Skip to content

வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாடமி விருது

by மேல் திசெம்பர் 21, 2016

Vannadasanவண்ணதாசன் தனது ‘ஒரு சிறு இசை‘ சிறுகதைத் தொகுப்புக்காக 2016க்கான சாஹித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தேர்வுக்குழு உறுப்பினர்கள் டி. செல்வராஜ், கே.எஸ். சுப்ரமணியம், எம். ராமலிங்கம் ஆகிய மூவருக்கும் தகுதி உள்ள எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்ததற்காக ஒரு ஜே!(டி. செல்வராஜ்தான் ‘தோல்‘ நாவலுக்காக சாஹித்ய அகாடமி விருதை வென்றவரா? ‘தேனீர்‘, ‘மலரும் சருகும்‘ நாவல்களை எழுதியவரா?)

Sahitya Academy Awardதென்னவோ தெரியவில்லை, விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டால் சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்துவிடும் போலிருக்கிறது! அடுத்த விருது தேவதேவன், தேவதச்சன் இருவரில் யாருக்கோ? (ஞானக்கூத்தன் மறைந்துவிட்டார், தெளிவத்தை ஜோசஃப் இலங்கைக்காரர், அவருக்கு கொடுப்பார்களா என்று தெரியவில்லை)

மற்ற மொழிகளிலிருந்து விருது வென்றவர்கள் ஒருவர் பேரைக் கூட எனக்குத் தெரியவில்லை. தெலுங்கு மொழிக் கவிஞரான பப்பிநேனி பாபிநேனி சிவசங்கரைப் (திருத்திய ராமச்சந்திர ஷர்மாவுக்கு நன்றி!) பற்றி கௌரி கிருபானந்தன் ஏதாவது சொன்னால் உண்டு.

யுவ புரஸ்கார் விருது லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பால் சாஹித்ய புரஸ்கார் விருது குழ. கதிரேசன் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. யாரென்று தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், வண்ணதாசன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
வண்ணதாசன் தளம்
‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்பு பற்றி பாவண்ணன்

Advertisements

From → Awards, Vannadasan

2 பின்னூட்டங்கள்
  1. G.Sundar permalink

    ஆம். இந்த டி.செல்வராஜ், “தோல்” நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது வென்றவர்தான்.

    Like

    • // இந்த டி.செல்வராஜ், “தோல்” நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது வென்றவர்தான். // உறுதி செய்ததற்கு நன்றி, சுந்தர்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: