Skip to content
Tags

ஏழு வயது க்ரியாவும் கலீலையோவும்

by மேல் ஜூன் 28, 2016

(கூட்டாஞ்சோறு மீள்பதிவு.)

காரில் நானும் க்ரியாவும் போய்க்கொண்டிருந்தபோது அவளுக்கு கனமான, லேசான பொருள் எல்லாம் புவியீர்ப்பு விசையால் ஒரே மாதிரி இழுக்கப்படும், மேலிருந்து கீழே போட்டால் தரையை அடைய ஒரே நேரம்தான் ஆகும் என்பதை சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது.

நான் ஆரம்பித்தேன். க்ரியா நீ சூப்பர் ஸ்ட்ராங் சூப்பர்வுமனாம். பத்து மாடி கட்டடத்தின் மீது ஏறி நிக்கறயாம். உன் ஒரு கைல நாம போற இந்தக் கார் இருக்காம்…
க்ரியா: I am too small, I can’t lift this car!
நான்: நீதான் சூப்பர் ஸ்ட்ராங் சூபர்வுமனாயிற்றே! அதனால் சுலபமாக தூக்கலாம்.
க்ரியா: So I can lift this car?
நான்: ஆமா. இன்னொரு கைல இன்னிக்கு வந்த பேப்பரை சுருட்டி ஒரு பெரிய பால் மாதிரி வச்சிருக்கியாம். ரெண்டையும் ஒரே நேரத்தில கீழே போடறயாம். எது முதல்ல கீழ விழும்?

க்ரியா ரொம்பவே யோசித்தாள். அவளுக்கு பதில் சொல்ல விருப்பமே இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஐ டோன்ட் நோ என்று சொல்லிப் பார்த்தாள், நான் விடவில்லை. உனக்கு தோன்றுவதைச் சொல் என்று வற்புறுத்தினேன். நிறைய தயக்கத்துக்குப் பிறகு பேப்பர்தான் முதலில் விழும் என்று சொன்னாள்.

நான் அசந்துபோனேன். பேப்பர் முதலில் விழும் என்று யாரும் சொல்லி நான் இது வரை கேட்டதில்லை. அப்படி யோசிக்க முடியும் என்று கூட எனக்குத் தோன்றியதில்லை. இவள் மாத்தி யோசிப்பவள் என்று தெரியும், இருந்தாலும் இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

நான்: ஏன் பேப்பர் கீழ முதல்ல விழும்னு நினைக்கறே?
க்ரியா: I think that the car will fall first. But if the car will fall first, you won’t ask this question. Since you ask this question, it has to be a trick question. So the right answer has to be paper.

சரி ரொம்ப நாளாச்சு க்ரியா பத்தி ஒரு போஸ்ட் போட்டு, இதைப் போடலாம் என்று சிரித்துக் கொண்டேன். And it got better and better.

நான்: சரி க்ரியா, ட்ரிக் கொஸ்டின் எல்லாம் மறந்துடு. நிஜமா உனக்கு எது முதல்ல கீழே விழும்னு தோணறது?
க்ரியா: கார்.

அப்பாடா என்னதான் மாத்தி யோசிப்பவளா இருந்தாலும் வழிக்கு வந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.
நான்: ஏன் கார் முதல்ல கீழே விழும்னு சொல்லறே?
க்ரியா: Because the car will be so heavy, that I will drop it before the paper ball!

அப்புறம் பைசாவில் டவர் (Leaning Tower of Pisa) ஏன் சாய்ந்து நிற்கிறது, அப்படி சாய்ந்து நின்றால் அது கீழே விழுந்துவிடாதா, பைசாவில் பிட்சா கிடைக்குமா என்று நிறைய கேள்விகளை விவாதித்துக் கொண்டே போவதற்குள் கிளாஸ் வந்துவிட்டது. கலீலியோவுக்கு வரவே முடியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: க்ரியா

From → Kriya

3 பின்னூட்டங்கள்
  1. நல்ல கட்டுரை. சுவாரஸ்யமா அறிவியல் கலந்த செய்தி.

    நன்றி
    -முத்து

  2. இதே கேள்வியை நான் என் மகளிடம் கேட்டேன். கற்று கொடுகும் எண்ணம் எல்லாம் இல்லை. நான்கு வயதிற்கு என்ன வேண்டியிருக்கின்றது, ஜாலியாக இருக்கட்டும். சும்மா குழந்தைகளின் கற்பனை அனைத்தையும் மிஞ்சியது. அதனால் என்ன சொல்கின்றாள் பார்ப்போம் என்று கேட்டேன். அவளும் கார் என்றே சொன்னாள்.

    ஏன் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று முறை கேட்டதற்கு கார்தான் கார்தான் என்றாள். கடைசியில் காருக்குதான் சக்கரம் இருக்கு வேகமாக போகும் என்றாள். குழந்தைகளின் பதிலுக்கு காரணங்களை நம்மால் யோசிக்கவே முடியாது.

    • ரெங்கா, உங்க பொண்ணு கலக்கிட்டா! க்ரியாவிடம் சொன்னேன், அவளும் மிகவும் ரசித்தாள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: