ஷோபா சக்திக்கு இயல் விருது

shobha_sakthiகண்டிவீரன் சிறுகதைத் தொகுப்புக்கு இயல் விருது என்றதும் இந்தப் பழைய பதிவைத் தேடிப் பிடித்தேன். தலைப்பு சிறுகதையை மீண்டும் படித்தேன். Enjoyable story. கட்டாயம் படியுங்கள்!

அசோகமித்ரனுக்கும் அபுனைவுக்கான விருது கொடுக்கிறார்கள். தேர்வாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், ஷோபா சக்தி பக்கம், அசோகமித்ரன் பக்கம்

ஜடாயுவின் பரிந்துரைகள்

ஜெயமோகனின் முக்கியத் தமிழ் நாவல்கள் பட்டியல் ஒரு seminal work. ஆனால் அதில் இரண்டு குறைகள் உண்டு. ஒன்று அது 2000த்துக்கு பிறகு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. இரண்டாவது அது ரொம்பவே நீளமானது. புதிதாக ஆரம்பிக்கும் வாசகனை பயமுறுத்தக் கூடிய சாத்தியம் உண்டு.

ஜடாயு இந்த இரண்டாவது குறையை மனதில் கொண்டு மிகச் சுருக்கமான ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். அவரது வார்த்தைகளில் –

கட்டாயம் வாசித்தாக வேண்டிய 10 தமிழ் நாவல்கள் (முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு)

  1. சிவகாமியின் சபதம்கல்கி
  2. பொய்த்தேவுக.நா.சு.
  3. மோகமுள்தி.ஜானகிராமன்
  4. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி
  5. பதினெட்டாவது அட்சக்கோடுஅசோகமித்திரன்
  6. வாசவேஸ்வரம்கிருத்திகா
  7. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
  8. கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்
  9. விஷ்ணுபுரம்ஜெயமோகன்
  10. தூர்வைசோ.தருமன்

ஜடாயுவின் டாப் டென்னோடு எனக்கு முழு இசைவு இல்லை என்பதையும் பதிவு செய்கிறேன். சிவகாமியின் சபதம் எல்லாம் டாப் டென் நாவல் லிஸ்டில் வரக் கூடாது. தூர்வையை நான் படித்ததில்லை, இருந்தாலும் சோ. தர்மன் டாப் டென் லிஸ்டில் வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. மற்றவை எல்லாம் என் டாப் டென்னில் வருமோ என்னவோ டாப் இருபது முப்பதிலாவது வரும்.

ஜடாயுவிடம் என் ஆட்சேபங்களைத் தெரிவித்தேன். அவர் சொன்ன பதிலையும் இங்கே பதிவு செய்கிறேன்.

எனது பட்டியலின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் – முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு என்று.

சிவகாமியின் சபதம்: தமிழின் “சரித்திர நாவல்” என்பதற்காக. அது கல்கி நாவல் என்றான பிறகு, பொன்னியின் செல்வனை விட, இது கச்சிதமான நாவல் என்பதால் சி.சபதம்.

தூர்வை – தலித் இலக்கியம் (அப்படி ஒன்று தனியாக இல்லை என்பீர்கள், அது சரிதான், தலித் வாழ்க்கையைக் கூறூம் ஒரு படைப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்) என்பதற்காக, பூமணியின் நாவல்களை விட தர்மனின் இந்த நாவல் தலித்வாழ்க்கையை அதன் முழுமையுடன் பதிவு செய்கிறது என்று நான் கருதியதால்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்