Skip to content

சேதன் பகத்

by மேல் ஓகஸ்ட் 30, 2016

chetan_bhagatபகத் இன்றைக்கு இந்தியாவில் ஒரு சூப்பர்ஸ்டார். அவருடைய கதைகள் எனக்கு மசாலா படங்களை நினைவுபடுத்துகின்றன. என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான், இருந்தாலும் படிக்க முடியும், சில சமயம் ஜாலியாகப் போனாலும் எழுத்தில், நடையில் தெரியும் அமெச்சூர்தனம் எரிச்சல்படுத்துகிறது.

அவருடைய கதைகளில் வர்ணனை, விவரிப்பு எதுவுமிருக்காது. எல்லாம் நேரடியான பேச்சு, எண்ணம்தான். அவருடைய மார்க்கெட் இன்றைய இளைஞர்கள்தான். அவர்கள் நேரடியாக அனுபவிக்கும் மன அழுத்தம் – பரீட்சைகளுக்கு தயார் செய்து கொள்வதாகட்டும், கல்லூரிப் படிப்பாகட்டும், ஆண்-பெண் ஈர்ப்பாகட்டும், படித்துவிட்டு செட்டில் ஆகாமல் உழன்று கொண்டிருப்பதாகட்டும் – இந்தக் கதைகளில் நிறைய வருகிறது. இளைஞர்கள் தட்டையான ஸ்டீரியோடைப்பிங்கையும் மீறி அந்தக் கதைகளில் தங்களையே காண்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறிவுரைகளை கதையில் மறைமுகமாகப் புகுத்தி அடிக்கிறார்.

ஒப்பீட்டுக்காக பாலகுமாரனை எடுத்துக் கொள்ளலாம். பாலகுமாரன் நேரடியாக அறிவுரையாகப் பொழிந்து தள்ளுகிறார், ஆனால் புத்தகங்கள் நன்றாக விற்கின்றனவாம். அந்த மாதிரி அறிவுரைகளுக்கு இன்று மவுசு இருக்கிறது. இந்த இளைஞர்களின் மார்க்கெட்தான் இவரது வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சுமாரான வணிக எழுத்து என்றுதான் வகைப்படுத்துவேன். எப்படியோ ஹிட்டாகிவிட்டார்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது 2 States (2009). இந்த மாதிரி ஒரு நல்ல மசாலா புத்தகத்தைப் படித்து நாளாயிற்று. பஞ்சாபி காதலன், தமிழ் பொண்ணு, அதுவும் மயிலாப்பூர் ஐயர் பொண்ணு, மற்றும் ஸ்டீரியோடைப் பாத்திரங்களை வைத்து கலக்கி இருக்கிறார். நல்ல பொழுதுபோக்கு நாவல். ஆனாலும் தொண்ணூறுகளில் மயிலாப்பூர் ஐயர் குடும்பங்கள் தினமும் வாழை இலையில் சாப்பிடுவது கொஞ்சம் ஓவர். 🙂 பெண்ணும் பையனும் மட்டும் மாடர்ன். ஜாலியாகப் போகிறது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

Five Point Someone (2004) பெரும் வெற்றி பெற்ற புத்தகம். நான் ஐஐடியில் எம்டெக் படித்தவன், அதனால் இதில் நிறைய மிகைப்படுத்தல் இருப்பது தெரிகிறது. அப்படி மூச்சு விடாமல் எல்லாம் நானும் என் நண்பர்களும் படிக்கவில்லை ஆனால் நாங்கள் எல்லாம் நைன் பாயிண்டர்கள்தான். ஐஐடியில் உள்ளே நுழைவதுதான் கஷ்டம், உள்ளே வெற்றி பெற பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. டைம் பாஸ் புத்தகம் என்பதற்கு மேல் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. எப்படியோ ஹிட் ஆகிவிட்டது, அவ்வளவுதான். சில காட்சிகளை 3 Idiots திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

One Night at the Call Center (2005) புத்தகம் எல்லாம் பயணத்தில் படித்து தூக்கிப் போட்டுவிட வேண்டியவைதான். ஆனால் கடவுள் செல் ஃபோனில் அழைத்துப் பேசும் காட்சி எனக்கு பிடித்திருந்தது.

3 Mistakes of My Life (2008) Kai Po Che சரளமாகப் போகும் வணிக நாவல். குஜராத்தின் ஹிந்துத்துவம் அதிகரித்து வந்து காலத்தில், கலவரங்களின் பின்னணியில் மூன்று நண்பர்களைப் பற்றிய நாவல்.

Revolution 2020-தான் (2011) அவர் எழுதியதில் மிக மோசமானது என்று நினைக்கிறேன். காதல் முக்கோணம், ஊழல் அரசியல்வாதிகளோடு சேர்ந்து வெற்றி பெறும் இளைஞன் லட்சியவாதிக்காக விட்டுக் கொடுப்பது என்று போகிறது.

Half Girlfriend (2014) இன்னொரு மசாலா புத்தகம். பணக்கார, நாகரீகப் பெண், அந்தஸ்துள்ள, ஆனால் ஏழை பீஹார் ஆண் இருவருக்கும் காதல்.

One Indian Girl (2016) எல்லாம் இந்துமதி இன்று ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கிறது. இவர் எப்படி பிரபலம் ஆனார் என்றுதான் பாதி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

What Young India Wants (2012), Making India Awesome (2015) எல்லாம் வழக்கமான நாடு முன்னேற வேண்டும் புலம்பல்கள்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது 2 States. மிச்சவற்றையும் படிக்கலாம், ஆனால் பொழுதுபோக்கு வணிக நாவல்கள் மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

Advertisements

From → Indian Fiction

5 பின்னூட்டங்கள்
 1. என்னைக்கேட்டால் அனைத்தும் குப்பை என்கின்ற கணக்கில்தான் சேர்ப்பேன். மசாலா சினிமாவை விட மோசமானவை. அதுவும் 3 Mistakes of My Life பெருங்குப்பை. என்னுடைய மூன்று தவறும் அவரது முதல் மூன்று புத்தகங்க்களை படித்ததுதான்.

  Like

 2. Chandraprabha permalink

  ரெங்கசுப்ரமணியுடைய பின்னூட்டம் மிக சரி . சேத்தன் பகத் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட எழுத்தாளர். முன்பு அவர் கதைகள் என்றால் கொஞ்சம் படிக்கிற ஆர்வம் இருந்தது. ஆனால் “டூ ஸ்டேட்ஸ்” என்ற கடை மூலம் பெற்ற அப்பாவை மரியாதை இல்லாமல் திட்டுவதும் “ஐ ஐ எம் ” ஹாஸ்டல் ரூமில் கல்யாணத்துக்கு முன்னரே காதலியுடன் உடல் உறவு வைத்துக்கொள்வது என்று மகா அபத்தம். இந்தியாவில் பாப்புலர் ஆக வேண்டுமானால் சதை பற்றி எழுதுவது தான் வழி என்று புரிந்து கொண்டிருக்கிறார் சேத்தன் பகத். காமம் இல்லாமல் அவரால் எழுத முடியுமா என்றால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

  யாராவது [ குறிப்பாக அனுஷா ] சேதனுக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினால் நல்லது.

  சேத்தன் பகத் – ஒரே வார்த்தையில் – குப்பை.

  Like

 3. ரெங்கா, என்ன ஆச்சரியம், நம் கருத்துகள் கொஞ்சம் வேறுபடுகின்றனவே? சேதன் பகத் மசாலா கதை எழுத்தாளர் – அதாவது சும்மா டைம் பாஸ் கதைகளை எழுதுபவர் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் டைம் வேஸ்ட் கதைகளை எழுதுகிறார் என்று நினைக்கிறீர்களே! சந்திரப்பிரபா, சேத்தன் பகத் காமம் பற்றி எழுதுகிறார் என்பதெல்லாம் அநியாயம். அவருக்கு அவ்வளவு திறமை இல்லை!

  Like

 4. இந்த இடத்தில் காமம் என்பது கொஞ்சம் பொருந்தாத வார்த்தை. லோக்கல் பாஷையில் மேட்டர். thats all. கதையில் வரும் ஆட்கள் எல்லாம் காண்டத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அலைகின்றார்கள்.

  Like

  • ரெங்கா, மேட்டர் என்ற ‘தமிழ்’ வார்த்தை பொருத்தமாகத்தான் இருக்கிறது.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: