகின்றது என்பது சரிதான். பார்க்க எளிமையான கதையாக தெரியும். கதையின் தலைப்பு பார்வை அல்லது அதற்கு தொடர்புடைய ஏதோ. சகோதரி பார்வை இழந்தபின், பிரார்த்தனை மூலம் பார்வையை மீண்டும் அடைந்ததால் மதம் மாறிய பெண். வீட்டினுள் வரும் போது சிறு பெண்ணாக வரும் அவள், வெளியே போகும் போது வளர்ந்து நிற்கின்றாள். அவளை பற்றிய பார்வையே மாறி விடுகின்றது. ஆனால் இதை செய்ய அ.மி ஒன்றும் கஷ்டபடுவதில்லை. சின்ன சின்ன விஷயங்களில் அதை ஏற்படுத்துகின்றார். அதுதான் அவரின் தனித்துவம்

      Like

    2. சந்திரா, நீங்கள் குறிப்பிடும் அசோகமித்திரன் சிறுகதை ‘பார்வை’. எனக்கு இதை புரிந்து கொள்ள ஜெயமோகனின் உதவி தேவைப்பட்டது…

      யுத்தங்களுக்கிடையில் எனக்குத் தெரிந்து இணையத்தில் கிடைப்பதில்லை. வாங்கிவிடுங்களேன்! நீங்கள் சான் ஃப்ரான்சிஸ்கோ அருகில் வசிப்பவராக இருந்தால் நூலகத்தில் கிடைக்கிறது….

      Like

  6. ஆர்வீ அவர்களே இந்த நாவல் online கிடைக்குமா ப்ளீஸ் i will be grateful… நான் அசோகமித்திரனின் பரம ரசிகை..

    Like

RV -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.