Skip to content

சாரு நிவேதிதா பரிந்துரைகள்

by மேல் ஜூலை 16, 2016

charu_niveditaசாரு சென்ற நூற்றாண்டின் சிறந்த இலக்கியப் படைப்புகள் என்று போட்டிருக்கும் ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. சென்ற நூற்றாண்டின் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாத இலக்கியப் படைப்புகள் என்றுதான் இவற்றை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார், இவைதான் சென்ற நூற்றாண்டின் டாப் டென் என்று அவர் கருதமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

அவரது பட்டியலில் மண்ணில் தெரியுது வானம், இடைவெளி பற்றி பதிவுகளே எழுதி இருக்கிறேன். இடைவெளி சாதனைதான். ஆனால் ம.தெ. வானம் எனக்கு பெரிதாக அப்பீல் ஆகவில்லை. செம்பருத்தியை முடிக்க வேண்டும். காதுகள், கடைத்தெரு கதைகள், சுதந்திர தாகம் எல்லாம் படிக்க வேண்டும். அசோகமித்திரனின் குறுநாவலைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. ந. முத்துசாமியை நாடக ஆசிரியராகத்தான் தெரியும், ஒன்றோ இரண்டோ சிறுகதைகள்தான் படித்திருக்கிறேன். தஞ்சை பிரகாஷ் intriguing எழுத்தாளர், ஆனால் தமிழ் இலக்கியத்தில் ஒரு footnote ஆகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

வசதிக்காக பட்டியல் கீழே.
1. சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம்.
2. ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம்.
3. தி. ஜானகிராமனின் செம்பருத்தி
4. லா.ச.ரா.வின் சிறுகதைகள்.
5. எஸ்.சம்பத்தின் இடைவெளி.
6. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள்.
7. ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகள்.
8. அசோகமித்திரனின் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்.
9. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள்.
10. ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

From → Book Recos

2 பின்னூட்டங்கள்
  1. https://rengasubramani.blogspot.in/2012/11/blog-post_22.html

    சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு படித்த கதை. மீண்டும் படித்தால் கொஞ்சம் புரியலாம், வேறு கோனங்கள், விடுபட்டவை கிடைக்கலாம். அசோகமித்திரனின் இந்த கதைகளை முதலில் படிக்கும் போது வெகு சாதரணமான, போரடிக்கும், சுவாரஸ்யமற்ற கதைகளாகவே தோன்றுகின்றது. சில லேட்டாக புரிகின்றது, நமக்கு அந்த அனுபவம் கிடைக்கும் போது…

    https://rengasubramani.blogspot.in/2013/10/blog-post_28.html

    பெண்களின் உலகத்தில் சிக்கிய ஒரு ஆணின் கதையை எழுத ஆரம்பித்தவர், கடைசியில் எப்படி முடிப்பது என்று குழம்பி விட்டது போல தெரிகின்றது. தானும் குழம்பி, பாத்திரங்களையும் குழப்பி எடுத்துவிட்டார். விறுவிறுப்பாக போகும் நாவல் அனைவருக்கும் வயதான் பின் தள்ளாடி, தூக்கத்தை வரவழைக்கின்றது. நல்ல வேளை முழுவதும் தூங்குவதற்கு முன் முடிந்துவிட்டது. ஒரு நல்ல மெகா சீரியலுக்கான கதை.

    சாரு எழுதும் அறிமுக உரைகளை மனம் தேவையில்லாது ஜெயமோகனுடன் ஒப்பிட வைக்கின்றது. ஜெயமோகன், அறிமுகப்படுத்தும் போது, புத்தகத்தை எப்படி படிப்பது என்பதையும் கோடிட்டு காட்டிவிடுகின்றார். நூலோடு தொடர்புடைய பல விஷயங்களையும் சொல்லி, அதை படிக்கும் பார்வையையே மாற்றி விடுகின்றார். உதாரணம் தி.ஜாவின் பெண் பாத்திரங்கள். எப்படி மூன்று விதமான பெண்கள் அனைத்து நாவல்களிலும் வருகின்றார்கள் என்பது. படித்தவுடன் அடடே எப்படி கண்ணில் படவில்லை என்று தோன்றுகின்றது. உன்னிப்பாக படித்தால் தெரிகின்றது.

    சாரு, புத்தகத்தின் பகுதிகளை துண்டு துண்டாக எடுத்து போட்டு, பார்த்தீர்களா எப்படி எழுதியிருக்கின்றார் என்றபடி போகின்றார். பழுப்பு நிற பக்கங்க்கள் முழுவதும் இது போன்ற ஸ்னாப் ஷாட்டுகள்தான் இருக்கின்றன. அவர் தளத்தில் அறிமுகப்படுத்தும் புத்தகங்க்களும் அப்படியே. இதில் அவருக்கு வரும் வாசக கடிதங்க்கள் வேறு. சுவாரஸ்யமான எழுத்தாளர். படிக்க வைத்துவிடுகின்றார். ஆனால்…. ஸீரோ டிகிரி – என்ன எழவு என்றே எனக்கு புரியவில்லை. புதிதாக வந்த எக்சைல் அதைவிட பல பக்கங்கள் ஙீப்ஷி ஙிநஷ்க் என்றெல்லாம் வருகின்றது. உண்மையில் இது எல்லாம் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றுகின்றதா? ஒரு வேளை எனக்குத்தான் இதைப் படித்து புரிந்து கொள்ள கூறு இல்லையோ.

    • ரெங்கா, உங்கள் பதிவுகளைப் படித்தேன். நம் இருவருக்கும் ஒரே வேவ்லெங்த்தான்.

      ஜீரோ டிகிரி வாசகர்களை கொஞ்சமாவது அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: