வெங்கட் சாமிநாதன் – மீண்டும்

jeyamohanகிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு முன் எழுதிய பதிவு. இப்போது பதிக்கக் காரணம் சமீபத்தில் ஜெயமோகன் “வயதான காலத்தில் சாமிநாதன் அதுவரை பேணிய அனைத்துச் சமநிலைகளையும், நவீன இலக்கிய மதிப்பீடுகளையும் இழந்து சாதியுணர்டனும் மதவெறியுடனும் எழுதிய பல பதிவுகள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன” என்று எழுதி இருப்பதுதான். இணையத்தில் அப்படி எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. ஐந்து வருஷங்களுக்கு முன்னால் என் ஒரிஜினல் பதிவை ஜெயமோகனும் படித்து ஒரு பின்னூட்டமும் எழுதி இருந்தார். அப்போது அவரும் என் கருத்தை மறுத்து வெ.சா. தன் விழுமியங்களை இழந்து ஜாதி மதவெறியுடன் நிறைய எழுதி இருக்கிறார் என்று எதுவும் சொல்லவில்லை.

பதிவிலிருந்து relevant பகுதி.

வெ.சா. தற்போதெல்லாம் பிராமண சார்பு நிலை எடுக்கிறார் என்ற விமர்சனத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். இதற்கு ஆதாரமாக சுட்டப்படுவது அவர் சோ. தர்மனின் கூகை என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனமும் தமிழ் ஹிந்து தளத்தில் வெட்டுப்புலி நாவலுக்கு எழுதிய விமர்சனமும்தான். கூகையை நான் படித்ததில்லை, அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கூகை, வெட்டுப்புலி பற்றிய அவர் கருத்துகளைப் பற்றி எனக்கு விமர்சனம் உண்டு. அவர் திராவிட இயக்கத்தின் போலித்தனம், பிராமண எதிர்ப்பு நிலை ஆகியவற்றைப் பற்றி சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்றும் அந்த முடிவுகளுக்கு பலம் சேர்க்கக் கூடிய கருத்துகள் படைப்புகளில் இருந்தால் அவற்றை emphasize செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன். இதில் நான் தவறு காணவில்லை, ஆனால் இந்த நிலைப்பாடு அவரது விமர்சன எல்லைகளைக் குறுக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

இதைத்தான் ஜெயமோகனும் இன்று மனதில் வைத்து எழுதுகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்தக் கட்டுரைகள் எந்த விதத்திலும் ஜாதி மதவெறியை காட்டவில்லை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். ஜெயமோகனின் இந்தக் கருத்து தவறு என்று ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஹிந்துத்துவர்கள் சொன்னால் அவர்களுடைய அரசியல் நிலை காரணமாக பெரியவரின் மத வெறிக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் என்று அவர்கள் கருத்துக்களை ஜெயமோகனும் மற்றவர்களும் புறம் தள்ளிவிடக் கூடும். ஆனால் அவர்களுக்கு நேர் எதிர் அரசியல் நிலை உள்ள, ஹிந்துத்துவ அரசியலை முற்றிலும் நிராகரிப்பவ்ர்களிலும் இந்தக் கருத்து தவறானது என்று ஆணித்தரமாக பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யத்தான் இதை மீள்பதித்திருக்கிறேன்.

கூகையை பிறகு படித்தேன். நாவலின் ஒரு சிறு பகுதியைப் (ஒரு அய்யர் நிலங்களை நாயக்கர்-தேவர் போன்ற ஆதிக்க ஜாதியினரைத் தவிர்த்து பள்ளருக்கு குத்தகைக்கு கொடுப்பது, பிறகு விற்பது இத்யாதி) பற்றித்தான் வெ.சா. தன் விமர்சனத்தில் நிறையப் பேசுகிறார். அவரது விமர்சனத்தை மட்டும் படிப்பவர்களுக்கு இதுதான் நாவலின் முக்கியப் பகுதியோ என்று தோன்றும். கூகை பள்ளர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது, அதில் சம்பந்தப்படும் அளவுக்குத்தான் பிற ஜாதியினர் விவரிக்கப்படுகிறார்கள். வெ.சா. தனக்கு ஒரு அய்யர் இப்படி செய்தார் என்று வருவது தனக்கிருந்த பிம்பங்களை கட்டுடைத்தது, சோ. தர்மனே இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது என்று எழுதுகிறார். நாவலில் அவருடைய takeaway இதுதான் என்று தெளிவாகத் தெரிகிறது. (எண்பத்து சொச்சம் வயதில் மறைந்த வெ.சா.வுக்கே இது கண்திறப்பு என்றால் என் தலைமுறை எத்தனை வியப்படையும்?) கண்திறப்பு அவருக்கு takeaway ஆக இருப்பதில் ஆச்சரியம் என்ன? ஆனால் அந்தக் கண்திறப்பு அவரது நோக்கைக் குறுக்கிவிட்டது, அதனால் அவரது விமர்சனம் முழுமையாக இல்லை. அதற்காக அவரது நேர்மையைப் பற்றியோ, அவர் இதை ஜாதீய, மதக் கண்ணோட்டங்களில் இந்த விமர்சனங்களை எழுதவில்லை என்பதைப் பற்றியோ சந்தேகிக்க எந்த முகாந்தரமும் இல்லை.

படிப்பவர்கள் யாருக்காவது வெ.சா. அப்படி ஜாதி மத வெறியோடு எழுதிய கட்டுரைகள் தெரிந்தால் சுட்டி கொடுங்கள்! அதை விட முக்கியமாக ‘பாலையும் வாழையும்‘ யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள்! மின்பிரதி இருந்தால் இன்னும் உத்தமம்…

வசதிக்காக பழைய பதிவை இங்கே சில திருத்தங்களோடு மீள்பதித்திருக்கிறேன்.


இலக்கிய விமர்சனம் ஒரு கலை. அது தமிழ்நாட்டில் குறைவு.

விமர்சனத்துக்கு அடிப்படை நேர்மைதான். படைப்புகள்தான் விமர்சிக்கப்பட வேண்டும். நீங்கள் மதிப்பவர், உங்களுக்குப் பிடித்தவர், உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர் எழுதினார் என்பதற்காக ஒரு படைப்பை உயர்த்திப் பிடிக்கக் கூடாது. உங்களுக்குப் பிடிக்காதவர் எழுதினார் என்பதற்காக தாழ்த்துதலும் கூடாது. உங்களுடைய framework என்ன என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒரு புத்தகம் ஏன் பிடித்திருக்கிறது, ஏன் பிடிக்கவில்லை என்று தெளிவாக விளக்க வேண்டும்.

அப்படி நேர்மை, தெளிவு இரண்டும் நிறைந்த ஒரு அபூர்வ மனிதர் வெங்கட் சாமிநாதன். வெ.சா.வின் கருத்துகளோடு எனக்கு எப்போதும் ஒத்துப் போவதில்லை. ஆனால் அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. தான் நினைப்பதைத்தான் அவர் எழுதுகிறார், சும்மா முகஸ்துதிக்காகவோ, தனக்கு வேலை நடக்க வேண்டுமென்றோ அவர் எழுதுவதில்லை. ஐம்பது ஆண்டுகளாக அவர் ஒரு சின்ன வட்டத்துக்குள் இருந்துகொண்டே பெரிய விஷயங்களைச் செய்திருக்கிறார்.

வ.ந. கிரிதரன் அவரைப் பற்றி சிறப்பான ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். வெ.சா.வை அவ்வளவாகப் படிக்காத என் போன்றவர்களுக்கும் அவரது ஆளுமையை ஓரளவு புரியவைக்கிறார். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நண்பர் ஜடாயு இன்னும் இரண்டு சுட்டிகளைக் கொடுத்திருக்கிறார். அவரே எழுதிய “வெ.சா என்னும் சத்தியதரிசி” என்று ஒன்று, அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “நமக்கு எதற்கு வெ.சா.?” என்று ஒன்று. இரண்டு கட்டுரைகளும் வெ.சா.வின் ஆளுமையை இன்னும் புட்டுப் புட்டு வைக்கின்றன.

வெ.சா. தற்போதெல்லாம் பிராமண சார்பு நிலை எடுக்கிறார் என்ற விமர்சனத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். இதற்கு ஆதாரமாக சுட்டப்படுவது அவர் சோ. தர்மனின் கூகை என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனமும் தமிழ் ஹிந்து தளத்தில் வெட்டுப்புலி நாவலுக்கு எழுதிய விமர்சனமும்தான். கூகையை நான் படித்ததில்லை, அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கூகை, வெட்டுப்புலி பற்றிய அவர் கருத்துகளைப் பற்றி எனக்கு விமர்சனம் உண்டு. அவர் திராவிட இயக்கத்தின் போலித்தனம், பிராமண எதிர்ப்பு நிலை ஆகியவற்றைப் பற்றி சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்றும் அந்த முடிவுகளுக்கு பலம் சேர்க்கக் கூடிய கருத்துகள் படைப்புகளில் இருந்தால் அவற்றை emphasize செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன். இதில் நான் தவறு காணவில்லை, ஆனால் இந்த நிலைப்பாடு அவரது விமர்சன எல்லைகளைக் குறுக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

நான் வெ.சா.வை அதிகம் படித்ததில்லை. படித்த வரையில் உலகைப் புரட்டிப் போடும் எதையும் அவர் சொல்லிவிடவும் இல்லை. ஆனால் அவருடைய தாக்கம் முக்கியமானது என்று எனக்கே புரிகிறது. அவர் படைப்பாளி இல்லை, அதனால் இன்னும் ஒரு இருபது வருஷங்களில் மறக்கப்பட்டுவிடுவார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு மட்டுமல்ல, டி.கே.சி., கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, ம.பொ.சி., கோமல் சுவாமிநாதன் போன்ற தாக்கம் நிறைந்த பல ஆளுமைகளுக்கு நடப்பதுதான். இந்த மாதிரி ஆளுமைகளின் தாக்கம் அவர்களோடு பழகுபவர்கள் மீதுதான் நிறைய இருக்கிறது.

அவரது சிறந்த விமர்சன எழுத்துக்களை தொகுத்துப் போட்டால் இன்னும் கொஞ்ச நாள் தாக்குப் பிடிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகனின் சர்ச்சைக்குரிய கருத்து
கூகை நாவல் பற்றி வெ.சா., கூகை பற்றி ஆர்வி
வெட்டுப்புலி பற்றி வெ.சா., வெட்டுப்புலி பற்றி ஆர்வி

வ.ந. கிரிதரனின் கட்டுரை
வ.ந. கிரிதரனின் தளம்
வெ.சா. பற்றி ஜெயமோகன் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4)
வெ.சா. பற்றி நண்பர் ஜடாயு – “வெ.சா என்னும் சத்தியதரிசி
வெ.சா. பற்றி அரவிந்தன் நீலகண்டன் – “நமக்கு எதற்கு வெ.சா.?
திண்ணை இணைய இதழில் வெ.சா. கட்டுரைகள்
தமிழ் ஹிந்து தளத்தில் வெ.சா. கட்டுரைகள்
வெ.சா.வின் தளம் (கடைசி பதிவு 2012-இல்)

17 thoughts on “வெங்கட் சாமிநாதன் – மீண்டும்

 1. //வெ.சா. தற்போதெல்லாம் பிராமண சார்பு நிலை எடுக்கிறார் என்ற விமர்சனத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன்//

  எனக்குத் தெரிந்து பிராமணீய வழிபாட்டு நிலை ஏதும் வெ.சா என்ற தனி மனிதரிடம் இல்லை. பிராமணர்கள் புனிதமாகப் போற்றும் பலவற்றை (ஆன்மீகம், வழிபாடு, ஆச்சாரம் இன்னபிற) வெ.சா ஏற்பதில்லை. அவற்றில் அவருக்கு விருப்பமும் இருந்ததில்லை. போலித்தனத்தை – திராவிடம் – என்று கூறிக் கொண்டு செய்ப்பட்டும் போலித்தனத்தை அவர் எதிர்க்கிறார். சமூகத்தின் எல்லா இழிநிலைக்கு ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே காரணம் என்று கூறிக் கொண்டு அதன் பின்னால் மறைந்து கொள்பவர்களை அவர் கண்டிக்கிறார். அது உண்மை தான் என நானும் நினைக்கிறேன்.

  // வெ.சா.வின் கருத்துகளோடு எனக்கு எப்போதும் ஒத்துப் போவதில்லை. //

  வெ.சாவின் சில கருத்துக்களோடு என்னால் உடன் பட முடிகிறது. சிலவற்றை நான் ஏற்கவில்லை.

  விமர்சனத்தைப் பொறுத்தவரை சார்புநிலை ஏதும் எடுக்காத கறார் பேர்வழி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

  சொல்வனத்தில் வெளியான அவரது நேர்காணல் அவரைப் பற்றிய பிம்பத்தை மிகத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

  Like

 2. Ve.Saa is a literary critic, or known as such. In Tamil, literary critics cannot air their views frankly as their views, if unfavorable to the book under review, are not liked, not only by the author of the book, but also by his acolytes. It is therefore quite understandable why Kaa.Naa.Su, a literary critic, was intensely disliked. Many dubbed him as a Dhurvasar and dismissed him offhand. But he continued pinpointing the sore spots in whatever he had read, at the same time rationing out praises gingerly.

  Can we put Ve.Saa on par with him ? Certainly not. Reasons are easy to find: KNS was delved deeply in English literature and had an awsome knowledge of world lit, too. His formidable knowledge of letters, both Tamil and English, made his reviews worthy of preserving He had also read widely in many other fields and a trenchant social critic, too. He remained unmarried, devoting his life to languages and literatures.

  Ve.Saa, as far as I find, has limited reading. I have not seen his English writings also. K.N.S wrote syindicated column in TOI for many years which I preserve to this day.

  Ve.Saa, as u said, has vitiated his thinking with what you called, anti brahminism of Kazhagams. His view on them, alhtough correct, to some extent, has made him an internse hater of all that comes from his rival side, namely Dravidian movement, to such an extent that he exults like a child whenever he comes across any Kazhagam or Dravidian leaders getting lampooned.

  You may read his Thinnai article, which is a repoduction of Tamilhindu.com article, on Pazha karuppiah’s book deifying Jeyalalitha and demonising Karunanithi. Ve.Saa recommends the book litte caring for the fact that Paza karuppiah is an AIADMK VIP and his intention was to curry favour with his leader for post or pelf.

  As you said, Vee.Saa’s essays are loaded in favour of Brahmins. Although he may not indeed practise Brahminism – how many can? – he likes it. It is possible to like a thing even if you cant adlopt it. This dichotomy is common among many Tamil brahmins of today seeing their intolerance of any criticism of Brahminism. “I don’t myself like Brahminism, but I wont allow any one to criticise it, however fairly and decently!” – is their stand.

  Ve.Saa’s literary reviews are biased lacking depth of analysis and understanding.

  Whatever his deficiencies may be, for one service he renders to Tamil lit we cant but be beholden to him, namely, propelling the genre called Lierary Criticism in Tamil considering that this genre has not carved out a niche of its own in Tamil modern lit today, whereas in the West, it is well entrenched, eagerly read and welcomed. Please mind the fact literary criticism is itself an art in its own place if it is wirtten by a man of wisdom and knowledge with a fair and indomiantable mind. Englihs had T.S.Eliot, Samuel Johnson, and so many, whose books have become classics in Eng lit. In Tamil, it is struggling. for breath. To write lit crit, even if bad, is to give oxygen to it.

  Vee.Saa is giving that oxygen.

  Like

 3. ருத்ரா காவ்யா என்றெல்லாம் பலவேசமாகி வரும் அண்ணன் இணைய வடிவேலு பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு ஜே…

  Like

 4. ரமணன், திராவிட இயக்கம் என்பது பிராமண எதிர்ப்பு மட்டுமே என்ற புரிதல் வெ.சா.வின் கண்ணோட்டத்தைக் குறுக்குகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் அவரால் வெட்டுப்புலியின் முழு வீச்சையும் உணர முடியவில்லை என்று தோன்றுகிறது.

  காவ்யா, // As you said, Vee.Saa’s essays are loaded in favour of Brahmins. // இப்படி நான் சொல்லவில்லை. தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். திராவிட இயக்கம் என்பது பிராமண எதிர்ப்பு மட்டுமே என்ற கருத்தை அவர் அழுத்தமாக சொல்ல விரும்புகிறார், அதனால் சில விமர்சனங்கள் குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடுகின்றன என்றுதான் சொல்லி இருக்கிறேன்.

  ஜெயமோகன், // ருத்ரா காவ்யா என்றெல்லாம் பலவேசமாகி வரும் அண்ணன் இணைய வடிவேலு பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு ஜே… // இந்த மாதிரி சின்னதாக hint கொடுத்தால் என்னை மாதிரி ஆட்களுக்கு எப்படி சார் புரியும்?

  Like

 5. காவ்யா, // As you said, Vee.Saa’s essays are loaded in favour of Brahmins. // இப்படி நான் சொல்லவில்லை. தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். திராவிட இயக்கம் என்பது பிராமண எதிர்ப்பு மட்டுமே என்ற கருத்தை அவர் அழுத்தமாக சொல்ல விரும்புகிறார், அதனால் சில விமர்சனங்கள் குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடுகின்றன என்றுதான் சொல்லி இருக்கிறேன்.//

  i agree. You are on the spot! My statement should have defined the area just as you have done.

  Dravidian movement has many dimensions of which anti-brahminism is one but it looms large in the vision of Ve.Saa. Whatever defence his admirers (most of them are from pro-brahmin and Hindutva group only !) make for him, his age is an irritant. As I wrote earlier, the young Turks among Tamil brahmins are paranoid about the anti brahminism; but they, too, begin to see it in broader perspective as they grow into adulthood experiencing life’s little ironies. So,, at his age, one would expect that Ve.Saa would have developped that broader vision ! He is more than 70 now; but his mind is similar to the young turk of Tamil brahmins who write so much against periyaar and Dravidian movement in blogs, fora and print media emotionally.

  If at all he is given a para or some lines in the history of modern Tamil lit, he will be described as one who staunchily supported the Brahmin cause through all his writings. His recommendation of Paza Karuppiah’s book and other writings will be held up against him. At the same time, he willl also be viewed, as I have done, to have brought the genre Tamil lit criticism to the fore, along with Jeyamohan (of the same categroy).No one in the world is without merits also

  If the history is written by a member of the aforesaid group, it will glorifiy him differently. That is to say, a biased history of Tamil lit. An glaring example Jeyamohan’s History of Tamil lit, a thin book which will be dismiissed as a biased history.

  Before time is running is out, it would be better if Vee Saa decide for himself how he wants to be known after his time: as a pure champion of Tamil brahmins ? or an unbiased observer of modern Tamil social scene?

  A writer can be known by a single or a few books he has written; none the less, his entire corpus is helpful to create and will do so, a general estimate about all that he stood for and against. So, we are here making that estimate. You are also doing that. Well and good.

  I hope my views on Ve.Saa are not taken as my views only. I shall be glad if they are taken as representative views of all those who are not from Hindutva group.

  ஜெயமோகன், // ருத்ரா காவ்யா என்றெல்லாம் பலவேசமாகி வரும் அண்ணன் இணைய வடிவேலு பேராசிரியர் பரமசிவம் அவர்களுக்கு ஜே… // இந்த மாதிரி சின்னதாக hint கொடுத்தால் என்னை மாதிரி ஆட்களுக்கு எப்படி சார் புரியும்

  In writing in blogs, internets, I am very happy to deceive people. When will they just read the views for comments, instead the persons who wrote them If the views are written unanimously, they will just read them, dont they? I think the wild goose chase may have give some thrills to them. If so, good. It is a pity a person who is called as an eminent writer in modern Tamil scene descends to rummage the bio data of the commenter, cleverly side stepping the comments themselves. I could never know why people do that !

  Like

 6. RV ரொம்ப சுலபாமாக நீங்கள் புரிந்து கொள்ள – பல தளங்களில் கட்டுரைகளின் போக்கை தனது பின்னூட்டக் கட்டுரைகளால் மாற்றியதால் எதிர்வினையாற்றியே ஓய்ந்து விட்டவர்களால் தாங்கமாட்டது மட்டறுக்கப்பட்டதால் காவ்யாவாகி விட்ட திருவாளர் ஜோ .

  இதற்கு ஒரு பக்க பின்னூட்டக் கட்டுரை காத்திருக்கிறது. உங்கள் பொறுமைக்கு பாராட்டுக்கள்

  Like

 7. வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

  Like

 8. Views, not the viewer, is of paramount importance;
  and comments on the views will enliven the debate in any blog,
  least of all in this blog which is well known for worthy debates; and, alas!
  comments on the commenter will drag the blog into the pit of petty mindedness.

  Virutcham, these are my further comments in Just 5 sprung lines but 1 sentence only. :- p

  Like

 9. கருத்துக்கள் தான் முக்கியம். கருத்தை சொல்பவர்கள் கருத்தின் மேல் சவாரி செய்யும் போது தான் கருத்து சொல்வது யார் என்று பார்க்கப்படுகிறது.
  பெயர் மாற்றங்கள் செய்தாலும் குறிப்பிட்ட கருத்துகளின் மேலேயே
  பயணம் செய்வதால் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது.

  மொழியில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  Like

 10. \\\\\Vee.Saa’s essays are loaded in favour of Brahmins.\\\\\\\

  Before reading his articles of Sh.ve.sa in tamilhindu I did not know ve.sa nor am I knowledgeable enough about tamizh literature or about the field of literature criticism. I have read a series of articles of Sh.ve.sa in tamilhindu under the series given in the link,http://www.tamilhindu.com/2011/02/dalits-and-tamil-literature-7-final-part/. This series to some extent disproves the ill formed opinion of the commentator unless commentator surfs through the vast articles of Sh.ve.sa and properly substantiate his pet theory.

  \\\\\\\Although he may not indeed practise Brahminism – how many can?\\\\\\\\ I am really perplexed as to how could this be an opinion. Is that an ill intended passing comment.

  Like

 11. ஆர்.வி.சார்,
  மிக்க நன்றி.கூகை நாவலுக்கு விமர்சனம் ஏதாவது வந்திருக்கிறதா என்று தேடி
  அலைந்துமொண்டிருந்தேன் . ஜெயமோகன், காலச்சுவடு கண்ணன் ஆகியோரிடம்
  கேட்டும் பதில் கிடைக்கவில்.லை சரி, வேண்டுமென்றே புறக்கணிக்கப் பட்ட நாவல்
  போலும் என்று எண்ணினேன். உங்கள் மூலம் தற்போது அறிந்து கொண்டேன்மீண்டும் நன்றி .வெ..சா நேர்மையை விதந்தோத்தும் நீங்களே அவரை
  பிராமணச்சார்பாளர் என்று கூறுகிறீர்கள். வேறுநேர்மையான விமர்சகர்கள் தைரி
  யமாக முன்வராதநிலையில் அவர் தகுந்த முறையில் ஆதாரபூர்வமாக உரிய
  முறையில் வாதாடுவது தவறா? பின் யார்தான் பூனைக்கு மணிகட்டுவது?
  காதைத்துளைக்கும் ஜால்ரா கூச்சலுக்கிடையில் இவராவது தைரியமாக்கஃ குரல்
  கொடுக்கிறாரே என்று ஆறுதலாக இருந்த்து. அதற்கும் எதிர்ப்பா? கடவுளே!.

  Like

 12. ஜடாயு, வெ.சா. பற்றிய சுட்டிகளுக்கு நன்றி, அவற்றையும் பதிவில் இணைத்திருக்கிறேன்.

  விருட்சம், ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து. எப்படி இருக்கிறீர்கள்? ஜோ அமலனை அடையாளம் காட்டியதற்கு நன்றி!

  க்ருஷ்ணகுமார், அந்த சீரிஸின் சில பகுதிகளோடு எனக்கு கடுமையான கருத்து வேறுபாடு உண்டு. அதை தமிழ் ஹிந்து தளத்திலும் பதித்திருக்கிறேன்.

  காவ்யா (அல்லது ஜோ அமலன் அல்லது ருத்ரா அல்லது பேராசிரியர் பரமசிவம்), எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் பேரை மாற்றி மாற்றி பின்னூட்டம் எழுதுவதின் நோக்கம் என்ன? எதற்காக உங்கள் அடையாளத்தை மறைக்க முயற்சி செய்ய வேண்டும்? நீங்கள் இரண்டு வரி எழுதினாலே யார் என்று புரிந்து கொள்கிறார்கள், இதில் பேரை மறைத்தால் எல்லாரும் படிப்பார்கள் என்பதெல்லாம் பித்துக்குளித்தனமாக இருக்கிறது.
  வெ.சா.வின் வயதை யாரும் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதை நான் இது வரை பார்த்ததில்லை. என்னவோ நீங்கள்தான் புதிதாகச் சொல்லுகிறீர்கள். மெய்ப்பொருள் காண்பதுதான் உங்கள் அணுகுமுறை என்றால் எதற்காக அவரது வயதைப் பற்றிப் பேசுகிறீர்கள்? // he will be described as one who staunchily supported the Brahmin cause through all his writings // என்றும் சொல்கிறீர்கள், வெ.சா.வின் // essays are loaded in favour of Brahmins // என்று நீங்கள் புரிந்து கொண்டதை நான் கடுமையாக மறுப்பதையும் ஆமோதிக்கிறீர்கள். என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

  துரைசாமி, நீங்கள் தேடியது கிடைத்ததைப் பற்றி மகிழ்ச்சி! // பிராமணச்சார்பாளர் என்று கூறுகிறீர்கள் // காவ்யாவுக்கு எழுதிய மறுமொழியிலிருந்து: “இப்படி நான் சொல்லவில்லை. தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். திராவிட இயக்கம் என்பது பிராமண எதிர்ப்பு மட்டுமே என்ற கருத்தை அவர் அழுத்தமாக சொல்ல விரும்புகிறார், அதனால் சில விமர்சனங்கள் குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடுகின்றன என்றுதான் சொல்லி இருக்கிறேன்.”

  தனபாலன், சேவை எல்லாம் ஒன்றுமில்லை. எனக்குப் பிடித்ததை எழுதுகிறேன், அவ்வளவுதான்.

  Like

 13. ஆர்.வி,
  நீங்கள் கூறுவது ஒரு விததஃதில் சரிதான்.. தேவையற்ற வற்றிற்கெல்லாம்
  எதிர்வினையாற்றினால், சொல்லவந்த கருத்துக்களின் கூர் மழுங்கி வேறு
  விவாததஃதில்கொண்டுவிடுகிறது. நன்றி

  Like

 14. வெ.சா தொடர்ந்து எழுதும் சொல்வனத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட வரவில்லையே? அதில் அவருடைய விரிவான நேர்காணல் வந்திருக்கிறது. ஆர்.வியின் நண்பர் திருமலைராஜன் வெ.சாவைப் பற்றி எழுதிய விரிவான இரண்டு பகுதிகள் கட்டுரை கூட சொல்வனத்தில் வந்திருக்கிறது. இருந்தும் ஏனிந்த முகம் திருப்பல்?

  Like

  1. ராமசுப்ரமணியன், நீங்களோ, ராஜனோ சுட்டி கொடுத்தால் இணைக்க என்ன தடை?
   க்ருஷ்ணகுமார், வெ.சா.வின் நேர்மையில் எனக்கு துளிக் கூட சந்தேகமில்லை. ஆனால் அவர் (தன் மனதுக்கு நேர்மையாக) திராவிட இயக்கம் = பிராமண எதிர்ப்பு என்ற நிலை எடுத்திருப்பது அவரது எல்லைகளை குறுக்கிவிட்டது என்றே கருதுகிறேன். சமீபத்தில் கூகை படித்தபோது இந்த எண்ணம் மேலும் வலுப்படுகிறது.

   Like

 15. \\\\\\\\\க்ருஷ்ணகுமார், அந்த சீரிஸின் சில பகுதிகளோடு எனக்கு கடுமையான கருத்து வேறுபாடு உண்டு. அதை தமிழ் ஹிந்து தளத்திலும் பதித்திருக்கிறேன்.\\\\\\\ ஞாபகம் இருக்கு. அந்த தொடர் படித்ததற்குப்பின் தானே வெட்டுப்புலி கருப்பையா வ்யாசங்களெல்லாம் வந்தது. நான் வாசித்தவரை எனக்குப்புரிந்தபடி வெ.சாவை பக்ஷபாதி என ஆரோபிப்பது தவறு எனவே படுகிறது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.