பொருளடக்கத்திற்கு தாவுக

அய்யோ அய்யய்யோ! ஜேம்ஸ் பாட்டர்சன்+அஷ்வின் சாங்கி எழுதிய ‘Private India’

by மேல் நவம்பர் 30, 2016

ashwin_sanghijames_pattersonஜேம்ஸ் பாட்டர்சன் அமெரிக்காவில் மிகப் பிரபலமான, வெற்றிகரமான த்ரில்லர் எழுத்தாளர். போன வருஷம் மட்டும் தன் புத்தகங்கள் மூலம் 95 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறாராம். நான் இது வரை படித்ததில்லை, அது என்னவோ ரொம்ப கேனத்தனமாக இருக்கும் என்று ஒரு நினைப்பு. இத்தனைக்கும் நான் பொதுவாக த்ரில்லர்களை விரும்பிப் படிப்பவன். ஆனால் அஷ்வின் சாங்கி என்ற இந்திய த்ரில்லர் எழுத்தாளரோடு சேர்ந்து அவர் ஒரு நாவல் – Private India (2014) – எழுதி இருக்கிறார் என்று தெரிந்ததும் இதைப் படிக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை.

அய்யோ! அய்யய்யோ! அய்யய்யய்யோ! அய்யய்யய்யய்யோ! இதை விட கொடுமையான, அமெச்சூர்தனமான த்ரில்லர்களை நான் பதின்ம வயதில், ‘புதிய’ எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் முயற்சியில்தான் படித்திருக்கிறேன். ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் இதை விட நன்றாக எழுதுவார்கள். ஜேம்ஸ் பாட்டர்சன் எழுத்து மோசமாக இருக்கும் என்று யூகித்தது சரியாக இருக்கிறதே என்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இந்தப் பதிவை நான் எழுத ஒரே காரணம்தான். இந்தப் புத்தகம் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றதா? நன்றாக விற்கிறதா? இளைஞர்கள், இளைஞிகள் இதையெல்லாம் படிக்கிறார்களா? இந்திய நண்பர்கள் சாங்கியின் வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? ஏதாவது தேறுமா? இவர் ஜேம்ஸ் பாட்டர்சனால் கெட்டாரா, இல்லை இவரும் இப்படித்தானா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

From → Thrillers

5 பின்னூட்டங்கள்
 1. யாரோ எழுத்தாளர் பெயரை போட்டு விட்டு நம்ம இசையமைப்பாளர் இமான் படத்தை போட்டு இருக்கீங்கக

  Like

 2. pandian2015 permalink

  ஜேம்ஸ் பாட்டர்சன் ஒரு மோசமான எழுத்தாளர். அவர் ஒரு marketing person. அவர் பேர் போட்டு இருந்தாலும் அந்த புத்தகம் அவர் எழுதுவது இல்லை. Ghost author வைத்து எழுதுவார். காசு பண்ணுவது மட்டும் தான் அவர் குறிகோள். இதை படிக்கவும்.

  https://geeks.media/james-patterson-is-the-worst

  Like

Trackbacks & Pingbacks

 1. பில் க்ளிண்டன் எழுதிய த்ரில்லர் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: